Thursday, November 28, 2019

THIRUK KOLOOR PEN PILLAI RAHASYAM

திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்
J K SIVAN

17 அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே ராமாயணத்தில் கபந்தன் என்ற ஒரு பாத்திரம். அவன் உடலில் வயிறும் வாயும் தான் பிரதானம். அவனுக்கு ரெண்டு நீண்ட கரங்கள். கால்கள் கிடையாது. ஆகவே இருந்த இடத்தில் இருந்து கொண்டு தனது கைகளுக்கு அகப்படும் எதையும் எவரையும் இழுத்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே விழுங்குவது அவன் வழக்கம் . நமது புராணங்களில் இதிகாசங்களில் இது போன்ற பாத்திரங்ளை எப்படி யோசித்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைத்தால் அவர்கள் கற்பனைத் திறன் நம்மை வியக்க வைக்கிற தல்லவா?

தண்டகாரண்ய இருண்ட காட்டில் வசித்தவன் கபந்தன். அழகான கந்தர்வன் தனு . தேவர்களை ரிஷிகளை, முனிவர்களை தனது கர்வத்தால் இடையூறுகள் செய்து கபந்தனாக காட்டில் இருக்க சபிக்கப்பட்டவன். தனது செயலுக்கு வருந்தி தேவேந்திரனிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோச்சனம் எப்போது என்று அறிந்து கொள்கிறான்.

"உனக்கு இரண்டு நீண்ட கைகள், வயிற்றில் வாய், அதில் பல். ஒரே ஒரு சிவப்பான கண் இவை தான் உண்டு. திரேதாயுகத்தில் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக வருவார். உன்னுடன் சண்டையிட்டு உன் கரங்களை வெட்டுவார். அப்போது தான் உன் சாபம் நீங்கும்.

கபந்தன் பல யுகங்கள் வனத்தில் கிடைத்தது உண்டு வாழ்ந்தான். வனவாசத்தில் ராமர் தண்டகாரண்யம் அடைகிறார். ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது தேடிக்கொண்டு வந்த ராம லக்ஷ்மணர்கள் கபந்தனின் நீண்ட கைகளில் மாட்டிக் கொள்கி றார்கள். அவர்களை யார் என்று அறியாமல் கபந்தன் அவர்களை கடித்து சாப்பிட முயற்சிக்கிறான். பாவம் அவன் ரெண்டு கரங்களும் ராம லக்ஷ்மணர்கள் அம்புகளால் துண்டிக்கப்படுகிறது. க்ஷ்மணனும் தங்களை விடுவித்துக் கொண்டனர். கைகள் இழந்த கபந்தன், உயிர் போகும் நிலையில் தன் உடலை எரிக்குமளரு அவர்களை கேட்டு க்கொள் கிறான். அவர்கள் அவன் வேண்டு கோளை நிறைவேற்ற அவனை எரித்த சாம்பலிலிருந்து ஒரு கந்தர்வன் எழுகிறான். ராமலக்ஷ்மணர்களை வணங்குகிறான். தனு எனும் கந்தர்வன் இவ்வாறு சாபம் நீங்கப்பெற்று விண்ணுலகம் ஏங்குகிறான்.

ஸ்ரீ ராமன் தான் நாராயணன் என்று தெரிகிறது. தனது சாப விமோசன விஷயம் நினைவுக்கு வருகிறது. ராமன் சீதையை தேடி செல்வதை அறிந்து கபந்தன் தான் முதலில் ''ஸ்ரீ ராமா, எனக்கு மோக்ஷம் நல்கியவனே, உனக்கு என்னாலான சிறு உதவி செய்கிறேன். இங்கிருந்து நேராக நீ ரிஷியமுக பர்வதம் எனும் மலைக்கு செல். அங்கே ஒரு வானர ராஜா இருக்கிறான். அவன் பெயர் சுக்ரீவன். அவனும் அவனுடைய வானர வீரர்களும் உனக்கு சீதா தேவியை மீட்க உதவி புரிவார்கள். சுக்ரீவனின் சிநேகிதம் உனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என அறிவுரை கூறி சுக்ரீவனின் அங்க அடையாளங்கள் சொல்கிறான். அதோடு ரிஷியமுக பர்வதத்துக்கு செல்லும் குறுக்குவழியும் அடையாளம் சொல்கிறான்.

ஸ்ரீ ராமானுஜருக்கு பதில் சொல்லும் திருக் கோளூர் பெண்மணி எங்கிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுகிறாள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஸ்ரீ ராமானுஜரே , என்னை ஏன் இந்த திருக்கோளூர் புண்ய திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாளின் அருள் பெற்று வசிக்காமல் வேறு எங்கோ செல்கிறாய் '' என்று கேள்வி கேட்டீர்களே, நான் என்ன கபந்தனைப் போல பகவானுக்கு ஏதாவது ஒரு சிறு கைங்கர்யமாகவாவது செய்தவளா? திருக்கோளூர் அம்மாள், "கபந்தனைப் போல் பகவானுக்கு நான் ஏதும் அடையாளம் காட்டியாவது உதவி புரிந்தேனா?", என்று வினவுகிறாள் . இன்னும் நிறைய இருக்கிறது நமக்கு அவளிடமிருந்து தெரிந்து கொள்ள.

1 comment:

  1. Sir
    Thank you for this wonderful write up
    Dasan Srinivasan

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...