Wednesday, April 7, 2021

SASTRIGAL RAMAYANA LECTURE

 


சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   5
நங்கநல்லூர்  J K SIVAN


ஸ்ரீ  V S  ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் அழகான  ஆங்கில பிரசங்கம்  ஒவ்வொருவரையும்  கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவரது நோக்கு.  எவ்வளவு அருமையாக  வால்மீகியை அவர் அணு அணுவாக ரசித்து மற்றவர் கண்ணுக்கு படாதவற்றை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.

பரதன் சும்மா வரவில்லை. நன்றாக யோசித்துவிட்டு  பரிக்ஷைக்கு போகும் மாணவன் மாதிரி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு தக்க பதிலை தயார் செயது கொண்டு போவது போல  ராமன் தன்னோடு வருவானா, மாட்டானா, அவனை  திரும்ப அழைத்து வர முயலாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன்.  

''சரி அண்ணா, தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன். நாட்டை என் பொறுப்பில் நடத்திவருகிறேன் ஆனால் அரசனாக அல்ல. உங்கள் சேவகனாக என்று சொல்லி  தனது பையிலிருந்து ஒரு தங்க பாதுகை  ஜோடியை எடுக்கிறான்.    ''அண்ணா  நீங்கள் இதை அணிந்து நில்லுங்கள் விழுந்து வணங்குகிறேன்''  என்கிறான். ராமனின் தெய்வீக சக்தி அந்த பாதுகையில் சேர்ந்ததால்  அவற்றை புனிதமாக  தனது சிரத்தின் மேல் தாங்கி நந்திக்ராம்  எடுத்து செல்கிறான். அங்கே  பாதுகைகளை  சிம்மாசனத்தில் அமர்த்தி  அவற்றிடம் ஆணை பெற்று நாடாள்வதாக அறிவுறுத்துகிறான். பதினான்கு வருஷங்கள் இப்படி நகர்ந்தது.

வாலி வாதத்தைப் பற்றி சொல்லும்போது, சுக்ரீவன் கேட்கும் முன்பே  ராமர்  தனது செயலைப் பற்றி விளக்குகிறார்.  வாலியை எனது அம்புகளால்  கொள்வேன் என்ற போது  ராமர் மனதில்  வாலியோடு மோதும்  அவனோடு போர் புரியும் வாய்ப்பு இருந்தது தெரிகிறது. பின்னர்   ஏழு மராமரங்களை  சுக்ரீவனுக்கெதிரே  ஒரே அம்பினால்  துளைத்தபோது  வாலியையும் ஒரே அம்பினால் சாய்ப்பேன் என்கிறார்.

நீ  போய்  வாலியை  யுத்தத்துக்கு அழைத்து வா. ஒரே அம்பினால் அவனைக் கொல்கிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்கிறார்.   வாலியோடு நேரடியாக மோதினால் அது பலநாள் யுத்தமாகும், சுக்ரீவன் நம்பிக்கை இழப்பான் என்று  ராமர் மனதில்  தோன்றி இருக்கலாம். முதலில்  வாலியை வீழ்த்தாமல் இரண்டமுறையாக  சுக்ரீவனை அனுப்பி அவனை மீண்டும் பொறுக்கழைத்து அப்போது  கொன்றதன் காரணம்?

சுக்ரீவா நீயும்  வாலியும் கட்டிபுரளும்போது யார் வாலி யார் சுக்ரீவன் என்று அடையாளம் காண முடிய வில்லை. இருவரும் ஒன்றேபோல் இருக்கிறீர்கள்  என்று சொன்னது மேல் பூச்சு.  வேறு ஏதோ காரணம் இருக்கும்  என்கிறார்  சாஸ்திரிகள். 
 
சீதை  பண்பின் சிகரம் .ராமாயண கதாநாயகி.   உதாரண ஸ்த்ரீ.  
ஹனுமானையும்  மற்ற  பாத்திரங்களையும் கூட  பற்றி சில வார்த்தைகள் சொல்கிறார். 
ராமாயணம்  எனும்  காவியம்  ஒரு  மேடை நாடகம் என்று வைத்துக் கொண்டால் கூட, நம்மை  நல்வழிப்படுத்த,   கதாநாயகன் ராமன், கதாநாயகி சீதை ஆகியோரின் உயர்குணங்களை கற்று பின்பற்ற வால்மீகி வகுத்த ஒரு அற்புத  வழி.   எத்தனைமுறை கேட்டாலும், படித்தாலும்  அலுக்காத சிரஞ்சீவி  இதிகாசம் ராமாயணம் எனலாம்.   அதில் நாமும்  ஒரு துளி பங்கு கொண்டவர்கள்.  ராமாயண பாத்திரங்கள் அனைவருமே தெய்வங்கள், தேவர்கள்,  நமக்கு படிப்பினை புகட்ட  அவர்கள்  நடித்துக் காட்டிய நாடகம் என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ராமாயண  காட்சிகளை  படித்து, கேட்டு, நெஞ்சுருகி கண்ணீர் வடிக்காதவர்கள் கிடையாது. இது காலம் காலமாக உண்மை.

இன்னும்  வளரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...