Thursday, November 21, 2019

VISHNU SAHASRA NAMAM



விஷ்ணு ஸஹஸ்ர நாமம் J K SIVAN
ஆயிர நாமன் (122 - 137) பீஷ்மர் எதிரே நிற்கும் கிருஷ்ணன் சாக்ஷாத் மஹா விஷ்ணுவே தான் என்று அறிந்தவர். தனது நாமங்களை அவர் உச்சரித்து யுதிஷ்டிரனுக்கு உபதேசிப்பதை நேரில் இருந்து கேட்கிறார். பகவான் பக்தன் தனது நாமங்களை உச்சரிப்பதை நேரில் கேட்பது இந்த ஒரு சம்பவம் தான்.
122. மஹா தபா: தவசிகளில் சிறந்த மகா தவ யோகி 14. ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: | வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: 124. ஸர்வவித் பானு: எந்த நகையானாலும் அதை உருக்கினால் மிஞ்சுவது தங்கம் ஒன்றே. பேர் தானே வேறே. எவ்வளவு சிறிது பெரிது அலைகளானாலும் எல்லாமே கடல் தானே. எந்த ஆடையானாலும் அதை உருவாக்குவது பஞ்சு நூல் தானே. அது போல் தான் விஷ்ணு எங்கும் எதிலும். சர்வ ஞானம் கொண்ட ஞான ஒளி. 125. விஷ்வக்சேனா: காருண்ய மூர்த்தியானாலும் எதிரிகளை துவம்சம் செய்வதில் முதல்வர்
126. ஜனார்தனா: ஜனங்களுக்கு அவரவர்க்கேற்றபடி சுக துக்கங்களை அனுபவிக்க செய்பவர்.
127. வேதா: வேதங்களே உருவானவர் 128. வேதவித்: வேதநாயகன் விஷ்ணுவை அறியாமல் வேதங்களை அறியமுடியாது. 129. அவ்யங்கா: குறை ஒன்றுமில்லாத கோவிந்தன். 130. வேதாங்கா: வேதங்களையே தனது அவயவங்களாக, அங்கங்களாக கொண்டவர் 131. வேதவித்: வேதங்களின் ஆசானும் அவனே. வித்தும் அவனேதிரிகால தீர்க்கதரிசி விஷ்ணுவைத்தவிர வேறில்லை. 132: கவி: கவித்வம் கொண்டவர். கவிகளில் நான் உஸனஸ், சுக்ராச்சாரியார் என்று கீதையில் வருகிறதே. 15. 'லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: | சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15 133. லோகாத்யக்ஷ: சகலலோக அனுபவங்களையும் தனது ஆளுமையில் கொண்டவர்.
134. சுராத்தியக்ஷன்: சாக்ஷி பூதமாக செயல்படு பவர். தேவர்களுக்கு தலைவரானவர். துயர் தீர்ப்பவர். 135. தர்மாத்யக்ஷன்: எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரண சுத்தியாக தர்மம் தவறாமல் காரியங்களை செய்விக்க ஊக்குவிப்பவர். 136. க்ருதாக்ருதன்: செய்யும் காரியத்தையும், செயல்படாத, வெளிப்படாத நிலையில் இருக்கும் காரியத்தையும் காரணனாக இருந்து செய்விப்பவர். 137.சதுராத்மா: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றில் ஜீவனை செலுத்தி அவனுள் ஆத்மாவாக ஒளிர்பவர். முத்தொழில்களைத் தாண்டிய நான்காவது நிலையான துரியமாக தோன்றுபவர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...