Friday, April 9, 2021

pesum deivam

 


பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 


          ''  இந்தாங்க  ஸ்தபதி பாக்கி...''


தமிழக  புண்ய ஸ்தலங்கள்  பெயர்களை நினைக்கும்போது  கண் முன் நிற்பது  காஞ்சிபுரம்.  காஞ்சிபுரம் என்றாலே  உடனே  நினைப்பது சங்கரமடம்.  அதிலிருந்து உலகெங்கும் ஆன்ம ஒளி வீசிய  மஹா பெரியவா பேசும் தெய்வமாக எத்தனையோ  கோடி  பக்தர்களின்  மனதில் என்றும் இருந்து அருள்புரிந்து வருகிறார்.


மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் எல்லா பக்தர்களுக்கும் கிட்ட முடியுமா.  அந்த பாக்யம் ஒரு சிலருக்கு கிடைத்தது.  அவர்களில் ஒருவர்  எப்போதும் மஹா பெரியவா அருகிலேயே இருந்து  அவருக்கு  சிரத்தையாக பணிவிடை புரிந்த  காஞ்சி சங்கரமடத்து வாத்தியார்   மேச்சேரி பட்டு ஸாஸ்த்ரிகள் . 
வேதோபநிஷத், புராணங்களை  நன்றாக  படித்து  அறிந்தவர்   மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மஹா பெரியவாளை  நிதர்சன தெய்வமாக போற்றி வணங்கியவர்.  

மஹா பெரியவா காலத்திலேயே  அவரது  ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். மஹா பெரியவா  இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார்.   சாஸ்திரிகள் இல்லத்தில்   பெரியவா  பாதுகைகளை  வைத்து   மாசாமாசம்  அனுஷ நட்சத்திர உற்ஸவம்  ஜம்மென்று நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம்   இடவசதிக்காக மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். 

ஆரம்பத்தில்  சொந்த செலவில், இந்த வைபவத்தை  பட்டு ஸாஸ்த்ரிகள் நடத்தினார்.  போகப்போக  மஹா பெரியவா பக்தர்கள்  உதவியுடன்  இந்த   சேவை  இன்றும் தொடர்கிறது.  

2001-ஆம் வருட மகா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றபோது  நடந்த ஒரு 
சம்பவம்.

சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்…சுவாமிநாதன்) என்ற  ஒரு  பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ”மகா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்” என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்த   பட்டு சாஸ்திரிகள்  ஸ்வாமிநாதனை கௌரவிக்க  ‘சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்’ என மைக்கில் அறிவித்தார்.  ஆனால், சுவாமிநாதன்   மேடைக்கு வரவே இல்லை. 

இதை அடுத்து    சில நாட்களில்   அநேக  பக்தர்கள் வீடுகளிலிருந்து    செம்பு பித்தளை, வெண்கலம், வெள்ளி என்று   நிறைய  பழைய பாத்திரங்கள்  பட்டு சாஸ்திரிகள் வசம்  சேர்ந்தது.  பஞ்சலோக  விக்ரஹம்  வடிக்க  த் தேவையான உலோகங்கள்  சேர்ந்தது.  சுவாமி  மலையில்  ஒரு  ஸ்தபதியிடம்   இவற்றை உருக்கி  விக்ரகம் செய்ய  ஒப்படைத்தார்.  


 பெரியவாளின்   வைகாசி  மகா ஜயந்தி நாள் நெருங்கும்  சமயம்  மஹா  பெரியவா விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்து விட்டார் சுவாமிமலை  ஸ்தபதி.   சந்தோஷம்  நிறைந்திருக்க வேண்டிய  சாஸ்திரிகள்   மனதில் கவலை புகுந்தது.  ஏன்?

அட்வான்ஸ்  கொடுத்தது போக இப்போது  பாக்கி ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர  எங்கே போவது?
 ”இப்ப உங்களுக்கு கொடுக்க  என்கிட்டே  பணம் இல்லையே…” என்றார். 
”பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!” என்றார் ஸ்தபதி. 

மேற்கு மாம்பலத்தில் ஸ்தபதியை  ஸாஸ்த்ரிகள் பேசி  அனுப்பும் சமயம் காஞ்சியில் அப்போது என்ன நடந்தது?

தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதை  அறிந்து  பேசும் தெய்வம்  சும்மா இருக்குமா?
கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மகா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார்.   அவர் கனவில் மஹா பெரியவா:

‘ நீ  மேச்சேரி  சாஸ்திரிகள்  கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு''    சட்டென்று விழித்த கணேஷ்குமார்,  ஒரு கணம்  நம்பவில்லை.  மீண்டும்  உறக்கம் அவரை ஆட்கொண்டது.  அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார்.  ''என்னடா  தூங்கறே. என்று பெரியவா எழுப்புகிறாரோ?;;

விடிகாலை சீக்கிரமே  எழுந்த  கணேஷ்குமார் தான் கண்ட கனவு குறித்து யோசித்தவர், இது  அவசரமான விஷயம். இல்லையென்றால் பெரியவா கட்டளையிடுபவர்  இல்லையே என்று  உணர்ந்தவர். உடனே  சென்னையில் ஒரு உறவினரை டெலிபோனில்  கூப்பிட்டார்.   

''என்னப்பா  நடு ராத்திரி  கூப்பிடறே, என்ன உடம்பு ஏதாவது சரியில்லையா?  என்று உறவினர் பதைபதைக்க''
''இப்போ  அங்கே  ராத்ரின்னு  தெரியும்...  நீங்க  காலம்பற  எப்படியாவது  ஒரு   ஆறாயிரம் ரூபாய் திரட்டி  மேற்கு மாம்பலம்  நம்ம   பட்டு சாஸ்திரிகள்  வீட்டிலே   நான் பெரியவா உத்தரவுப்படி கொடுத்தேன்னு சொல்லுங்கோ ''

சென்னையில்  மறுநாள்  சாயந்திரம்   பட்டு சாஸ்திரிகள்  வீட்டு   கதவை யாரோ தட்ட  
வெளியே வந்து யார்  என்று கேட்டார் 

அவர் கையில்  ஒரு பையில்  ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மகா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்!
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மகா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும். கொடியேற்றத்துடன் துவங்கி, ஹோமங்கள், வேத பாராயணம், கச்சேரிகள், விக்கிரக ஊர்வலம் என்று அமர்க்களப்படும் விழாவில்… தினமும் 108 குடங்களில் திரவியங்கள் மற்றும் மலர்கள், விபூதி ஆகியவை சேகரித்து அபிஷேகம் செய்யப்படும். தவிர 1008 சங்காபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், பாதுகைக்கு 1008 வடைமாலை மற்றும் 1008 ஜாங்கிரி மாலை ஆகியவையும் சார்த்தப்படுகிறது.

”என் காலத்துக்குள்ளேயே மகா பெரியவாளுக்கு ஒரு கோயில் கட்டணும்னு ஆசை” என்கிற பட்டு சாஸ்திரிகள்  விருப்பம் நிறைவேறியது.  
 சாஸ்திரிகள்  மகன் சந்திரமௌலி   இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு    சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் இயங்கி வருகிறது.  விலாசம்:, 18/9, காமாட்சிபுரம் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033.போன்: (044) 2371 1971, 98844 9557  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...