Thursday, November 7, 2019

VISHNU SAHASRA NAMAM



ஸ்ரீ  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்    J K  SIVAN 

         
                                                                     ஆயிர நாமன்

தேனைக் காட்டிலும் இனிப்பாக  ஏதாவது ஒன்றை கூறமுடியுமா என்று யாரவது கேட்டால் கேள்வி கேட்டு முடிவதற்கு முன்பேயே சொல்லவேண்டிய பதில் ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமங்கள் என்று தாராளமாக பதில் சொல்லுங்கள்.  அதன் இனிமை தெரியாதவர்கள் அந்த ருசியை  அனுபவிக்காதவர்கள் இன்று  31 வது நாமம் முதல் 45 வரை மட்டும்.  துளித்துளியாக  தான் அம்ருதத்தை ருசிக்க வேண்டும். முடா குடி வேறு விதமான அற்ப  விஷயம்  சம்பந்தப்பட்டது..

31 சம்பவ: பிரபஞ்சத்தை தாங்கி நிறுத்துபவன். எதுவும் பிறக்க, தோன்ற ஆதாரமானவன்.

32. பாவனா: சாஸ்வத நிதி. பக்தர்கள் வேண்டியதை எல்லாம் வாரி அளவற்று வழங்கும் காருண்ய மூர்த்தி 

33. பர்த்தா : அகில புவனங்களையும் தோற்றுவித்து, ரக்ஷித்து காப்பவர். 

34. பிரபவா :  அவனே அவதாரங்களாக தோன்றுபவன்.

பஞ்ச பூதங்களை தன்னிலும்  ஐம்பெரும் பூதங்களில் தானும் தோற்றமளிப்பவன்.

35. பிரபு:   காணும் யாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்கும் ஈஸ்வரன். அகில லோக நாயகன்.

36. ஈஸ்வரன் : சர்வேஸ்வரன். ஹரி வம்சம் ''நான் தான் நாராயணன், என்னிலிருந்து தான் எல்லாமே தோன்றுகிறது'' என அவன் கூறுவதாக சொல்கிறது.

5. ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |

அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: ||

37. ஸ்வயம்பு:   தான் தோன்றி.  ஸ்வயம்புவானவன். 

38. சம்பூ:  சர்வ மங்களத்தையும் அளிப்பவன். 

39. ஆதித்ய:  அவனே சூரியனின் ஒளியான ஆதித்யன். பன்னிரண்டு ஆதித்யர்களில் விஷ்ணுவும் உண்டு.

40. புஷ்காராக்ஷோ : தாமரைக் கண்ணன்.

41. மஹாஸ்வனா:வேத சப்தமானவன். 

42. அநாதி நிதனா :  பிறப்பு இறப்பு அற்றவன். 

43. தாதா :  பிரபஞ்சத்தை நிலை நிறுத்துபவன். 

44. விதாதா:  கர்மாவின் பலனைத் தருபவன்.

45. தாதுருத்தமா:  பிரபஞ்சத்தில் தோன்றி இருக்கும் எதற்கும் ஆதாரமான சக்தி. எண்ணற்ற இச் சக்திகளில் உள் நின்று செயல்படுத்தும் அதி நுண்ணிய சக்தியை சித் தாது என்போம். அதுவே தாதுக்களில் உத்தமமானது. 


ஒரு விஷயம்  இந்த ஒவ்வொரு நாமம் பற்றியே  ஆயிரம் புஸ்தகங்கள் எழுத முடியும். அவ்வளவு ஸ்ரேஷ்டமானது. யார் படிப்பது?  இதை புரிந்து கொண்டு அதன் அர்த்தத்தை உள்  வாங்கி ரசிக்க முதலில் கற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...