Thursday, November 28, 2019

RAMA MAHARSHI


பகவான் ரமணர். J K SIVAN

மானை பாத்தீங்களா?

பகவான் ரமண மகரிஷி எப்போவாவது தனது கடந்த கால வாழ்க்கையை நினைவு கூறுவார்.
ரொம்ப கருத்துள்ள குட்டி கதைகள் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக சொல்வார். நிறையவே தெரியும் அவருக்கு.
ஒருசமயம் யாரிடமோ ''என் அத்தை வீட்டில் அப்பளம், வடாம் எல்லாம் இடுவாள் .அப்போதெல்லாம் என்னை கூப்பிட்டு முதலில் என் கையால் தொடச் சொல்வாள். என்னவோ அவளுக்கு ஒரு நம்பிக்கை. நான் அவள் சொல்படி கேட்பவன் எல்லாம் அவள் சொல்படியே செய்பவன், நடப்பவன், பொய் பேசமாட்டேன் என்று நம்பிக்கை. அவளிடம் சொல்லாமல் நான் செய்தது இங்கே வந்தது மட்டுமே.
உலக நன்மைக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும்போது, மற்றதெல்லாம் தேவையற்றதாகி விடுகிறது. வேறு வழியில்லை. இதில் பொய் என்ன நிஜமென்ன? ஏதோ ஒரு சக்தி உந்தி தள்ளுகிறது. ஏதோ ஒரு காரியம் அதற்கு தக்க ஒரு காரணம் என்று அமைகிறது. அவசியமில்லை என்றபோது சிலவற்றை செய்யாமல் இருப்பது உசிதம். அப்போது பொய் சொன்னாலும் தப்பில்லை. ஒரு ரிஷி இப்படி தான் பண்ணினார். சொல்கிறேன். இது யோக வாசிஷ்டத்தில் வரும் விஷயம்.
அருகில் இருந்த பக்தர்கள் ஆவலாக ரமண மகரிஷி சொல்லப்போகும் கதைக்கு உங்களைப்போல காதை தீட்டிக்கொண்டார்கள்.
ஒரு காட்டில் ஒரு ரிஷி ஆடாமல் அசையாமல் அமர்ந்து தவம் செயது கொண்டிருந்தார். கண் திறந்திருந்தது. அந்த காட்டில் ஒரு வேடன் ஒரு மானை பார்த்துவிட்டு அதை அம்பால் அடித்தான். உயிர் தப்பி அது ஓடிவிட்டது. அவன் துரத்தினான். வழியில் இந்த ரிஷியை பார்த்து விட்டு நின்றான். மான் அவர் அருகே ஓடிவந்து அருகில் உள்ள ஒரு புதரில் ஒளிந்து கொண்டிருந்தது. ரிஷி பார்த்து விட்டார். அது வேடன் கண்ணில் படவில்லை.

''சாமி என் மான் இந்த பக்கம் ஓடி வந்திச்சா, பார்த்தீங்களா, எந்த பக்கம் போச்சு?''

''எனக்கு தெரியாதே ''

''இன்னாங்க சாமி, இப்படித்தானே ஓடி வந்திச்சு. கண்ணு தொறந்து பார்த்துகிட்டே இருக்கீங்க. பாக்கல்லேங்கறீங்களே''

'' அப்பனே, இந்த பிரபஞ்சம் என்கிற காட்டில் நாம் எல்லாரும் ஒண்ணாக தான் இருக்கிறோம். + அஹங்காரம் இல்லை. அது இல்லை என்றால் உலகத்தில் ஒன்று செய்ய முடியாது. அந்த அஹங்காரம் தான் மனது. அது செய்யற வேலை தான் எல்லாம். ஐம்புலன்களையும் ஆட்டுவிப்பது. ஆட்டி வைப்பது. மனசை இல்லாமல் பண்ணிக்கொண்டால் ஒன்றுமே இல்லை. அப்போது மூன்று நிலை என்கிறோமே, விழிப்பு, தூக்கம், கனவு எதுவுமில்லை.

நான்காவது நிலை என்ற துரியம் எனும் ஆத்மாவுடன் ஒன்றிய நிலை மட்டும் தான் மிஞ்சும். அதுவே சதா ஆனந்தம். சித்தானந்தம். சித்தம் ஆனந்தம். சத் சிதானந்தம். நான் அந்த நிலையில் இருப்பவன், அதில் ஆட்டையோ, மாட்டையோ, உன் மானையோ எப்படி பார்க்கமுடியும்?

மானும் போச்சு, இந்த பைத்திக்கார சாமியார் பேச்சும் புரியல'' என்று தலையை சொரிந்து கொண்டு வேடன் வேறு பக்கம் போனான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...