Tuesday, April 20, 2021

SALAGRAMAM

 சாளக்ராமம் -   நங்கநல்லூர்   J  K  SIVAN


துளசி கதை.  

நேபாளத்தில்   கண்டகி நதியில்  கரையில், கிடைக்கும்  சாளக்ராம கற்கள்  மஹா விஷ்ணுவின்  அம்சம் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருந்தது  ஞாபகம் இருக்கலாம்.  இதோ இன்னொரு  சாளக்ராம கதை. 
இந்த  சாளக்ராமம் பற்றிய  ஒரு சின்ன  சுவாரஸ்யமான  கதை  ஏற்கனவே   நீங்கள் அறிந்ததாக இருந்தாலும்  இன்னொருமுறை படித்து மகிழ்வோம்.  தெரியாதவர்களுக்கு  இது  மேலும் சந்தோஷத்தை கொடுக்குமே . 
வடக்கே  கங்கை நதிக்கரையில் ஒரு  சின்ன பிரதேசம். அதற்கு ஒரு  நல்ல ராஜா.  விஷ்ணு பக்தன் அவன். அவனுக்கு ஒரே ஒரு ஆசை மகள்.  அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பல நாள் யோசித்து  விஷ்ணுவிற்கு  பிடித்த  துளசி  என்ற பெயரையே வைத்தான்.  பெண் வளர்ந்தாள் . தனக்கு  விஷ்ணுவிற்கு பிடித்த துளசி என்ற பெயர் இருக்கும் போது தன்னையே  விஷ்ணுவிற்கு பிடிக்குமே.  அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள் .
ஒரு   சின்ன  விஷயம்.  இந்த  துளசி  அவளது முந்தைய  பிறவியில்   பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுடன் விளையாடிய  ஒரு  கோபி  ஸ்த்ரீ.  துளசியிடம் மஹா விஷ்ணு நான் உனக்கு காட்சி தருகிறேன் என்று  சொல்லி ஒருநாள்  துளசி  அவருக்காக  காலையி லிருந்து காத்திருந்தாள். 
மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்றதால்  துளசிக்கு  வந்தது தன்னுடன் பேசியது, யாரோ ஒரு  முதிய பிராமணன் அல்ல, மஹா விஷ்ணு என்று தெரியவில்லை.   மனது ஒடிந்து போன  துளசி தற்கொலை செய்த்துக்கொள்ள தயாரானாள்.  அந்த நேரத்தில்  மஹாவிஷ்ணு அவளுக்கு தான்  யாரென்று காட்டிக் கொண் டா ர். துளசிக்கு மஹா விஷ்ணு இப்படி தன்னை ஏமாற்றியதில் அவர் மீது ரொம்ப கோபம். 
"என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல்.

உடனே மஹாவிஷ்ணு   சாளக்ராம மாக  மாறியதும்  துளசி  ரொம்ப  பதறிப் போனாள் துளசி.   ஐயோ என் தெய்வமே  ஆத்திரத்தில் இப்படி சபித்து விட்டேனே என்று கண்ணீர் உகுத்தாள் .   மஹா விஷ்ணு  புன்னகை புரிந்தவராக    ''அஞ்சாதே துளசி!   கலங்காதே,  எல்லாம் என் சித்தப் படியே  தான்   நடக்கிறது.   உனக்குத் தெரியாததை  ஞாபகப்படு த்து கிறேன்  கேள்.   நான்   கிருஷ்ண   அவதாரம் எடுத்த  பொது  பிருந்தாவனத்தில்  நீ ஒரு  கோபிகையாக இருந்தவள் .    என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம்  இருந்தவளும்  நீயே.

பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும்  நாடகங்களும்  நடந்தேறுகின்றன. 

 நீ  என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான்.    என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது.

இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய்.    என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறு கிறேன். 
     
நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா?
அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். என் பக்தர்களுக்கு கிடைப்பேன்.   அவைகளில்  நான் இருக்கிறேன் என்பதற்கு  ஆதாரமாக  அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும்.

சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள்.

நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போற்றி  வணங்கப்படுவாய். 

உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

இங்கே வர முடியாதவர்கள்   எத்தனையோ பக்தர்கள் இருப்பார்களே.   அவர்கள்   துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தத்தை பருகினாலும்  போதும். நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

"யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப் பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே நான்  எழுந்தருள்கிறேன்.  அந்த சாளகிரா மத்தில் நான் எப்போதும்  குடியிருப்பவன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது.

சாளகிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர் களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றை யும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன. தெரி



யுமா ?

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகி ராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரை கிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள்.
எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும்.  அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர்.  இவையும் பூஜைக்கு உகந்தவை.  இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...