Wednesday, November 20, 2019

SHEERDI BABA

மனிதருள் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா

ரெண்டு நாளில் ப்ரம்ம ஞானம்...

ஷீர்டியில் பாபாவை நிழலாக ஒரு சில பக்தர்கள் என்றும் எப்போதும் சூழ்ந்து இருப்பார்கள். தேனின் இனிமை, சுவையை, அறிந்த வண்டுகள். குறிப்பாக தாத , நானா, ஷாமா, அப்துல் பாபா, மஹல்ஸாபதி, சந்தோர்கர், தாஸ்கணு. ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.
ஷீர்டி பாபாவின் பக்தர் அப்துல் பாபா எப்போதும் எல்லோரிடத்திலும் கடவுளி டம் பக்தி செலுத்துவதில் மதம் கிடை யாது என்று சொல்லிக் கொண்டி ருப்பார் .
காகா தீக்ஷித் ஒரு நீதிபதியாக பணி புரிந்தவர். பாபா பக்தர். அவர் மகன் பிருந்தாவனத்தில் 20 வருஷங்கள் வசித்தார். தீக்ஷித்திடம் ஒரு அருமையா ன பழக்கம். நாட்குறிப்பு டயரி எழுதுவது. அவருடைய டயரியில் என்னென்னவோ விஷயங்களுக்கு இடையே நிறைய ஷீர்டி பாபா பற்றி தகவல்கள் உள்ளன. ஒரு சில சமயங்களில் பாபா தான் எப்போது இந்த உலகத்தை விட்டு மறைவேன் என்றெல்லாம் குறிப்புகள் தந்திருக்கிறார்.

மனிதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், மேல் கீழ் எல்லாம் கிடையாது. எல்லோருக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. அதில் தெய்வம் உறைகிறது. தெய்வீகம் என்பது ஆத்மாவை உணர்வது. ஒருவனின் வெளி வேஷம், உருவம் இதைப்பார்த்து விட்டு எடை போடும் பழக்கம் வழக்கமாகிவிட்டதால் அவனுள் இருக்கும் ஆத்மாவை மதிக்க நாம் மறந்து விடுகிறோம். இதனால் ஒவ்வொருவருக்குள்ளும் வித்யாசம் வளர்கிறது. உலகமே பஞ்சபூதங்களின் ஈடுபாடோடு புலனுணர்வுகளில் இணைந்து மனிதனை தறிகெட்டு திசைமாறி செல்ல வைக்கிறது. இதனிடமிருந்து விடுபட்டு எதனிடமும் சிக்காமல் TOTAL DETACHMENT ஆக இருப்பது தான் ஆன்மீக அனுபவம். ஆனந்தத்தை தருவது.'' இதெல்லாம் பாபா உணர்த்துவார். எத்தனை பேர் புரிந்து கொண்டவர்கள்?

தாமு, நானா இருவருமே ஷீர்டி பாபாவுக்கு தொண்டு செய்வதிலே பெரு மகிழ்ச்சி அடைந்தவர்கள்.

ஒருநாள் பாபா சில செப்புக்காசுகளை கையில் வைத்திருந்தார். ஒரு கையால் மேலே சில காசுகளை தூக்கிப்போட்டு இன்னொரு கையால் பிடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு காசையும் உற்றுப்பார்த்து, கையால் தடவி, நசுக்கி, முகர்ந்து, தரையில் தேய்த்து சோதித்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தாமு, நானா இருவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அரைமணி நேரத்திற்கு மேல் இந்த காசு பரிசோதனை செய்வது நடந்தது. .

ஒரு கட்டத்தில், நானா மெதுவாக ''பாபா இந்த காசுகளை எதற்காக இப்படியெல்லாம் சோதனை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

''என் மகனே, நான் எப்போதும் சில வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்கிறேன். செய்ததையே திருப்பி திருப்பி செய்கிறேன்.

எதிரே பார் மாமரம் பூத்து குலுங்குகிறது. இலையே தெரியவில்லை, எல்லாம் பூக்கள். அத்தனை பூக்களும் காய்களாக மாறினால் மரம் அவைகளின் கனத்தை தாங்குமா? ஆனால் அப்படி நடப்ப தில்லை. நிறைய பூக்கள் உதிர்ந்து விழுகிறது. சில பூக்களே காயாக, பழமாக மாறுகிறது. அந்த பழமும் பாதியில் அணிலால் பறவை களால் குரங்குகளால் கடித்து குதறப்பட்டு விழுகிறது. அது போல் தான், என்னிடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள், அவர்கள் தெய்வீகத்தில், பக்தியில் பழுத்தவர் களா? பாதியில் விடுபடுகிறவர்கள் அதிகம். தங்கள் ஆசையை, விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்ள என்னிடம் வருபவர்கள் சிலர். சிலர் பணம் வேண்டி என்னிடம் வருகிறார்கள். வேலை, உத்யோக உயர்வு, மாற்றம், கல்யாணம், வீடு கட்ட, என்னென்னவோ காரணம். ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கிறதே. எனக்காக என்னை தேடி வருபவர் யார்? கொடுப்பதற்கு அருமையான விஷயங்கள் என்னிடம் இருக்கிறதே. யாரும் அதை நாடவில்லையே?

அதனால் தான் இந்த காசுகளில் எது வளையாதது, நசுங்காதது, தேய்ந்து போகாதது, கீறல் விழாதது, காயம் படாதது, செல்லாதது, உடைந்தது என்று பார்க்கிறேன். பக்தர்கள் கொடுத்தவை தானே இவை. என்னிடம் வருபவர் களையும் சோதித்து பார்க்கிறேன். என்ன குறைகள் தெரிகிறது, அதோடு என்னை புரிந்து கொள்ளமுடியுமா? நான் வேண்டும். எதற்கு ? உலக ஆசைகளை அடைய. இப்படி எண்ணம் கொண்டவர்கள் என்னிடமிருந்து எதையும் பெறமுடியாது. தப்பான ரயிலில் ஏறிவிட்டால் ஊர் போய் சேர முடியுமா? என்னை தேடுபவர்கள், நாடுபவர்கள், ஏன் என்னை ,புரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டேன் என்கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் அப்படி இருந்தால் அவர்களை கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்களுக்கு மனம் வேறு திசையில் ஓடுகிறது. என்ன செய்ய? அவர்கள் எண்ணங்கள் பூர்த்தி அடைந்தால் வானளவுக்கு என்னை புகழ்கிறார்கள். கிட்டாதவர்கள் என்னை வாயில் வந்தபடியும் ஏசுகிறார்கள்.... எல்லாம் நான் அறிவேன். என்னை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களில் பாதிக்கு மேல் என்னைப்பற்றி சந்தேகங்கள் மனதில் நிரம்பியவர்கள். என்னால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா என்று நினைப்பவர்கள். அவர்கள் உண்மையான பக்தர்கள் இல்லை. பாபிகள் என்னை அணுக நான் அனுமதிப்பதில்லை. பாபம் விலக என்னை அணுகுபவர்களுக்கு சேவை செய்ய நான் இருப்பவன்'' என்கிறார் பாபா.
ப்ரம்ம ஞானம் கிட்ட வேண்டும் என்று பாபாவை தேடிக்கொண்டு ஒரு பெரிய பணக்காரன் வந்தான். நிறைய பணம் மூட்டையோடு தான் வந்தான்.... ''பாபா என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது'' என்று வேறு தனது பெருமையை அவரிடம் பீற்றிக்கொண்டான்.

''நீ எவ்வளவு நாள் இங்கே இருப்பாய்?'' என்று கேட்டார் பாபா.

''நான் ஒரு வாடகை மோட்டார் கார் வண்டி என் ஊரிலிருந்து போக வர பேசிக்கொண்டு வந்திருக்கிறேன். ரெண்டு நாள் இருக்கலாம். ''

''பணத்தின் மேல் இவ்வளவு பாசம் ஆசை வைத்திருக்கிறாய். ரெண்டு நாளில் ப்ரம்மஞானமா?? அது நீ நினைக்கிறபடி குறிப்பிட்ட நேரம் காலத்தில் அடையமுடியாதது. இங்கிருந்து போ முதலில் '' அந்த பணக்காரன் லேசில் போவதாக இல்லை. அங்கும் இங்குமாக நகர்ந்து எப்படியாவது பாபாவிடம் ப்ரம்ம ஞானம் அடைந்துவிடலாம் என்று அங்கேயே இருந்தான். இதை கவனித்த பாபாவுக்கு கடும் கோபம் வந்தது. கை பிரம்பினால் அவனை துரத்தி அடித்து விரட்டினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...