Friday, July 27, 2018

LALITHA SAHASRANAMAM




ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (219 -231) J.K. SIVAN

महाभोगा महैश्वर्या
महावीर्या महाबला ।
महाबुद्धिर् महासिद्धिर्
महायोगेश्वरेश्वरी ॥ ५५॥

Maha bhoga Mahaiswarya
Maha veerya Maha bala
Maha bhudhi Maha sidhi
Maha Yogeswareswari

மஹாபோகா மஹைச்வர்யா
மஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர்
மஹாயோகேச்வரேச்வரீ || 55

महातन्त्रा महामन्त्रा
महायन्त्रा महासना ।
महायाग-क्रमाराध्या
महाभैरव-पूजिता ॥ ५६॥

Mahathanthra Mahamanthra
Mahayanthra Mahasana
Mahayaaga kramaaraathyaa
mahabhairava poojithaa.

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா
மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக க்ரமாராத்யா
மஹாபைரவ பூஜிதா || 56

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (219 - 231 ) அர்த்தம்

* 219 * மஹாபோகா -- அவள் மஹாராணி. ராஜ போகம் . அவளுக்கில்லாத சந்தோஷங்களா. சர்வமும் அவளே, அவளதே என்றபோது மகிழ்ச்சிக்கு அளவேது.

* 220 * மஹைச்வர்யா - அவளே அளவற்ற செல்வ ஸ்வரூபம். பிரம்மானந்தம். அதை தான் விபூதி என்பது. சகல ஸ்வதந்த்ர சக்தி அம்பாள். '' அர்ஜுனா, எனக்கு எல்லையே இல்லையடா. எல்லா உயிர்களின் இதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேனடா. நானே எல்லாவற்றிற்கும் எவ்வுயிர்க்கும் முதல், நடு, முடிவு எல்லாமே'' என்று கிருஷ்ணன் சொன்னானே அதே தான் இங்கே அம்பாள்.

* 221 * மஹாவீர்யா -- எல்லையில்லா பெரும் காம்பீர்யம், சக்தி, அதிகாரம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. . பக்தியோடு அணுகிய பக்தனுக்கு அவற்றை வழங்குபவள்.

* 222 * மஹாபலா - அபரிமிதமான பலத்தை கொண்டவள் அம்பாள். சக்தியிலேயே மிகப்பெரியது ப்ரம்ம சக்தி. அது ஸ்ரீ லலிதாம்பிகை.

* 223 * மஹாபுத்திர் - அதிக புத்தி கூர்மையானவள். அவளறியாத விஷயமே இல்லை. சர்வ சகல ஞானி.

* 224 * மஹாஸித்திர் -- அதீதமான இயற்கையாகவே சர்வமும் வரப்பெற்றவள். அஷ்ட மா சித்திகள் மட்டுமா? சகல சித்திகளுக்கும் ஆதார நாயகி அம்பாள்.

* 225 *மஹாயோகேச்வரேச்வரீ- எல்லா யோகங்களும் கைவரப் பெற்ற மஹா யோகிகளும் வணங்கி போற்றும் யோகிகளுக்குக்கெல்லாம் யோகியாகிய யோக ஈஸ்வரி ஸ்ரீ லலிதை..

* 226 * மஹாதந்த்ரா - -பூரணமாக தந்த்ர சாஸ்திரங்களின் வெளிப்பாடானவள். வழிபடப்படுபவள் ஸ்ரீ லலிதை.

* 227 *மஹாமந்த்ரா - வேத மந்திரங்களின் உட்பொருள் அம்பாள். சிறந்த மந்த்ரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள். எல்லா மந்திரங்களும் ஸமஸ்க்ரிதத்தின் 51 அக்ஷரங்களான கூட்டமைப்பு அல்லவா. இந்த அக்ஷரங்கள் மாலையாக அம்பாளை அலங்கரிக்கிறதே. பஞ்சதசி ஷோடசி மந்த்ரங்கள் அவளே அல்லவா.

* 228 * மஹாயந்த்ரா -- அம்பாளைதான் சக்தி வாய்ந்த யந்திரங்கள் குறிக்கின்றன. ஸர்வ யந்த்ராத்மிகே என அவளைத்தானே மந்த்ரங்கள் போற்றுகின்றன. மகா யந்த்ரம் தான் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரம்.
mantra-s.}

* 229 * மஹாஸநா - ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனி என்பது அம்பாளை அல்லவா. சர்வ சக்தியான அம்பாள் மஹாராணி அல்லவா?

* 230 * மஹாயாக க்ரமாராத்யா -- பாவன யாகம், சிதாக்னி குண்ட யாகம் போன்ற பெரும் யாகங்களில் வழிபடப்படுபவள் அம்பாள். அம்பாளின் பிரதிநிதியாக 64 யோகினிகளை வணங்கி வளர்க்கும் யாகம் மஹா யாகம். தந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்படும் நவாவரண வழிபாடு. க்ரமா என்பது முறையாக, கிரமமாக அந்த யாகத்தை செய்வது. 64 யோகினிகள் பெயர் தெரியுமா? சில பெயர்கள் சில இடங்களில் மாறி வரலாம்: 1. பிராம்மணி 2. சண்டிகா 3. ரௌத்ரி, 4. கௌரி 5. இந்திராணி
6.கௌமாரி 7. பைரவி 8.துர்கா 9. நாரசிம்ஹி,10. காளிகா 11. சாமுண்டா 12. சிவ தூதி 13.வாராஹி 14.கௌசிகி 15 மகா ஈஸ்வரி 16. சங்கரி 17. ஜெயந்தி 18. சர்வ மங்களா 19 காளி 20.கராளிணி 21 .மேதா 22. சிவா 23. சாகம்பரி 24. பீமா 25.சாந்தா 26 ப்ரமாரி
27.ருத்ராணி 28. அம்பிகா 29. க்ஷமா 30. தாத்ரி 31. ஸ்வாஹா 32. ஸ்வதா 33. பர்ணா 34. மஹௌந்தரி 35. கோர ரூபா 36 , மஹா காளி 37. பத்ரகாளி 38. கபாலினி 39. க்ஷேமகரி 41. சந்திரா 42. சந்திராவளி 43. பிரபஞ்சா 44. ப்ரளயந்திகா 45. பிசுவக்த்ரா 46. பிசாசி 47. ப்ரியங்கரி 48. பால விகர்மி 49. பால ப்ரமந்தநீ 50. மத நௌன் மந்தணி 51. சர்வ பூதாதமனி 52 உமா 53. தாரா 54 மஹா நித்ரா 55. விஜயா 56. ஜெயா 57. சைலபுத்ரி , 58. ஸாயந்தி , 59. துஸ்ஜயா 60. ஜெயந்திகா 61. பிடாலி 62. கூஸ்மாண்டி 63. காத்யாயனி 64. மஹா கௌரி

* 231 * மஹா பைரவ பூஜிதா - மஹா சக்தி வாய்ந்த பைரவராலேயே பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. மீண்டும் கவனப்படுத்துகிறேன். சிவனும் சக்தியும் கலந்த அம்சம் தான் பைரவர். என்ன சக்தியும் வலிமையும் உடையவர் என்று புரியும்.
ATTACHED IS THE PICTURE OF SRI LALITHAMBIGA TEMPLE AT THIRUMEYYACHCHUR.




1 comment:

  1. வணக்கம்,
    லலிதா சஹஸ்ரநாமத்தில் பத்தாம் பாடலில் வரும் "திகந்தரா" எனும் பெயரை பெண் குழந்தைக்கு சூட்டலாமா?

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...