Sunday, November 3, 2019

GARUDAPURANAM



கருடபுராணம் J K SIVAN

4. த்யான வழிமுறைகள் கருடபுராணம் நாம் படிப்பது அதில் சொல்லப்பட்ட சில கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு. நாராயணன் சிவபெருமானுக்கு சொல்வது, பிறகு சிவபெருமான் வேத வியாசருக்கு உரைப்பது என்று கர்ணபரம்பரையாக வந்த விஷயம்.
மிகப்பெரிய புஸ்தகம். அதில் முழுமையாக வரிக்கு வரி விளக்கம் அறிய நேரமும் பொறுமையும் வேண்டும். அதை கடைப்பிடிக்க வசதியோ, வாழ்க்கையில் வயதோ போறாது.. சில இடங்களில் அதனால் பட்டும் படாமலும் பயணிக்கிறேன்.
வேத வியாசருக்கு சிவபெருமான் விளக்குகிறார்: ''வியாஸா , நான் சூரிய நமஸ்காரம், உபாசனை பற்றி அதன் மேன்மையை சிவம்புவ வழிமுறையை கூறுகிறேன். கேள் . ''ஓம் ஹ்ரம், ஹ்ரீம் சூரியனே உனக்கு நமஸ்காரம். சந்திரனே உனக்கு நமஸ்காரம். நவகிரஹ தேவதைகளே உங்களுக்கு நமஸ்காரம். உங்களுக்கு பூஜை, வஸ்திரம், ஸ்நானம், ஆசனம், அர்க்கியம் நைவேத்யம், உபவீதம், தீபம், வாஹனம் ஆரத்தி எல்லாம் அர்ப்பணித்து உபசரிக்கிறேன். ஹரன் , ஹரி, இந்திராதி தேவர்களுக்கு நமஸ்காரம், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவைகளுக்கு நமஸ்காரம். க்ஷேத்ரபாலர்களுக்கு நமஸ்காரம். குருக்களுக்கு எல்லாம் நமஸ்காரம். எல்லா மந்திரங் களும் உச்சரித்து நமஸ்காரம். ஹரி, ருத்ரனிடம் ஐந்து மண்டலங்களை அமைத்த சக்ரம் வரைந்து பூஜையை அனுஷ்டிக்கும் முறையை விளக்குகிறார். குரு தீக்ஷை அளிக்கும்போது தனது உபாஸனையை அனுஷ்டிக்கும்போது கண்களை ஒரு வஸ்த்ரத்தால் மறைத்துக் கொள்ளவேண்டும். 108 முறை மந்திரம் ஜெபிக்க வேண்டும். புத்ரகா ஹோமத்தின்போது இரு முறை, 216 மந்திரங்களாக உச்சரிக்கவேண்டும். சாதக ஹோமத்தில் மூன்று முறை. நிர்வாண தேசிக உபாஸனையின்போது 4 முறை ஜெபிக்கவேண்டும். இது தீக்ஷை முறை. பிறகு குரு சிஷ்யர்களை வெளியில் இருக்க வைத்து தான் தனித்து தியானத்தில் ஈடுபடுகிறார். காற்று சுத்தீகரிக்கட்டும். அக்னி வாட்டட்டும், ஜலம் தெளிக்கட்டும். பிரணவத்தில் மனம் ஒன்றுகலந்து, த்யானம் செய்யும்போது குருவின் உடல் ஆவி அனைத்திலும் அது நிறைந்ததாக இருக்கும். ஆகாசம் பூமி என்று எங்கும் தன்னோடு அது கலந்த நிலையில் தியானிப்பவர் குரு. . சகல மண்டலங்களிலும் வியாபித்திருக்கும் சக்தி தேவதைகள் அவரு க்கு ஹரி நாமத்தை போறறுவதற்கு சக்தி தரும். ப்ரம்ம தீர்த்தம் என்று சொல்லும்போது நாலு வாசல்கள். சிரம் தாமரை. விரல்கள் தாமரை இதழ்கள். உள்ளங்கை நகங்கள் செயல் சாதனங்கள். அவை கூப்பி இருக்கட்டும். ஹரி, சூர்யன், அக்னி, ஆகியோரை கட்டுப்பாட்டில் உள்ள மனதோடு, குருவானவர் சிஷ்யர்களுக்கு தீக்ஷை அருள்கிறார். அப்படி தியானித்த கரங்களை சிஷ்யனின் சிரத்தின் மீது உள்ளங்கை பட வைக்கிறார். அந்த கரம் விஷ்ணுவின் கரம். குருவின் கரம் அல்ல. ஏனென்றால் அதில் விஷ்ணு ஆவாஹனமாகிவிட்டார். சர்வ பாபங்களும் அதனால் சிஷ்யனை விட்டு விலகுகிறது. . ஹரி ருத்ரனுக்கு உபதேசித்ததை தான் சிவன் வேதவ்யாஸருக்கு சொல்கிறார்: அடுத்ததாக ஸ்ரீ லக்ஷ்மியை எப்படி உபாசிப்பது, சித்தி அடையும் மார்க்கம் , நவ வ்யூஹமாக சக்ர பூஜை, மந்திர அக்ஷரங்கள் முத்திரை, உச்சாடனம் , அங்க நியாசம், பற்றி விவரிக்கிறார். நாம் முழுதுமாக அதற்குள் செல்ல வேண்டாம்.
எவ்வாறு யோக பிதா விஷ்ணுவை, சங்கர்ஷணனை, ப்ரம்மாவை , அனந்தனை , பிரார்த்திக்கவேண்டும், தியானிக்கவேண்டும், எந்தெந்த வாசலில் யார் அவர்களது ஆயுதங்கள், சாரங்கத்தை, சங்கு சக்ரங்களை, எப்படி விக்ரஹம் பக்கம் வைக்கவேண்டும் , முத்திரை காட்டும்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் என்றெல்லாம் விவரங்கள் வருகிறது.
நரசிம்ம முத்திரை, வராஹ முத்திரை, அங்க முத்திரை, வாசுதேவ முத்திரை, பலா , காமா, அநிருத்தா முத்திரைகள். நாராயண மந்திர உச்சாடன மந்திரங்கள் விவரம் ஆகியவற்றை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விவரமாக அறிவோம்.
கருடன் சாம்பல் வர்ணத்தில், புகை நிறத்தில் காண்பவன், லட்சுமி தங்கநிறத்தவள். பாஞ்சஜன்யம் முழு நில்வு வர்ணம். ஸ்ரீவத்சம், குந்த மலர் நிறம். மாலை ஐந்து நிறம். பஞ்சவர்ணம். அனந்தன் மேக நிறத்தவன். ஆயுதங்கள் மின்னல் போல் பளபளப்பவை..
நாம் பார்ப்பவை அகஸ்திய சம்ஹிதையில் கருடபுராணத்தில் விவரிக்கப்படுபவை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...