Friday, April 2, 2021

GOOD FRIDAY

 

இன்று நல் வெள்ளிக்கிழமை
நங்கநல்லூர் J K SIVAN

ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியை குழந்தை களை கேள்வி கேட்டாள் ?
''குட் ஃப்ரைடே எந்த நாளில் இந்த வருஷம் வருகிறது..?
நிறைய குழந்தைகள் ஞாயிறு முதல் சனி வரை சொல்லிக்கொண்டே போனது. ஃப்ரைடே என்றால் வெள்ளிக்கிழமை என்ற ஆங்கில அறிவு கூட இல்லாத ஆசிரியை, அவளிடம் பயிலும் மாணவிகள்...! ஹெட் மாஸ்டர் பெண் வியாழக் கிழமை என்று சொன்னது. HM பெண் என்பதால் அது சொன்னதே சரி என்று ஆசிரியை அதற்கு மார்க் 50 போட்டாள் .

''சிவன் மாமா, கிழமைகளில் எது புனித மானது?'' என்று சுப்புணி ஒரு தரம் கேட்டான்.
''சுப்புணி, எல்லா கிழமைகளும் புனிதமானது தான். நாம் ஹிந்துக்கள் ஒவ்வொரு கிழமை யும் ஒரு கிரகத்துக்கு என்று ஒதுக்கி வைப்ப வர்கள், அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அம்பாளை, தாயாரை வழிபடும் நாள். சுக்ரனுக்கு உகந்தநாள். வெள்ளி என்பது சுக்ர கிரஹம் .மற்றவர்களும் இதை வணங்கு கிறார்கள். புனிதமான வெள்ளி என்று.''
''ஓஹோ கிறிஸ்தவர்களை சொல்கிறீர்களா?''
'' ஆமாம் என்றோ வருஷத்தில் ஒருநாள் ஒரு வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளிக்கிழமை அவர்க ளுக்கு. GOOD FRIDAY. நமக்கு எல்லா வெள்ளி க் கிழமைகளும் நல்ல வெள்ளிக் கிழமைகள்''
''ஏன் மாமா அப்படி ?
''கால்வரி என்கிற இடத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று சிலுவை சுமக்க வைச்சு இயேசுவை கை கால்களில் ஆணி அடித்து முள் கிரீடம் தலையில் சுற்றி தொங்கவிட்டார்கள். அவர் மரணம் அடைந் தார். மூன்றாம் நாள் உயிர்ப்பி த்தெழுந்தார் என்று படித்திருக்கி றேன். கேள்விப்பட்டி ருக்கி றேன். அதை புனித நாளாக கொண்டாடுகி றார் கள். நமக்காக ஒருவர் தன்னுயிரை விட்டாரே என்று.''

இதை பல இடங்களில் கருப்பு வெள்ளி, பெரு வெள்ளி, புனித வெள்ளி என்றும் சொல்வதுண்டு. ஊருக்கு ஊர் மாறுபடும். Holy Friday, Great Friday, and Black Friday.

அது good friday இல்லை. god friday. நம் ஊரில் கோவில் கள் ஊர்கள் பேர் போல் அதுவும் நாளடைவில் god , good ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு தெரியாது.

பைபிளில் ஒரு சங்கதி. கெத்சமெனே என்கிற ஊர் தோட்டத்தில் இயேசு ஒளிந்திருந்தபோது அவரு டன் கூடவே இருக்கும் ஒருவன் இஸ்காரி யோத். முப்பது வெள்ளிக்கு ஆசைப்பட்டு இயேசுவைத் தேடிக்கொண்டிருந்த எதிரியான ராஜாவிடம் காட்டிக்கொடுத்து விடுகிறான். 'இயேசுவை நான் காட்டுகிறேன் வா'' என்று ராஜாவின் வீரர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றவன்
''எல்லோரும் தாடி மீசையோடு நீளமாக தொள தொள வென்று அங்கி அணிந்து கொண்டிருப் பார்கள். இதில் யார் ஏசு என்று திகைத்தார் கள் காவலர்கள்.
''நான் யாரை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறேனோ அவர் தான் இயேசு. அவரைப் பிடித்துக் கொண்டு போங்கள் ' என்றான் இஸ் காரி யோத்.
இயேசுவைப் பிடித்துக்கொண்டு போய் விசார ணை என்ற பேரில் தேச துரோகம், ராஜாவுக்கு வரி ஏய்ப்பு, தானே ராஜா என்று அறிவித்தது போன்ற குற்றங்கள் சுமத்தினார்கள். இயேசு பதிலே சொல்லவில்லை. இயேசுவை ரோமாபுரி கவர்னர் பிலேட் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் இயேசுவை குற்றவாளியாக கருதவில்லை. யூதர்களிடம் அபிப்ராயம் கேட்டு அவர்களும் குற்றம் நிரூபணம் இல்லை என்கிறார்கள். பிலேட் இயேசு கலிலீ என்றதால் ராஜா ஹெரோட் முன் கொண்டு நிறுத்தி அவனும் இயேசு குற்றவாளி இல்லை என்றான். சவுக்கடி கொடுத்து விடுதலை செய்யலாம் என்று பிலேட் எண்ணினான்.
இயேசு தன்னை கடவுளின் மைந்தன் என்று சொன்னது குற்றம் என்று அர்ச்சகர்கள் சொல்ல பிலேட் கலங்கினான். ஒருவேளை கடவுளின் மைந்தனாக இருந்தால்?? என்ன செய்வது என்று யோசித்தான். ஏசுவுக்கு எதிரானோர் கொந்தளிக் க வேறு வழியின்று பிலேட்
''நாசரேத்தை சேர்ந்த இயேசு, யூதர்களின் ராஜா'' என்ற வாசகத்தை சிலுவையில் செதுக்கி அதை யேசுவையே சுமக்க வைத்து கால்வரி என்ற இடத்துக்கு கொண்டு சென்றார்கள். மற்ற ரெண்டு சாதாரண குற்றவாளி களுக்கும் அன்று அதே தண்டனை. மூன்று சிலுவைகள்.
இயேசு சிலுவையில் ஆறு மணி நேரம் வேத னைப் பட்டதாக தெரிகிறது. கடைசி மூன்று மணி நேரம் உச்சிப் பகல் பொழுதிலிருந்து மாலை மூன்று மணிவரை எங்கும் இருள் சூழ்ந்தது. இயேசு சிலுவையிலிருந்து பேசின வார்த்தை
''இறைவா என் இறைவா, என்னை ஏன் கைவிட்டாய்?'' (PSALM 22 ).
இயேசுவின் மூச்சு நின்றது. பூமி நடுங்கியது. கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. சூரைக் காற்று. யூதர்களின் கோவில் ஆட்டம் கண்டு விழுந்தது. யூத மக்கள் ஓடி வருகிறார்கள் அவர்கள் வழி படும் ஆலய அர்ச்சகரை விட இயேசுவை நம்புகிறார்கள். சிலுவையில் மூவரையும் கண்காணிக்கும் காவலன் உரக்க கத்துகிறான்
''ஆம் உண்மையில் இயேசு தான் கடவுளின் மைந்தன்'. (Matthew 27:45–54)
இயேசு இறந்து போய்விட்டாரா என்று பிலேட் கேட்கிறான். காவலன் ஒரு ஈட்டியால் இயேசுவின் இடுப்பு பகுதியில் குத்தி ரத்தம் நிணம் வந்து விட்டது. இறந்தாகி விட்டது என்கிறான். (Mark 15:45).
நந்தவனம் போன்ற ஒரு மரங்கள் செடி கொடி கள் சூழ்ந்த இடத்தில் ஒரு மலை குகையில் ஒரு கல்லறை கட்டி அதில் இயேசுவின் உடல் வாசனை திரவியங்கள் சாற்றி புதிய துணியால் சுற்றி உள்ளே வைக்கப் படுகிறது. (Matthew 27:59–60)
ஒரு பெரிய பாறையை உருட்டி அந்த குகை யின் வாயில் மூடப்படுகிறது. சூரியன் அஸ்தம னமானான் (Matthew 27:60). (Luke 23:54–56). Matt. 28:1
ரெண்டு நாள் கழித்து விடியற்காலையில் மேரி மெகதலீன் வருகிறாள். வந்து அந்த குகை யைப் பார்க்கிறாள். உள்ளே எட்டிப்பார்த்தவள்
''யேசுவைக் காணோமே. எழுந்து போய் விட்டார் '' என்கிறாள். .(Matt. 28:6) அந்த ஞாயிறு தான் ஈஸ்டர் ஞாயிறு Easter Sunday (or Pascha),
சில கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அன்றைய உபவாசம் என்பது ஒரு முழு சாப்பாடு, ரெண்டு குட்டி பலகாரம். ரெண்டு பலகாரமும் சேர்ந்து ஒரு முழு சாப்பாடுக்கு ஈடாகக் கூடாது. மாமிசம் சேர்க்க கூடாது.
ஆகவே சில இடங்களில் இதை ''மீன் வெள்ளி'' (fish friday ) என்று மாமிசத்தை மட்டும் ஒதுக்கி 'ஜல புஷ்ப''த்தை சாப்பிடும் வழக்கம் உள்ளது.
1662ம் வருஷத்திய பொது பிரார்த்தனை புஸ்தகம் நல் வெள்ளிக்கிழமை என்ன செய்யவேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆகவே உள்ளூர் வழக்கம் என்ன வென்றால் அன்று சிலுவையிலிருந்து சொன்ன கடைசி 7 வார்த்தைகள் அப்புறம் மூன்று மணி நேர பிரார்த்தனை என பழக்கப்படுத்திவிட்டது.
மாண்டி வியாழன், நல் வெள்ளி, புனித சனிக் கிழமை என்று வரிசையாக கொண்டாடும் பழக்கமும் உண்டு. இதெல்லாம் ஈஸ்டர் பிரார்த் தனைக்குட்பட்டது. மெழுகுவர்த்திகள் நிறைய எரியும். சில கிறிஸ்துவர்களுக்கு அன்று உப வாசம். ஒரு தடவை மட்டும் சிம்பிளாக மாமிசம் இல்லாமல் சாப்பிடலாம் என்று சாஸ்திரம். சில ப்ரோட்டஸ்டண்ட்கள் அன்று விசேஷ பிரார்த் தனை ஜெபங்கள் செய்வார்கள். நல் வெள்ளிக் கிழமை ஒரு விடுமுறை நாள்.
ஒரு முறை என் நண்பன் கோபு '' குட் ஃப்ரைடே என்னிக்கு வரது? சனி ஞாயிறோடு ஒட்டி வந்தா எங்கேயாவது ஊருக்கு போகலாமே' என்றபோது அவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வில்லை. நமது தேசத்தில் அன்று விடுமுறை.
மலேசியா முஸ்லீம் நாடு என்றாலும் நல்ல வெள்ளிக்கிழமை அன்று விடுமுறையை கூடுதல் சந்தோஷத்தோடு அனுபவிக்கி றார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தீவிர ஏசு பக்தர்கள் தாங்களும் சிலுவையில் அறைந்து கொள்கி றார்கள். கை கால்களில் ஆணி. சவுக்கடிகள். . இதற்கு மேல் என்னால் எழுத கை நடுங்குகிறது. அங்கே மத்தியானம் மூணு மணிக்கு தான் ஹோட்டல்கள், கடைகள் திறக்கும். அப்போது தான் இயேசுவை சிலுவையில் அறைந்த நேர மாம். பாதிரிகள் மற்றும் பக்தர்கள் சிலுவை சுமந்து செல் வார்கள். சிலுவையை நல்லடக்கம் செய்வார் கள். பிரார்த்தனை நடக்கும். மௌன ஊர்வலம்.
பிரிட்டன் ஆஸ்திரேலியாவில் சுட சுட சிலுவை ரொட்டி (hot cross buns ) சுட்டு தின்பார்கள்.
உலகளவில் ஈடுபடும் பங்கு சந்தை , வங்கிகள், எல்லாமே நல் வெள்ளிக்கிழமை விடுமுறை அனுஷ்டிக்கும்.


ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நல் வெள்ளிக்கிழமை என கொண்டாடுகிறார்கள். இதை ஒவ்வொரு நாடுகளில் என்னென்னமோ விதமாக கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது. நல் வெள்ளிக்கிழமை வெவ்வேறு தேதிகளில் வந்தா லும் வெள்ளிக்கிழமை தான் வரும். அதில் சந்தேகம் கோபுவைப் போல இருக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...