Tuesday, July 24, 2018

SADHANA PANCHAKAM



ஆதி சங்கரர்     J.K. SIVAN 

சாதன/உபதேச பஞ்சகம்  2
                  



சாதன பஞ்சக ரெண்டாவது ஸ்லோக  எட்டு ஏணிப்படிகளை அடுத்து அறிந்து கொள்வோம். இப்போது  நாம் ஏறப்போவது 9வது முதல்  16வது படி வரை .  அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட். வாழ்க்கைப் படிகளில் ஏறுவது அவ்வளவு சுலபமில்லை.


सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
  शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌।
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
  ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्‌॥२॥

saṅgaḥ satsu vidhīyatāṁ bhagavato bhaktirdṛḍhā”dhīyatāṁ
 śāntyādiḥ paricīyatāṁ dṛḍhataraṁ karmāśu santyajyatām |
sadvidvānupasṛpyatāṁ pratidinaṁ tatpādukā sevyatāṁ
 brahmaikākṣaramarthyatāṁ śrutiśirovākyaṁ samākarṇyatām ||2||












9.  சத் சங்கம் என்று சொல்கிறோமே. நல்லவர்களோடு கூட்டு வைத்துக் கொள்ளவேண்டும். நமக்கு  புதிதாக நல்ல பழக்கங்கள் வருவது லேட் ஆனாலும்  இருக்கும்  கெட்ட  பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிச்சயம் குறையும். 

10.  பகவான் மேல் பக்தி விடாமல் வளரவேண்டும். கடவுள் நம்பிக்கை சத் சங்கத்தால் எளிதில் மலரும்.

11.  மனம்  வெவ்வேறு உணர்ச்சிகள் கிளப்பும் கொந்தளிப்பை தவிர்த்து    அமைதியை பெற முயற்சி செய்யவேண்டும்.

12.  நமக்கு என்று சில கர்மாக்கள் இருக்கிறது. அதை விடவும் முடியாது. அதுவும் நம்மை விடாது.  இதெல்லாம் விடமுடியுமோ  அவற்றை ஒவ்வொன்றாக விட்டுவிட்டு  செய்யவேண்டிய கர்மாக்களை விடாது பற்றின்றி செய் என்கிறார் சங்கரர்.




13.  கற்றறிந்த  ஆச்சர்யனை தேடி சரணடைந்து குருவாக  கொள்.





14. ஆச்சர்யனின் பாதுகை கூட வழிபடுவதற்கு உரியது.






15. ஏக அக்ஷரமான  ஓம்  எனும் சக்தி வாய்ந்த  பிரம்மத்தை அளிக்கும் 


மந்திரத்தை  விடாமல் உச்சாடனம் செய்.





16. நமக்கு தெரியாவிட்டாலும்  யாரவது  வேதங்களை பாராயணம் செய்வதை காதால்  கேட்போம். நல்ல சப்தம் காதில் விழுந்தாலே  நாம் கொஞ்சம் உயர்வோம்.





இனி அடுத்த  எட்டு  படி மேலே ஏறுவோம்.'




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...