Wednesday, April 7, 2021

PANIGRAHI

 




     அறியாத பெயர், அருமையான பாடல்  --  நங்கநல்லூர்  J K SIVAN -


பாணிக்ரஹி என்ற பெயர் கேட்டதாக, தெரிந்ததாக  ஞாபகம் இருக்கிறதா? தெரியாவிட்டால் பெரிய  குற்றம் இல்லை. குயிலின்  இசையைக் கேட்டு மகிழும் போது  குயில் கண்ணுக்கு தெரிகிறதா, அல்லது அதன் பெயர் தான் நமக்கு தெரிகிறதா? இசையில் மற்றதெல்லாம்  மறந்துவிடுவதில்லையா?  ஒரு அற்புத குரலோன் பாணிக்ராஹி.  அவர் பாடிய  ரெண்டு பாடல்களை சொன்னால் சட்டென்று ஞாபகம் வரும்.

 சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்து 1959-இல் வெளிவந்த “அவள் யார்” என்ற படத்தில்  சிவாஜிக்காக  பாடியவர் இவர்.  அந்த பிரபல  ரெண்டு   பாடல்கள்   ''நான்  தேடும் போது நீ ஓடலாமோ''    ''கண் காணும் மின்னல்தானோ'',   என்போன்ற  எத்தனையோ  ரசிகர்களைக் கொள்ளை கொண்ட பாடல்கள் இவை.  
கண்டசாலா, பிபி ஸ்ரீனிவாஸ்,  பாலமுரளி க்ரிஷ்ணாவோடு   ''மதி சாரதா'' என்ற  இன்னொரு கர்நாடக இசை பாடல்  தான் நான் இவரைக் கவரச் செய்தது.

பண்டிட்  ரகுநாத்  பாணிக்ரஹி  என்ற  ஒரிசாக்காரர்  81  வருஷங்கள் வாழ்ந்த ஒரு சங்கீத வித்வான். (1932 – 2013). அவருடைய  கீத கோவிந்த  ஜெயதேவர் அஷ்டபதி கீர்த்தனைகள் அபாரமானவை. கேட்க திகட்டாதவை.  ஒரு சினிமா பாட்டு இணைத்திருக்கிறேன் கேளுங்கள்

https://youtu.be/Mon9IcpxWBk

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...