Monday, November 25, 2019

ADVICE

என் இனிய அன்பர்களே,  

இன்று  ஒரு பொதுவான  விஷயம்  பற்றி சிந்திப்போம்.  இதை முடிந்தவரை  பின்பற்றுவோம்.  நாம் திருந்தினால், குடும்பம் திருந்தும், சமூகம் திருந்தும், கிராமம் நகரம் திருந்தும் நாடே திருந்தும்,  உலகத்தில் உயர்வோம் இல்லையா?

உலகில் மற்றவர்களுக்கு  எந்த விதத்திலும் இந்தியர்கள் சோடை போனவர்கள் இல்லை. சாமர்த்தியம், உழைப்பு, படிப்பு, பண்பாடு, நாகரிகம், ஆன்மீகம், கலைகள் , விவசாயம்,  விஞ்ஞானம் முதலான சாஸ்த்ரங்கள், ராஜரீகம், பக்தி,  பெரியோரை வணங்குதல்,  அதிதி உபச்சாரம், வீரம்  ..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..... இதில் பெரும்பாலும் நமக்கு முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து.  பெருமை.  

துரதிர்ஷ்ட வசமாக  நமக்கு இருக்கும்  ஒருசில  ''வேண்டாததுகள்''  நம்மை  பின்னடையச்  செய்கிறது.கெட்ட பெயர் சேர்க்கிறது:      உதாரணமாக 

*  தெருக்களில், சுவர்களில், கண்ட கண்ட இடத்தில் இன்னும் நம்மில் பலர்  '' தூ '' என்று வெற்றிலை பாக்கு, எச்சில் உமிழ்கிறோம். அங்கே இங்கே பார்த்துக்கொண்டு  சுவற்றிலோ தரையிலோ  கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கிறோம்..

*   படித்தோர்  பாமரர்  எல்லோருமே சாலையில்   சிவப்பு  ஆரஞ்சு எரியும்போது  வண்டி ஓட்டுகிறோம். சாலை விதிகளை மீறுகிறோம்.  ஒன் வே  ONEWAY  பிரயாணம். தொடர்கிறோம்.

* . குப்பைகளை தெருவில்  காலி  பிளாட்டுகளில், , பக்கத்து எதிர் வீட்டு வாசலில் கொட்டுகிறோம். 

*  பொது இடங்களில் வரிசையாக  ஒழுங்காக  நடப்பதோ  நிற்பதோ  கிடையாது.  இடித்துக்கொண்டு  முந்தி அடிக்கிறோம்..  

*  பொது இடங்களில்  கூட்டத்தில்  வயதானவர்கள் பெண்களுக்கு   ஏன்  மற்றவருக்கு விட்டு கொடுக்க  மனமில்லை.  மற்றவரை  மதிக்கும் பண்பு குறைந்து போய்விட்டது.  சுயநலம் தற்பெருமை தலை தூக்கிவிட்டது. இது அழிவைத் தரும்.

*  நமது ஜாதி  ஒஸ்தி, மீதி தாழ்ந்தது,   இன்னும்  சிலர் மனதில் இந்த  ''சிக்கன் குனியா'' இருக்கிறது. வேண்டாமே அது.

இப்போதைக்கு இது போதும்.    
ஜே.கே.சிவன் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...