Sunday, November 17, 2019

THULASI DAS



துளசிதாசர்:  J K  SIVAN 

                                                                   
வட  பாரதம், குறிப்பாக,   உத்தரப்பிரதேசம்  பல மகான்களை நமக்கு அளித்திருக்கிறது. அவர்களுள் ஒருவருக்கு பிறக்கும்போது பெற்றோர் இட்ட பெயர்  ராம் போலா .ராஜாப்பூர் என்ற ஊர்க்காரர். கூப்பிடும் பெயர்  துளசிதாஸ். வாழ்ந்த காலம் , 1532-1623.

துளசிதாசர் ராம சரித மானஸ் எனும்  இராமாயணம் எழுதும் முன் தென்னிந்தியாவிற்கு  நடந்து வந்திருக்கிறார்.  திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்ப ராமாயணத்

தினைக் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை தன்னுடைய காதையில் பல இடங்களில் கையாண்டுள்ளதாகவும்  ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்கள். அது அவர்கள் வேலை. தொடர்ந்து இதுபோல் ஏதாவது சொல்லட்டும்.

துளசிதாசருக்கு  இராமபக்தி  அதிகம்.  சைவம், வைணவம், சாக்தம் சம்பிரதாயங்களையும் சமமாகப் பாவித்துப் பெருமை பெற்றவர். கணேசர், சிவபெருமான், பார்வதி, சூரியன் என அனைத்து தெய்வங்களையும் போற்றியவர் என்பதால் தனிப்பெருமை பெற்றவர் என அறிகிறோம். நல்லவர்.

துளசி தாசர் அப்பா பெயர்: ஆத்மாராம் துபே, அம்மா பெயர்: உலேசி.  பிறந்த வருஷம்:  விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு).  பாவம்  சிறுவயதிலேயே  பெற்றோரை இழந்தவர். வறுமையில் வாடிய நிலையில் வால்மீகி இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார்.   அவரது நல்லதிர்ஷ்டம்  அவருக்கு இராமபக்தியும்  புத்தி கூர்மையும்  அறிவும் பெற்ற குணசீலியான இரத்தினாவளி என்கிற  மனைவி கிடைத்தாள் .

துளசிதாஸரின் குரு   நர்ஹரி தாஸ்,  அவருக்கு சேவை செய்து கல்வி கற்றார். அவரிடமிருந்து தான்  முதன்முதலாக  இராமனின் வீரச்செயல்களை  அறிந்தார். பரவசம் அடைந்தார்.  இதுவே இராமசரிதமானசா வை அவர் இயற்ற மூல காரணம் எனலாம்.

துளசி தாஸரின் குரு நரஹரிதாஸ், வட இந்தியாவில்  வைணவ மத ஸ்தாபகரான இராமநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி ஆவார். .

துளசிதாஸை   ராமாயணம் இயற்றிய ரிஷி  வால்மீகியின் அவதாரம் என்பார்கள். மொத்தமாக 39  நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். ஆனால்  கிடைத்தவை 12 தான் என்கிறார்கள்.  அவை:

வைராக்கிய சிரசந்தீபனீ, இராமாஞா பிரஸ்ன, இராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), இராம சரித மானஸ் (அவதி மொழி). இதில் ஒன்று கூட நமக்கு பெயரே தெரியாது. அதிக பக்ஷமாக  கடைசியில் சொன்ன ராம சரித மானஸ் தான் நமக்கு தெரிந்த அவரது ராமாயணம்.  துளசிதாஸ் ராமாயணம் என்று பொதுவாக இதை தான் சொல்வோம். நாம் தான் தமிழிலேயே படிப்பதில்லையே.

இராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான இராமசரிதமானசா , வால்மீகியின் இராமாயணத்தின் ''அவாதி'  மொழிப் பதிப்பு.   இராமசரிதமானசா  இதர மொழிகளும் காணப்படுகிறது. அவை "போஜ்புரி", "பிரிஜ்பாஷா " மற்றும்   "சித்ரகூட் '' மக்களின் உள்ளூர் மொழி".    இராமசரிதமானசா,  இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில்  பக்தியோடு  பூஜை அறைகளில் இன்றும் பாராயணம் செய்யப்9உள்ளது.  மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக உள்ளது.  போதனைகள் இந்துமத தத்துவத்திற்கு  ஒரு பெரும் ஆற்றல்  தரும் பலமாக உள்ளது.  அவரையும்  எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம்.  கவிஞராக, துறவியாக,  வாழ்க்கை தத்துவ ஞானியாக ஆச்சார்யனாக,  அதற்கெல்லாம் மேலாக ஒரு  ஞானி, ராம பக்தனாக.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...