Tuesday, November 5, 2019

AAYIRA NAAMAN




விஷ்ணு சஹஸ்ரநாமம் J K SIVAN

ஆயிர நாமன்

பீஷ்மர் தன்னை மறைந்த நிலையில் அம்பு படுக்கையின் வேதனை சிறிதும் தன்னை பாதிக்காமல், ஸ்ரீ மஹா விஷ்ணுவாக எதிரே நிற்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான் சொல்வதை கேட்டுக்கொண்டு நிற்கும் நிலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணு நாராயணனின் ஆயிர நாமங்களை கடகடவென்று கடல் மடை திறந்தாற்போல் போற்றி புகழ்கிறார். ஆனந்தமாக அதை யுதிஷ்டிரன் முதலான பாண்டவர்கள் அருகே நின்று கைகட்டி புளகாங்கிதமாகி கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாமும் கேட்போம்.

வேத வியாசர் மிகவும் சமர்த்தர். ஞானி. பீஷ்மர் சொன்ன ஆயிரம் விஷ்ணுவின் ஆயிர நாமங்களை எதிலிருந்து எடுத்து ச் சொல்லலாம் , எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து, விஷ்ணு யார்? இந்த உலகை ரக்ஷிப்பவன் தானே, இந்த உலகமே, ப்ரபஞ்சமே அவன் தானே என்று ''விஸ்வம்'' என்று துவங்குகிறார். ஏற்கனவே சொன்னது போல், விஸ்வம் என்றாலே உலகம் என்று பொருள். காரணன் தானே காரியம்,.பீஷ்மரும் ஒருவேளை அப்படித்தான் சிந்தித்தாரோ? விஸ்வம் என்று ஆரம்பித்தாரோ, அந்த இரு மஹநீயர்களுக்கும் விஷ்ணுவோடு சேர்த்து நமது நமஸ்காரங்கள்.

1. விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: ||

1.விஸ்வம்: விஸ்வம் தான் விஷ்ணு,

2. விஷ்ணு: விஷ்ணுவே இந்த பிரபஞ்சம். எங்கும் எதிலும் வியாபித்து நிற்பது. அதனால் தான் அவனை விராட் புருஷன் என்கிறோம்.

3. வஷட்காரா: யாகங்களில் அவிர்பாகம் பெறுபவன். வஷட் வஷட் என்று முடியும் மந்திரங்களில் அவனைதான் ஆஹுதி செயது அப்படி அழைக்கிறோம். யஞங்கள், யாகங்கள் தான் விஷ்ணுவே. அவன் திரிகாலமும் கடந்தவன்.

4.பூத பவ்ய பவத் பிரபு: பஞ்ச பூதங்களையும் படைத்து காத்து அழிப்பவன். பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவன்.என்றும் ஸாஸ்வதன். உயிருள்ள எதிலும் உயிர் துடிப்பாவானவன். சொல்லிலும் செயலிலும் தோன்றும் வெளிப்பாடே அவன் தான். உபநிஷத்துகள் எல்லாமே இதைத் தான் கூறுகின்றன.

5. பூதக்ரித் : இந்த அகில லோகத்தையும் படைத்தவன். உயிர்களை ஸ்ரிஷ்டித்தவன்.

6.பூதபிரித்: ப்ரித் : ரக்ஷிப்பவர். ஐம்பெரும்பூதங்களை படைத்ததோடல்லாமல் அவற்றை காத்து ரக்ஷிப்பவர்.

7. பாவோ: தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தும் அசைய, தான் அசையாமல் இருக்கும் காரணன்.

8. பூதாத்மா: தான் படைத்த அகிலாண்ட கோடி ஜீவர்களுக்கு உள்ளே நின்று அவர்களைச் செலுத்தும் பரமாத்மா.

9. பூத பாவனா: உலகின் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஆதார காரணன்

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச ||

10. பூதாத்மா: பரிசுத்தன்.

11.பரமாத்மா: பரமாத்மன். பரப்ரம்மன். மாயையில் சிக்காதவன்.

12. முக்தானாம் பரமாகதி : முக்தர்களில் மேலானவன். உயர்ந்தவன்.
13. அவ்யயா: அழிவற்றவன்.

14. புருஷா: புருஷன் அவன் ஒருவனே
. மற்ற உயிர்களில் எது ஆணாக இருந்த போதிலும் புருஷன் என்று கருதப்படாது. .

15. சாக்ஷி: உள்நின்று சகலத்தையும் கண்காணிப்பவன்.
மனம் உடல் புத்தி எல்லாம் கட்டுக்குள் கொண்ட அதீத .சக்திமான். சர்வ சாக்ஷியானவன்

ஒவ்வொருநாளும் 15 அல்லது 20 நாமங்கள் மட்டும் அறிந்துகொள்வோம். இதனால் படித்ததை மனதில் இருத்திக் கொள்ளமுடியும்.
ஸ்லோகத்தை மனப்பாடம் செய்யவும் சுலபமாக இருக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...