Monday, April 12, 2021

PANCHANGAM

 பஞ்சாங்கம்.   --  நங்கநல்லூர்  J.K. SIVAN


 நமது  பாரத தேசம் முழுதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  பஞ்சாங்கம் பயன்படுத்துபவர்கள்  இருக்கிறார்கள்.  கை  தேர்ந்த  சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர் விரும்பும் பஞ்சாங்கங் களை பாரம்பரியமாக  வாங்கி  அவ்வப்போது  அதன்படி  நடப்பார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பது  ரொம்ப கஷ்டம். என்னைப்போல் எதையாவது எழுதுவதல்ல.  துல்லியமாக கனக்குப் போடவேண்டும்.   சூக்ஷ்மமாக  கவனமாக  கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று,  நேரம், பிரயாணம், குறிப்பிட்ட  காலம், சூரிய உதயம்,  அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்கூட்டியே  சரியாக கணக்கில் கொண்டு வரும்  கணித நூல் பஞ்சாங்கம்.  இருபது முப்பது ரூபாய்க்கு வாங்கி  மூலையில் போடுபவன் இதன் மஹிமை அறியமாட்டான்.

பல ரிஷிகள் ஆராய்ந்து வகுத்த வழிமுறையில் தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கும் அற்புத படைப்பு பஞ்சாங்கம்.    விஸ்வ  விஜய பஞ்சாங்கம் என்பது நூறு  வருஷங்களுக்கு கணிக்கப்படுவது. இதில் சூரிய சித்தாந்தம், கிரஹ லாகவ கணக்குகள் உண்டு. புரியாத நமக்கு தலை சுற்றும் கணக்குகள். அதற்குள் போகவேண்டாம். திரும்பி வர வழி தெரியாது.

ஹிந்துக்கள்  அநேகருக்கு  சந்திரனின் அசைவு  நமது பஞ்சாங்கத்தில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா கிரஹங்களையும் விட சந்திரன் ஒருவனே வேகமாக சுழல்பவன்.  எனவே   பஞ்சாங்கத்தின் திதி, நக்ஷத்ரம், ராசி, யோகம், கரணம், ஆகியவை சந்திரனின் சுழற்சியை அடிப்படியாக கொண்டவை.   WE   FOLLOW LUNAR CALANDER  என்கிறோம்.  

''பஞ்ச அங்கம்'' என்பதே  முன்பே சொன்னதை  திரும்ப சொல்கிறேன்.  சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திர) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிக  முக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவி  வட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வான  சாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும். ஜோசியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது. பிழைப்புக்கே  ஆதாரமான  டிக்ஷனரி  DICTIONARY.

  மூன்று முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கிறார்கள்.   சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திருக்கணித சித்தாந்தம் .  ஒருகாலத்தில்  18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் ,  கணிதமுறைகள் இருந்தன . மெதுவாக மறைந்தன.   அநேகர் பின்பற்றுவது திருக்கணித பஞ்சாங்கம்.

இப்போது  டெலஸ்கோப் உபயோகித்து  கிரகநிலையை மிக துல்லியமாக கணித்து  சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கி, திருத்தி,  (Ephemeride Lunaire Parisienne)  தகவல்கள் திரட்டி,  வானியல் துறை  புள்ளிவிபரங்கள் பிரகாரம் தயாரிப்பது திருக்கணித பஞ்சாங்கம். அடேயப்பா  நமக்கு  ஒரு ராகுகாலம்  எமகண்டம்  தெரிந்துகொள்ள  அவர்கள்  இவ்வளவு வேலை செய்யவேண்டுமா?

இஸ்ரோ , நாஸா  விவரங்கள், வானியல் தகவல்களின்  அடிப்படையில்  கிடைக்கும்  துல்லியமான தகவல்கள் அனுசரித்து  திருக்கணிதமுறை பஞ்சாங்கம்  கணிக்கிறார்கள்.   நாம் தாராளமாக நம்பலாம்.  

இந்திய அரசின் வான் நிலையியல் துறையின்  கீழ் இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது இங்கிருந்து பெறப்படும் தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திருக்கணித பஞ்சாங்கம் கணிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையினரும் லஹரி அயனாம்ஸ நிலைக்கொண்டு ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.  மங்களாயன்,  சந்திராயன் விண்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றேயாகும்!

திருக்கணித முறையில் அயனம் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷத்ரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது.  இந்திய விண்வெளித்துறை மற்றும் நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் திருக்கணித அமாவாசை முடிவு நேரமும் ஒன்றாக இருக்கும்.  இது கிரகணத்தின் பொழுது கண்ணுக்கு நன்றாக தெரியும் வானியல் நிகழ்வு.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நூறாண்டுகளாக திருக் கணித முறையே பின்பற்றப்படுகிறது. பிறந்த ஜாதகம் கணிப்பதிலும் இவர்கள் திருக்கணித முறையை  மட்டுமே கடைப்  பிடிக்கிறார்கள்.

திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். (இது போன்ற எந்த வித ஏற்பாடும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் இல்லை 400 வருடங்களாக வாக்கியத்தில் திருத்தமே இல்லை !)

ஆராய்ச்சியாளர்களால்  அங்கீகரிக்கப்பட்டு கணிக்கப்பட்ட  லஹரி அயனாம்சத்தின்  அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது எனலாம்.  லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகளால்  ஆமோதிக்கப்பட்டது. சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு  என்பதால் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது நியாயமே.  மேலும் அயனம்  என்பது குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை  ஏற்போம்.  விவரமாக அதற்குள் நாம் போகவேண்டாம்.

இப்போதைய நிலையில் நமக்கு தேவையானது  அமாவாசை தர்ப்பண நாட்கள்,மந்திரங்கள், ஸ்ராத்த திதி, கிரஹண, மஹாளய தர்ப்பண கால நேரம், மந்த்ரங்கள், தவிர சுப முஹூர்த்தங்கள், கல்யாண காரியங் களுக்கு நல்ல நாட்கள், பண்டிகைகள், ஜாதகத்திற்கு  தேவையான விபரங்கள்,  யஜுர் உபா கர்மா, சாம, ரிக், யஜுர் வேத வேதங்களுக்கு ஏற்ப. போனஸாக இவர்கள் பஞ்சாங்கத்தில் சில பூஜா அஷ்டோத்ர, நாமாவளி ஸ்லோகங்களும் இருக்கிறதே.  போதாதற்கு  தேவைப்பட்டால் அபர  காரிய விபரங்களும் நிறைய இருக்கி  குடும்ப வாத்யாரைத் தேடி ஓடவேண்டாமே. எனது நண்பர் திரு வேதிக் ரவியும்  ஸ்ரீ புவனேஸ்வரி   சாரிடபிள்  டிரஸ்ட்  நிறுவனம்  நண்பர்களுடன்  அற்புதமாக  இலவச பஞ்சாங்கம்  சகல விஷயங்களுடன் வருஷா வருஷம் அளிக்கிறார்கள். வீட்டில்  ஹோமம் செய்ய, பூஜைகள் நடைபெற,  சாப்பாடு  விஷயங்கள்,    இலவச  சமஷ்டி  உபநயனம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்  எல்லாம்  நன்கொடை பெற்று  அற்புதமாக நடத்துகிறார்.  அவரை அணுக Vedic RaviSri Bhuvaneswari Vedic Center,Marthy Nagar, Rajakilpakkam,ChennaiTamilNadu,India600 073+91-044 - 2227 2645,+91 98407 87957
     
நாம்  ஜப்பானியர் போல் உழைப்போம்.  அனைவரும்  ஒற்றுமையாக இருப்போம்.   ஜாதி மத வித்யாசம் வேண்டாம்.  நாமெல்லாரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள்,  வளர்ந்தவர்கள் மறைபவர்கள் என்று எண்ணம் இருந்தால் போதும்.  நம்மைப்  பிரித்து அதன் மூலம்  ஆதாயம் தேடுபவர்களை  தீய சக்திகளை   அடையாளம் கண்டு  அவர்களை ஒதுக்குவோம்.   அவர்களுக்கு சாஸ்திர சம்பிரதாய  நெறிமுறைகள் பிடிக்காது, தெரியாது, அதனால்  நம்பிக்கை இல்லை.  உழைப்பவர்களை  உண்மையானவர்களை  நமது பிரதிநிதி களாக ஆக்குவோம்.     நம்மை வைத்து  சம்பாதித்து தம் குடும்ப முன்னேற்றஅடையும்  கூட்டம் நமக்கு வேண்டாமே.   நாம் முயன்றால் வேண்டியதைப்   பெறலாம்.  முயற்சி திருவினையாக்குமே .   என்றும்  ''தெய்வம் துணை நமக்கு  பாப்பா''   பாரதி சொன்னது போல்  இறைவன் துணையிருப்பான். நமது நம்பிக்கையில்  அஸ்திவாரம் அவனாகவே  இருப்பான். அப்புறம் எல்லாமே நல்ல நாள் தான் நமக்கு. பொழுது போகாதபோது  அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்கார் வாரிசு ஐயங்காரின்  கணிப்பு  எல்லாம் படிப்போம். தெரியாத விஷயங்கள் அனைத்தும்  அறிவோம்.  மனதார வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...