Sunday, November 3, 2019

THEJOMAHAALAYA SIVA TEMPLE




சரித்திரமே,   உண்மையை சொல்லு. J K SIVAN



ஒரு  சிறந்த கல்விமான்  ஸ்ரீ  P .N . ஓக் .  நிறைய ஆராய்ச்சி செய்து  தடயங்களை கவனித்து, உண்மையை வெளி கொண்டு வந்தவர். மத வெறியரல்லர்.   அவரது  கண்டுபிடிப்பு.  தாஜ்மஹால்  இப்போது உலக அதிசயங்களின் ஒன்றான  ஒரு இஸ்லாமிய சமாதி அல்ல. அது தாஜித் மஹால் அல்ல  தேஜோமஹாலயம் .    இந்திய  சரித்திரத்தை பொறுத்தவரையில்  எழுதப்பட்டிருப்பது   உண்மையில்  ஒரு காலே அரைக்கால் வீசம்  தான். எத்தனையோ உண்மைகள்  வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டி ரக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். உலகமுழுதும் எல்லோரும் திரண்டு வந்து அதிசயிக்கும் தாஜ் மஹால் பின்னால் இருக்கும் கண்ணீர் கதை இது.

ஷாஜஹான் என்ற  முகலாய மன்னன் காலத்தில்  ஜெய்ப்பூர்  மஹாராஜா வின் கட்டுப்பாட்டில் இருந்த சிவாலயம்  ஷாஜஹானால் அபகரிக்கப்பட்டது.  ஒருகாலத்தில் சிற்பங்கள் வேலைப்பாடு நிறைந்த ஆலயம்,விஸ்தாரமான இடம், கம்பீரம்,  மதில் சுவர்கள், நீர் தடாகங்கள், நந்தவனம்,  மரங்கள், அறைகள், நீண்ட கூடம்,  மச்சு, கோபுரங்கள், பாதாள அறைகள் கோபுரத்தின் மேல் திரிசூலம், ஓம் எனும்  எழுத்து,  கர்பகிரஹ சுவர்கள்.


''மஹால்'' என்ற வார்த்தை முகலாய  தஸ்தாவேஜுகளில் இல்லை. அவுரங்கசீப் காலத்திலும் இல்லை. உலகத்தில் எந்த இஸ்லாமிய தேசத்திலும் தெரியாத வார்த்தை. 
மும்தாஸ் மஹால் என்பவளை புதைத்ததால்  என்பதும்  அபத்தம்.  அவள் பெயர்  மும்தாஸ் மஹால்  அல்ல.  மும்தாஸ் உல்  ஜமானி .  அப்படி  மும்தாஸ் மஹால்  அவள் பெயராக இருந்தால் எந்த  முட்டாள்  ராஜாவும்   அவளது பாதி பெயரை  அந்த ஞாபகார்த்த கட்டிடத்துக்கு வைக்க மாட்டான்.  (மும் ) விட்டு விட்டு    ''தாஜ் மஹால்'' என்றா  ஒரு ஞாபகார்த்தம் வைப்பான்?

 வெள்ளைக்காரர்கள்  வந்து பார்த்தவர்கள் அந்த காலத்திலேயே  தாஜ்-  இ- மஹால்''  என்று தான் எழுதி வைத்திருக்கிறார்கள். இதற்கும் அந்த கால கோவிலாக இருந்த  ''தேஜோ மஹாலய' த்துக்கும் நெருக்கம் தெரிகிறது.
நமது துரதிர்ஷ்டம்  ஹுமாயுன், அக்பர், மும்தாஸ்,  இத்மத்தவுலா,  சப் தார்ஜங்  போன்றோர்  ஹிந்து  மாளிகைகளிலும்  கோவில்களிலும்  பதைக்கப்பட் டிருக்கி றார்கள். 

புதைக்கப்பட்ட  கல்லறை  எப்படி  ''மஹால்''  ஆகும்?   அரண்மனை கட்டிடம் தானே  ஆலயம் தானே  மஹால் ஆகும்.  அது  தேஜோ மஹாலய  சிவன்  கோவில்.  ஆக்ராவில் உள்ள அந்த கோவிலில் சிவன் பெயர்  அக்ரேஸ்வர மஹாதேவர். 

தேஜோமஹாலய கோவிலாக இருந்த காலத்தில் காலில் செருப்பை கழற்றிவிட்டு உள்ளே செல்லும் பழக்கம் தாஜ்மஹாலில்  ஷாஜ ஹான் காலத்தில் தொடர்ந்தது. 

சலவைக்கல் பீடத்தில் சிவன் இருந்த இடத்தில்  சமாதியின்  பளிங்கு பீடமாக இருக்கிறது. 
தாஜ் மஹால் ரிப்பேர் வேலைகள்  செய்தவர்கள் சுவர்களுக்குள் சிவலிங்கம் மற்ற விக்ரஹங் கள்  மறைத்து சுவர் எழுப்பியிருப்பதை அறிவார்கள்.  சமாதியின் அஸ்திவாரத்தின்  அடியில் உள்ள  அறைகளின் சிவப்பு கற்கள்  ஆலயத்தில் இருந்தவை.   ஏனோ  இந்த ரகசியங்களை புதை பொருள் ஆராய்ச்சி துறை வெளியிடவில்லை. 

பாரத தேசத்தில் 12 ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அதில் இந்த தேஜோமஹாலயம்  ஒன்றாக இருந்திருக்கிறது.  நாகநாதேஸ்வரர் என்று சிவனுக்கு பெயர் அங்கு.  ஷாஜஹான் எல்லாவற்றையும் அழித்து விட்டான். 
சிற்ப சாஸ்திரத்தில்  விஸ்வகர்ம  வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அதில் தேஜ  லிங்கம் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஒரு  தேஜோ லிங்கம்  இங்கே  ஸ்தாபித்திருக் கிறார்கள். 

ஆக்ரா   ஒரு காலத்தில் அக்ர  சிவ ஸ்தலம் இங்கு தான் முதலில் தரிசித்து விட்டு மற்ற  ஐந்து  சிவாலயங்கள் சென்று பிறகு தான் ஒவ்வொரு  இரவும் உணவு உண்பார்கள்.   பல நூற்றாண்டுகளாக   தாஜ் மஹாலாக  இந்த  சிவாலயம் மறைந்தபிறகு  மீதி நான்கு சிவாலயங்கள் செல்லும் பழக்கம் நடை முறையில் வந்தது.  பாலகேஸ்வர், ப்ரித்விநாத், மானகாமேஸ்வர், ராஜராஜேஸ்வரர் என்ற  பெயர் கொண்டவை மற்ற நான்கு ஆலயங்கள்.  பிரதானமான  அக்ரேஸ்வர மஹாதேவ நாகநாதேஸ்வர  தேஜோமய சிவலிங்கம் தான் மறைந்துவிட்டதே.

 ஆக்ராவின்  மக்களில் பெரும்பாலோர்  ஜாத் குலத்தினர்.  அவர்கள் சிவபெருமானை இன்றும்  தேஜாஜி என்பார்கள். தேஜோ மந்திர் என்று சிவலிங்கம் கட்டியவர்கள்.  பிரதான தேஜ லிங்கம் இருந்த இடம்  தேஜோமஹால் என்கிற  தாஜ் மஹால். ஷாஜஹான் அரசவை
சரித்த்ரம்  ''பாத்ஷா நாமா''  (பக்கம் 403 பாகம் 1) '' ஒரு  பெரிய  விஸ்தாரமான  அழகிய மாளிகை  விமானத்தோடு (Imaarat-a-Alishan wa Gumbaze) ஜெய்பூர் மஹாராஜா   ராஜா  மான்ஸிங்  இடமிருந்து பெறப்பட்டு  மும்தாஸ் புதைக்கப்பட்டாள் '' என்கிறது.  இதற்கு மேல் என்ன தடயம் வேண்டும்.

தாஜ் மஹால் வாசலில் வைக்கப்பட்டுள்ள   விபர பலகை, தனது மனைவி மும்தாஸ்மஹால் கல்லறையாக தாஜ் மஹால்  1631-1653  (22 வருஷங்கள் ) கட்டப்பட்டதை சொல்கிறது. சரித்திரத்தை மாற்றிய சான்று இந்த அரசு அறிவிப்பு பலகை. மும்தாஸ் உல்ஜாமானி யை  மும்தாஸ் மஹால் ஆக்கிய கதை.  அவுரங்கசீப்  தனது அப்பா ஷாஜஹானுக்கு   1652ல் எழுதிய கடிதங்கள்  `Aadaab-e-Alamgiri', `Yadgarnama', `Muruqqa-i-Akbarabadi'  என்ற  தலைப்புகளில் இன்றும்  பதிவில் உள்ளன.  ''அப்பா   மும்தாஸ் புதைக் கப்பட்ட ஏழு நிலை கோபுரம்.,( அது  கோவில் கோபுரம்) சிதிலமான ஸ்திதியில் இருக்கிறது. பழைய கட்டிடங்கள்.  ஒழுகுகிறது. வடக்கு பக்கம் நிறைய  விரிசல் வேறு.   இதெல்லாம் உடனே  ரிப்பேர் செய்ய வேண்டும். என் செலவில் செய்கிறேன்.  பிறகு  சாஸ்வத ரிப்பேர் செய்யவேண்டும். ''

இதிலிருந்தே தெரிகிறதா?  பழைய பெரிய  7 நிலை  கோவில் தான் சமாதி இடமாகி தாஜ்மஹாலாகிவிட்டது என்று...ஜெய்ப்பூர்
மஹாராஜா  தன்னுடைய  காப்பகத்தில்  (KAPADWARAA)   டிசம்பர் 18, 1633ல்  எழுதப்பட்ட  ரெண்டு  கட்டளைகள் ஜாக்கிரதையாக வைத்திருக் கிறார். தாஜ்மஹால் கட்ட  தேஜோமஹாலய த்தை கேட்டது.  அப்போதி ருந்த மஹாராஜா இதை வெளியிடவில்லை.  யாரிடம் போய் நீதி கேட்க முடியும்?
ஜெய்ப்பூர் மஹாராஜா  ஜெய்சிங்கிடம்   மும்தாஸ் கல்லறை கட்ட  பளிங்கு கற்கள்  அனுப்ப கட்டளை விட்டது ஆவணமாக இருக்கிறது.  பளிங்கு கல் வேலை செய்யும் சிற்பிகளை கேட்டது.  ராஜாவுக்கு கோபம்.  தேஜோமஹாலயத்தை  அபகரித்ததுமல்லாமல் அதற்கு பளிங்கு கல்லறையாக்க  பளிங்கும் , சிற்பிகளும் வேறு அனுப்ப வேண்டுமாம்.  ராஜா பதிலளிக்கவில்லை.

பீட்டர் மண்டி  என்ற வெள்ளையன்,  தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே  ஆக்ராவில்  தாஜ் மஹால் இருந்த இடத்தில்  அழகிய தோட்டங்கள், கடை வீதிகள்,  சூழ்ந்த தேஜோ மஹாலய கட்டிடத்தை பார்த்து எழுதி இருக்கிறான். 

டீ  லேட்  என்கிற  டச்சுக்காரன்,  ஜெய்பூர் மஹாராஜா மான்சிங் மாளிகை ஆக்ரா கோட்டையிலிருந்து ஒரு  மைல் தூரத்தில் இருந்தது. அழகிய கட்டிடம் என்று சொல்லி

இருக்கிறான். மும்தாஜ் இந்த மாளிகையில் தான் புதைக்கப்பட்டாள் .

பெர்னியர்  என்கிற பிரெஞ்சு யாத்ரீகன், தாஜ் மஹால் இருந்த   அஸ்திவார அறையில் வெளிச்
ச மயமாக இருந்ததுமுஸ்லீம் அல்லாதோர் அங்கே  அனுமதிக்கப்படவில்லை  என்கிறான்.   தேஜோமஹாலயம்   என்றாலே பளிச்சென்று தானே இருக்கும்.  வெளிச்சமில்லாமலா
 இருக்கும்.  வெள்ளி கதவுகள், தங்க  படிகள்,  தங்க  கைப்பிடி  சட்டங்கள்,  நவரானங்கள் பதித்த வாசல், உத்தரம், சுவர்கள்
.சிவலிங்கத்தின் மேல்  முத்து விமானம். 

இதெல்லாம் பார்த்த ஷாஜஹான் அந்த கட்டிடத்தை அபகரித்ததில் வியப்பென்ன?.    கோட்டை விடுவதில் நாம் சமர்த்தர்கள்.  தேஜோமஹாளய அக்ரேஸ்வர நாகநாதசுவாமி ஆலயம்  ஒரு இஸ்லாமிய பெண்ணின்  கல்லறையாகி விட்டது...




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...