Sunday, November 17, 2019

skst prograMs



அன்பு இதயங்களே
இன்றைய சத்சங்கத்தில் நாம் பேசப்போவது ரெண்டு விஷயங்கள் .
1. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் அன்றாடம் உங்களுக்கு ஆன்மீக செய்திகள், புராண, ஸ்தோத்ர,சரித்ர , ஆலய, வாழ்க்கைக்கான நல்லுரைகள் போன்ற விவரங்களை சுருக்கமாக தந்து கொண்டிருக்கிறது. 35+ஆங்கில தமிழ் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம் பிரதிகள் இருக்கிறது. எதற்கும் விலையில்லை . நன்கொடை பெற்று அதன்மூலம் கிடைப்பதில் மேற்கொண்டு புத்தகங்கள் பிரசுரித்து விநியோகிக்கிறோம். வீட்டில் விசேஷங்கள், பிறந்தநாட்கள், யாருக்காவது பரிசளிக்க, கோயில்களில் கொடுக்க உங்களுக்கு விருப்பமானால் அவற்றை குறைந்த நிர்ணயிக்கப்பட்ட நன்கொடை கொடுத்து பெற்று நீங்கள் உங்களது ஆத்ம திருப்திக்கு விநியோகிக்கலாமே. யார் எல்லாம் முன்வருவீர்கள். என்னை அணுகவும். ஜே கே சிவன் 9840279080 வாட்ஸாப் நம்பர்.
2. இதைத்தவிர நமது செயல்கள் என்னென்ன தெரியுமா?
ஆன்மீக ப்ரவசனங்கள், பேச்சுகள், குழந்தைகள்,பெண்கள், முதியோர்களுக்காக வினாடி வினா போட்டிகள், ஓவியம், பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துவது பரிசளிப்பது
வயதான முதியவர்களை நேரில் சென்று சந்திப்பது உரையாடி பரிசுகள் கொடுப்பது, முதியோரகம், குழந்தைகள், சிறுவரகம் எல்லாம் சென்று அவர்களோடு பேசி ஊக்கமளிப்பது, புத்தகங்களை பரிசளிப்பது, நூல் நிலையங்கள், மருத்துவ மனைகளில் உள்ளோர்க்கு ஆன்மீக புத்தகங்கள் தருவது போன்றவை.
இதற்கெல்லாம் உதவ நீங்களும் முன்வரவேண்டாமா. உங்கள் அருகாமையில் மேற்கண்ட நிகழ்வுகள் நடத்த உதவினால் நான் நேரில் வந்து நடத்திக் கொடுக்க மாட்டேனா.? ஏழை மாணவர்களுக்கு நாம் புத்தகங்கள், நோட்டுகள், பேனா , பென்சில், குடிநீர் பாட்டில்கள், பைகள், வாங்கித் தருவோமே?

கோசாலை சென்று அங்கே பசுக்களுக்கு நிறைய பழங்களை, கீரைகளை தருவோமே .

இதுவரை பார்த்திராத, பழம் பெரும் ஆலயங்களை சென்று தரிசிக்கலாம். பதினைந்து 20 பேருக்கு மேல் போகாமல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு காலை முதல் மாலைவரை செல்வோம். உணவு, நீர் கொண்டு செல்வோம். செலவை அவரவர் சரிசமமாக ஏற்றுக் கொள்வோம். எளிதில் இப்படி ஒரு சத்சங்கமாக நான் அழைத்து செல்கிறேன்.
எனக்கு நீங்கள் இந்த வகையில் ஏற்பாடுகள் செய்து தருவீர்களா?.

ஒவ்வொரு கணமும் நம் வாழ்வில் வீணாகிக் கொண்டிருப்பதால் அதை சிறந்த மனநிறைவை அளிக்கும் வகையில் செலவழிப்போமே... உங்களால் உதவ முடியுமா? முன்பு போல் என்னால் (81+) எங்கும் நினைத்தபடி சென்று ஏற்பாடுகள் செய்ய உடல் இடம் தரமாட்டேன் என்கிறது. அதனால் தான் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.
நன்றி ஜே கே சிவன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...