Tuesday, November 26, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் ஜே கே சிவன்

16 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே
நமக்கு எல்லா விஷயங்களும் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு சின்ன சம்சயம். திருக்கோளூரில் ஒரு படிக்காத மோர் தயிர் விற்கும் பெண்மணி எப்படி இவ்வளவு விஷயங் களை தெரிந்து கொண்டிருக் கிறாள்? என்றால் ஞானம் பெற பள்ளிக்கூடம் தேவையில்லை யாருக்கோ கஷ்டப்பட்டு fees பீஸ் கொடுக்கவேண்டாம் என்று மட்டும் புரிகிறது.

இன்னொரு விஷயம் தெரியவில்லை. இந்த பெண் ஸ்ரீ ராமானுஜருக்கு இவ்வளவு அழகாக பதில் சொல்கிறாளே, இந்த 81 விஷயங்களை திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம், வார்த்தைகள், என்று யார் முதலில் தொகுத்தது. எழுதியது? நிச்சயம் அந்த பெண்ணோ, ராமானுஜரோ இதை எழுதவில்லை, இந்த சம்பாஷணை நடந்தபோது ராமானுஜரோடு கூட இருந்த சிஷ்யாச் சார்யர்கள் யாராவது ஞாபகம் வைத்துக்கொண்டு 81 பெயர்களையும் அந்த பெண் சொன்னதை எழுதி இருப்பாரோ? யார் அவர்? எவருமே எனக்குத் தெரிந்து இதைப் பற்றி சொல்லவில்லையே?.

சொல்லியிருந்தாலும் எனக்கு தெரியவில்லையே?. தெரிந்திருந்தால் யாராவது சொல்லுங்கள். யார் இந்த வார்த்தைகளை ''அவள் சொன்னாள் ராமானுஜர் கேட்டார்'' என்று முதலில் எழுதியது? எழுதியவர் பெயர் தெரிந்து அவருக்கு நமஸ்காரம் பண்ண வேண்டாமா?

16 வது உதாரணமாக அந்த பெண்மணி கிருஷ்ணனை காட்டுகிறாள். கிருஷ்ணன் மாயன். பொய்யன். என்று பேர் வாங்கியவன். ஆண்டாள் என்ன சொல்கிறாள் பாருங்கள் :

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே நான் அந்த கிருஷ்ணன் என்பவனை, என் ஆசை மணாளனை, தேடுகிறேன். அவன் கருப்பாய் இருப்பான். பார்த்தாலே மயக்கம் அடைய செய்யும் பேரழகன். அண்டப்புளுகன். ஆகாச புளுகன். ஜீரணிக்கமுடியாத, ஏற்க முடியாத பொய்கள் சரமாரியாக சொல்பவன். அவன் இங்கே வந்ததை யாராவது பார்த்தீர்களா. பார்த்தால் என்னிடம் சொல்லுங்களேன் '' என்கிறாள்.

கிருஷ்ணன் பொய்யன் என்ற பேர் பெற்றாலும் அவனைப் போல் சத்தியத்தை தர்மத்தை, நியாயத்தை நீதியை எடுத்துச் சொல்ல வேறு யாரும் கிடையாது. கீதை ஒன்றே சாக்ஷி.

கோபியர்கள் பிருந்தாவனத்தில், கோகுலத்தில் கண்ணன் பொய்கள் கூசாமல் சொல்பவன் என்று குறை சொன்னாலும் ம், சஞ்சயன் கிருஷ்ணனை சத்தியத்தின் திருஉருவம் என்று தானே திருதராஷ்டிரனிடம் மஹாபாரத யுத்தத்தை பற்றி சொல்லும்போது கூறுகிறார். பீஷ்ம பிதாமகர், ஞானி விதுரர் போன்றோர் கிருஷ்ணனை தர்மத்தின் திருவடிவம் என்றார்களே . எத்தனை யோகிகள் , ரிஷிகள், ஞானிகள், முனீஸ்வரர்கள் கிருஷ்ணன் சத்யஸ்வரூபம் என்று உணர்ந்தவர்கள்.

ஆகவே தான் திருக்கோளூர் பெண் ராமாநுஜரிடம், ''நான் சத்யம் என்று என்றேனும் ஒருநாள் சொன்னேனா ஸ்ரீ க்ரிஷ்ணனைப் போல, எனக்கு எந்தவிதத்தில் இந்த க்ஷேத்ரத்தில் வசிக்க யோக்கியதாம்சம் இருக்கிறது சொல்லுங்கள்? என்கிறாள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...