Wednesday, November 20, 2019

NIRVANA MANJARI 3




ஆதி சங்கரர்        J K SIVAN

                      நிர்வாண  மஞ்சரி   (9 -12)

Yadantharbahirvyapakam nithya shudham,
Yadekam sada sachidananda kandam,
Yatha sthoola sukshma prapanchasya bhanam,
Yathasthat prasoothistha devahamasmi.   9

எங்கும்  எதிலும்  பர ந்து விரிந்து நிறைந்து காணப்படும் தூய  பளிங்கு போன்ற உள்ளும் புறமும் களங்கமற்ற ஆத்மா  நானே,   நீ  அழைக்கும்   சிவன்.  சதா ஆனந்தத்தில் திளைத்து அருளும்  பூரணன். சிறிதும் பெரிதுமாக  இந்த பிரபஞ்சத்தில் காணும் எதுவும் நானே, அவற்றை படைத்தவனும் நானே. நினைத்தால் சர்வவியாபியான என்னை உன்னிலும் நீ   காணலாமே.

Yadarkendu vidhwat  prabha jala maala,
Vilasapadam yathswa bhedhadhi soonyam,
Samastham jagdyasya padathmakam sya,
Dhyatha shakthi bhanam thadevahamasmi.   10
என்னை நினைத்தோர்க்கு சக்தி அளிப்பவன்  நான். சிவன்.  சிவனை நினைந்தோர் எவர்  தாழ்ந்தார், சிவனை மறந்தோர் எவர்  வாழ்ந்தார் என்று ஒரு பாட்டு  இருக்கிறதே.   மின்னல் அடுத்தடுத்தது  ஒளிக்கற்றையாக வருமே  அதுபோல்  ஒளி வீசிக்கொண்டு இருப்பவன், சூரிய  சந்திர ஒளி போன்று எங்கும் எவருக்கும் இரவும் பகலிலும் ஞான ஒளி வீசிக்கொண்டிருப்பவன்.  ஓருவரிலிருந்து மற்றவர்  எவ்வாறு  வேறுபடுகிறார்கள்,  உருவத்திலும் குணத்திலும், அந்த உருவம், குணம் வெவ்வேறாக  அளித்தாலும் உள்ளே  ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும்  ஜீவஜோதியாக இருப்பவன் நான் தானே. நீங்கள் அறிந்த  சிவன்... சிவன் சிவன்..  வேறாக நினைத்தால் அந்த வேறுபாடு நானே. வித்யாசமே இல்லை என்றால்  எல்லாம் ஒன்றானவன் நான்.  சிவன். என்னிலிருந்து பிறந்த ப்ரபஞ்சகம் என்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.  என்றாலும் நான் அதல்ல .

 Yatha kala moorthir bhibhethi  prakamam,
Yathaschitha budhindriyanam vilasa,
Hari brahma rudrendra chandradheenaam,
Prakaso yatha syatha devahamasmi. 11

எல்லா உயிர்களையும்  தக்க நேரத்தில் பூமியிலிருந்து விடுபட வைக்க ஒருவன்.  எம தர்மன். அவனும்  என் தொழிலைச் செய்ய  என்னால் ஏற்படுத்தப்பட்டவன். 
கால ஸம்ஹாரம்  என்பதே  எந்த நேரத்தில் அழிக்கப்படவேண்டுமோ அந்த நேரத்தில்  அதை நிறைவேற்றுவது.  உயிர்களின் மறையும் நேரம் வந்தால் அதை  முடிப்பது எமனுக்கு இட்ட வேலை. என் கட்டுப்பாட்டில் அதை நிறைவேற்றுபவன். நான் சிவன், கால சம்ஹார மூர்த்தி. நானே  மனத்தின் உயர்ந்த நிலைபாட்டிற்கும்  காரணன்.  ஞான காரகன். புலன்களின் அதிகாரி.  ப்ரம்மா, சிவன், இந்திரன்  சந்திரன் என்றெல்லாம் பல  கடவுள்களாக  மாறி மாறி தோற்றமளிக்கும் நான் ஒருவனே.  சிவன். பரப்ரம்மன். 

Yad akasavad sarvagam, Shantha roopam
Parama jyothiraakara soonyam varenyam,
Yadad antha soonyam param, Shankarakhyam,
Yadanthar vibhavyam, tadhevaha masmi.         12
சிவன் என்று நான் சொல்லும்போது என்னை எளிதில் வசப்படுத்த முடியாது    என்று புரிந்து கொள் . எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன்.  பரந்த ஆகாயத்தையும்  கடந்த எல்லையில்லாத  எங்கும் நிறைந்த  பர ஒளி.  என்னை அமைதியான  ஒரு தியானிக்கும்  மௌனமான உருவமாக பார்க்கலாம்.  தீயினும்  ஒளி மிக்கவன்.  ஜோதி ஸ்வரூபன்.  எதுவுமில் லாத  அருவன்.  ஆதி அந்தமில்லா தவன்.  என்னை  சிவன்  என்றும் சங்கரன் என்றும்  அழைப்பார்கள். 

 இன்னும் நான்கு ஸ்லோகத்தோடு இந்த ஆதிசங்கரரின்  நிர்வாண மஞ்சரி நிறைவு பெரும். அது நாளைக்கு.இது உங்களுக்கு பிடித்திருந்தால் பலரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...