Saturday, July 14, 2018

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (84 - 100) J.K. SIVAN

हरनेत्राग्नि सन्दग्ध काम सञ्जीवनौषधिः ।
श्रीमद्वाग्भव कूटैक स्वरूप मुखपङ्कजा ॥ 34 ॥

Haranetragni sandagdakama sanjivanaoshadhih
Shreemadvagbhavakutaika svarupa mukhapankaja -34

ஹரநேத்ராக்நி ஸந்தக்த
காம ஸஞ்ஜீவநௌஷதி: |
ஸ்ரீமத்வாக்பவ கூடைக
ஸ்வரூபமுக பங்கஜா || 34

कण्ठाधः कटिपर्यन्त मध्यकूट स्वरूपिणी ।
शक्तिकूटैक तापन्न कट्यथोभाग धारिणी ॥ 35 ॥

Kantadhah-kati paryanta madhyakuta svarupinee
Shakti-kutaikatapanna katyadhobhaga dharinee – 35

கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ || 35

मूलमन्त्रात्मिका, मूलकूट त्रय कलेबरा ।
कुलामृतैक रसिका, कुलसङ्केत पालिनी ॥ 36 ॥

Moola manthrathmikha Moola kooda thraya kalebhara
Kulamruthaika rasika Kula sanketha palini

மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய கலேபரா |
குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ || 36

कुलाङ्गना, कुलान्तःस्था, कौलिनी, कुलयोगिनी ।
अकुला, समयान्तःस्था, समयाचार तत्परा ॥ 37 ॥
Kulangana lulantasdha kaolinee kulayogini
Akula samayantasdha samayachara tatpara – 37

குலாங்கநா குலாந்தஸ்தா கௌலிநீ குல
யோகிநீ |
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார தத்பரா || 37

मूलाधारैक निलया, ब्रह्मग्रन्थि विभेदिनी ।
मणिपूरान्त रुदिता, विष्णुग्रन्थि विभेदिनी ॥ 38 ॥

Muladharaika nilaya bramhagrandhi vibhedini
Manipurantarudita vishnugrandhi vibhedine – 38

மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ |
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ || 38
++
*84* ஹரநேத்ராக்நி ஸந்தக்த காம ஸஞ்ஜீவநௌஷதி: |பாவம், மன்மதன் ஆள் தெரியாமல் பரமேஸ்வரனை சீண்டிவிட்டான். பலன்? சிவனின் நெற்றிக்கண் திறந்தது. அதிசக்தியான அக்னி வெளிப்பட்டு அடுத்த கணம் காமன் அங்கே தகனமாகி சாம்பலானான். பின் அம்பாளின் கருணையால் மன்மதன் உயிர்பெற்றான். உயிரை திரும்ப அளிக்கும் மூலிகன் சஞ்சீவினி. அவளது தாயன்பு இங்கே தெரிகிறது. சிவ சக்தி மைந்தன் அல்லவோ மன்மதன். அப்பா கோபமாக இருந்தால் அம்மா அணைத்துக் கொள்வாளே . மன்மதன் அழிந்து உயிர்பெற்றது அஞ்ஞானம் அழிந்து ஞானம் தோன்றுவதை குறிக்கும்.

*85* ஸ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூபமுக பங்கஜா --- ஸ்ரீ லலிதாம்பாளின் ரூபத்தை இனிவரும் ஸ்தோத்திரங்கள் சொல்லும். அவளது உருவம் மூன்று நுண்ணிய தோற்றங்களை உடையது. ,சிறிய, நுண்ணிய, கொஞ்சம் கூடவே நுண்ணிய, மிக சிறிய, ரொம்ப ரொம்ப சின்ன, அதி நுண்ணிய ஸ்வரூபம். காமகலா, குண்டலினி சக்தி என்று நாமம் அவளுக்கு அப்போது. அம்பாளின் முகம் 'வாக்பவகூட'' என்ற பஞ்ச தசி மந்த்ர சொல்லால் வர்ணிக்கப்படுகிறது. சிறந்த ஞானம் கொண்டவள்.
*86* கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ | -- மத்திய கூடம் என்பது பஞ்சதசி மந்திரங்களின் நடுவே உள்ள பகுதி, அம்பாளின் கழுத்திலிருந்து இடுப்புவரை வர்ணிக்கிறது. மேலே சொன்னது ஞான சக்தி பற்றி, இப்போது இச்சா சக்தி பற்றி, அடுத்தது க்ரியாசக்தி பற்றி வர்ணிப்போம்.

*87* ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணி - ''சக்தி கூட'' , என்பது மூன்று ''கூட'' ங்களில் கடைசி. அதை தான் அம்பாளின் இடுப்புக்கு கீழ் பகுதியை ஒப்பி டுகிறார் ஹயக்ரீவர்.

*88* மூலமந்த்ராத்மிகா -- எல்லாவற்றுக்கும் ஆதாரமான மந்திரம். இங்கே பஞ்சதசியை குறிக்கிறது. அம்பாள் ஸ்ரீ லலிதை தான் அதற்கு மூலம். பஞ்சதசி தான் மற்ற எல்லா மந்திரங்களுக்கும் ஆதாரம் எனும்போது அம்பாள் தானே எல்லா மந்திரங்களுக்கும் அடி நாதம் என்று தெரிகிறது. அம்பாளின் ''காமகலா '' தான் பஞ்சதசி மந்திரத்தின் மூலம். அம்பாளின் திருவுருவம் எது என்றால் பஞ்சதசி மந்திரம் என்று சொன்னால் பொருத்தம்.

*89* மூலகூடத்ரய கலேபரா |-- த்ரய என்றால் மூன்று. பஞ்சதசி மந்த்ரத்தின் மூன்று ''கூட''ங்களை சொல்கிறது. மூலம் காமகலா என்பதால் அம்பாளின் திரு உருவம், நுண்ணிய உருவம் எல்லாமே. ஹம்ச , ஸோஹம் எனும் மந்திரங்கள் ஒன்றிணைந்து தான் காமகலா மந்திரம்.

*90* குலாம்ருதைக ரஸிகா - இனிமேல் நாம் அம்பாளின் மிக மிக நுண்ணியல் உருவான குண்டலினி சக்தி பற்றி அறிவோம். யோகா சக்தியால் நமது உச்சியில் ஸஹஸ்ராரத்தில் பெருகும் அம்ருதம் தான் ''குலா'' என்பது. இது லலிதாம்பாளுக்கு மிகவும் விருப்பமானது. ஞானாம்ருதம். குண்டலினி மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்தில் சேர்ந்தபோது தான் இந்த குலாம்ருதம் வெளிவருகிறது. லலிதாம்பிகை சிவனை விட்டு விலகுவதில்லை. எனவே அவளுக்கு மஹா சுவாசினி (அதி உன்னத சுமங்கலி) என்று நாமம்.

*91* குலஸங்கேத பாலிநீ - ''குலம் '' என்றால் குடும்பத்தையும் குறிக்கும் அல்லவா? அம்பாளின் குடும்பம் அவளை தொழும் பக்தர்கள் தானே! எப்படி தொழுகிறோம் அவளை? பஞ்சதசி, ஷோடசி, காமகலா ரூபா, குண்டலினி ரூப நவாவரண மந்த்ர பூஜைகள் செயகிறோம். இதில் பஞ்சதசி, காமகலா ரூபமந்த்ரங்கள். ரஹஸ்யமானவை.
ஏன் ரஹஸ்யம் என்றால் தவறாக அதை உபயோகிப்பவர்களிடம் அது போகக்கூடாது. சமூகத்தில் நாசம் விளையும். சக்தி வாய்ந்த மந்த்ரங்கள் அல்லவா ?துஷ்ப்ரயோகம் பண்ண கூடாதே.

*92* குலாங்கநா -- அம்பாளின் குலம் எப்பேர்ப்பட்ட மேன்மை வாய்ந்தது. அத்தகையது தான் அவளைச் சேர்ந்த பக்தைகளின் குடும்பமும். அவளைப்போலவே பதிவ்ரதைகள். வெளியே பார்க்கமுடியாது. பக்தி சிரத்தையாக அம்பாளின் நவாவரண பூஜை செய்யும் பக்தர்கள் சீரும் சிறப்புமாக விளங்குவார்கள். Most of the

*93* குலாந்தஸ்தா - ''குலா'' வுக்கு இன்னொரு அர்த்தம். வேத நூல்கள். வேதத்தின் உட்பொருள் அம்பாள். சரஸ்வதி தேவியையும் இது குறிக்கிறது. குண்டலினியில் சுஷும்னா பாதையையும் (SPINAL CORD) ஐயும்
குறிக்கிறது. மொத்தத்தில் குலா என்றால் மகா சக்தி.

*94* கௌலிநீ -- குலா வழிபாட்டை கௌலா என்பது. அதன் நோக்கம், உட்பொருள், பிரதானமானவள் அம்பாள். கௌல வழிபாட்டை தாந்த்ரீக வழிபாடு என்பார்கள். சக்தியை வழிபடுவது சாக்தம். எங்கும் இருப்பவளை வழிபடுவதால் அவள் ''கௌலிநீ ''. ஸ்ரீ சக்ரத்திற்கு கௌலினி என்றும் பெயரில்.

*95* குல யோகிநீ | -- கௌலா மானசீக வழிபாடு. ஆறு சக்ரங்களில் அவளை ஆவாஹனப்படுத்தி தொழுவது. யோகத்தால் வழிபடுவது. குலா மூலாதார சக்ரம். அகுலா என்பது ஸஹஸ்ராரம். இரண்டிலும் இணைந்த அம்பாளை குலயோகிநீ என்ற நாமம் உணர்த்துகிறது.

*96* அகுலா -- அம்பாளின் குலம் எது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று யார் சொல்லமுடியும். சிவனால் தோன்றியவள். சிவனோ அநாதி. ஆதி அந்தம் இல்லாதவன். அகுல என்பது குலத்திற்கு அப்பாற்பட்டவள் என பொருள்படும். சுழுமுனை எனும் சுஷும்னா பாதையில் இரு முனையிலும் தாமரைகள். உச்சியில் இருப்பது ஸஹஸ்ராரம். அதை தான் அகுலஸஹஸ்ராரம் என்பது. ஆயிரம் இதழ்கள் தாமரை. லலிதை அதில் வீற்றிருக்கிறாள். அதனால் அகுலா என்று நாமம். சுழுமுனையில் அடியில் உள்ள தாமரைக்கு ரெண்டு இதழ்கள்.

*97* ஸமயாந்தஸ்தா -- ஸ்ரீ லலிதாம்பாள் சமய கோட்பாடுக்குள் நடுநாயகமானவள். சமயா என்றால் மனதில் வழிபடுவது. மனதிலேயே வழிபடுவது வெளி வழிபாட்டை விட மிகவும் உன்னதமானது. சக்தி வாய்ந்தது. சக்தி உபாசகர்கள் அதிகம் பேசமாட்டார்கள். இந்த வழிபாட்டை சிறந்ததாக வலியுறுத்திய ரிஷிகள் யார் தெரியுமா? வசிஷ்டர், சுகர், சனகர், சனாதனர், சனத்குமாரர். இந்த வழிபாட்டு முறையை விளக்குவது தான் தாந்த்ர பஞ்சகம். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் பிந்துவில் சிவனுக்கும் சக்திக்கும் வழிபாடு. சக்தி மூலாதாரத்திலிருந்து
ஸஹஸ்ராரத்தில் சிவனை சேர்கிறாள். ஸ்ரீ சக்ர வழிபாடு வெளியில், குண்டலினி வழிபாடு மனதில். இருவரும் சேர்ந்து செயல் புரிவது தான் படைத்தல், காத்தல், அழித்தல், பெண் ஆடினால் நாட்யம், ஆண் ஆடினால் தாண்டவம். சக்தியும் சிவனும், பரமேஸ்வரி, பரமேஸ்வரன். காமேஸ்வரி, காமேஸ்வரன். ராஜராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரன். சிவை, சிவன். பிரித்தே வழிபடக்கூடாது.ācāra.}

*98* ஸமயாசார தத்பரா -- ஸ்ரீ லலிதாம்பாவை குண்டலினி சக்ரத்தில் வழிபடுவது தான் சமயா சாரம். சிவனுக்கு பிடித்த வழிபாடு. மனதளவில் நிறைவேற்றுவது. குருவிடம் தீக்ஷை, உபதேசம் தேவை. தக்க பக்குவ நிலை வந்தபிறகே குருவின் தீக்ஷை பெறமுடியும். மஹா வேத ஸம்ஸ்காரம் என்று ஒரு வழிபாடு. அதை நவராத்திரியின் போது மஹா நவமி, அதாவது ஒன்பதாம் நாள் மேற்கொள்வார்கள். அதற்கென்று ஒரு தனி கட்டுப்பாடான வழிமுறை இருக்கிறது.

*99* மூலாதாரைக நிலயா -- ஸ்ரீ அம்பாள் மூலாதார சக்ரத்தில் உறைபவள் . அதனால் தான் ஆதார சக்ரம் என்பது.

*100* ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ | -- ''க்ரந்தி' என்றால் முடிச்சு. அம்பாள் ப்ரஹ்ம கிரந்தி எனும் முடிச்சை பிளப்பவள் . குண்டலினி பாதையில் மூன்று இடத்தில் மூன்று முடிச்சுகள் தடையாக இருக்கும். அவற்றை பிளந்து மேலே மற்ற சக்ரங்களை அடையவேண்டும். தொடரவேண்டும். முதலாவது தடை முடிச்சு மூலாதாரத்திலிருந்து அடுத்த ஸ்வாதிஷ்டான சக்ரத்தின் கீழ் இருப்பது. அதன் பெயர் ப்ரம்ம க்ரந்தி. குண்டலினி அதை தகர்த்து மேலே செல்லவேண்டும்.

அம்பாளை பற்றி இன்னும் அறிவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...