Sunday, November 17, 2019

THIRUK KOLOOR PEN PILLAI RAHASYAM




திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்     J K  SIVAN
                
    10.
முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

உங்களுக்கும்  எனக்கும்  இந்த  விஷயம் நன்றாக தெரிந்தபோது ஸ்ரீ ராமானுஜருக்கு  தெரியாமலா இருக்கும். இருந்தாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் ரசிப்பதில்லையா. அப்படி  இந்த விஷயத்தை திருக்கோளூரில் அவர் சந்தித்த  ஒரு சாதாரண பெண்மணி சொல்லும்போது அழகாக ரசிக்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து ரசிப்போம்:

கௌதம மகரிஷி யின் மனைவி அஹல்யா. அழகி. தேவேந்திரன் அவளை அடைய முயல்கிறான். நடக்காது என்பதால் அவள் கணவர் கௌதம ரிஷி உருவில் அவர் இல்லாத சமயம் ஆஸ்ரமத்தில் நுழைகிறான். கௌதமர் அவனை பார்த்ததும்  ஓடுகிறான்.  அவர் அவனையும் வித்யாசம் தெரியாமல்  தவித்த மனைவியையும் சபிக்கிறார்.  அவள் அவர் சாபத்தால்  கல்லாகிறாள். பின்னர்  ஸ்ரீ ராமர் பாதம் அந்த கல்லின் மீது பட்டதும் உயிர் பெற்று கணவரை அடைகிறாள். இது தான் கதை சுருக்கம்.

 "வந்தது தேவேந்திரனா இல்லை உன் கணவனா" என்று வேறுபாடு அறிய தவறிவிட்டாய். ஆகவே உன்னை  கல்லாக மாற சபிக்கிறேன் என்று கௌதமர் சபித்தார்.

அகலிகையை கல்லாய் மாற சாபமிட்டபின் தான் அவருக்கு கோபம் தணிந்தபிறகு  அவள் மேல் தவறில்லை என்று தெரிகிறது. ஆகவே  "ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் மாறி தவமிரு.  ஸ்ரீமன் நாராயணன், ராமனாய் இப்பூலோகத்தில்  அயோத்தியில்  அவதரித்து இவ்வழியே வருவார்.  அப்போது அவர் திருப்பாதம் உன் மீது பட, உன் சாபம் தீரும்!" என்று  சாப விமோச்சனம் அருள்கிறார்.  

அகலிகை கல்லாய் மாறி ஸ்ரீ இராமனின் வருகைக்காக தவமிருக்கிறாள்.  ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன! ஸ்ரீமன் நாராயணன்  தசரதகுமாரன்  ஸ்ரீ  ராமனாக அவதரித்து    விஸ்வாமித்ர மஹரிஷியோடு மிதிலை சென்று  அங்கே  ஜனக மஹாராஜா அரண்மனையில்  எவராலும் முடியாத  பெரிய  சிவ தனுசை  எடுத்து  அது இற்று விழ , சீதையை ஸ்வயம்வரத்தில் வென்று,  மணம் செய்து கொண்டு திரும்புகிறார். 

 இதற்கிடையே, ஸ்ரீ இராமனும், லக்ஷ்மணனும். கௌதம மகரிஷியின் குடில் இருந்த இடத்தினை கடந்த பொழுது, ஸ்ரீ இராமனின் திருப்பாதம், கல்லாய் உருமாறி காத்திருந்த அகலிகை மீது பட, அகலிகையும் சாபம் தீர்ந்து, புனிதத்துவம் பெற்று உருமாற, கௌதம மகரிஷி, மகரிஷி விஷ்வாமித்ரரின் வார்த்தைகளுக்கு இணங்கி, அகலிகையை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

  இந்த  கதையை தான் 
திருக்கோளூர் பெண்மணி ராமாநுஜரிடம் எடுத்து சொல்லி,  சுவாமி, நான் என்றாவது ஒருநாள்   ரிஷி பத்னி  அகலிகை போல், ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதம் தொடும் பாக்கியம் பெற்றேனோ? இல்லையே. அப்படி இருக்க  எப்படி இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வாசிக்க எனக்கு அருகதை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...