Monday, July 23, 2018

MEDITATION





            ''ஹம்  ஸா   ஸோ ஹம்''  ....J.K SIVAN

ராமச்சந்த்ர ராவுக்கு  தலை வெடித்து விடும் போல ஆகிவிட்டது. ,மூன்று நாட்களாக  கம்பை  ஊன்றிக்கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்.

உலக வாழ்க்கையில் ஒவ்வொன்றாக  இது இல்லை இது இல்லை என்று நிறைய விஷயங்கள் நம்மை விட்டு விலகவேண்டும். காது கேட்காமல் போனது. கண் மங்கியது, நினைவு சரியாக இல்லை, மறதி அதிகமாகி தூக்கம்  வசமாகியது. உணவில் நாட்டம் இல்லை. ஜீரணிக்கவில்லை. நிறைய சமாச்சாரங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நிறைய பல் காணோம்.  ரெண்டு காலையும் நம்பமுடியவில்லை.. கீழே தள்ளிவிடுகிறது. மூன்றாம் காலாக கம்பு அவசியமாகிவிட்டது.  ராவ் நிலை நமக்கும் நிச்சயம். அவருக்கு இப்போது ஞானத்தில் நாட்டம். 

பாவம்  விடாமல்   கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஸோஹம்   ஹம்சம்  இது என்ன அர்த்தம். மந்திரங்களில் வருகிறதே?

ஸோஹம்  என்றால்  ''அவன் நான்'' ''நான் அவன்''  என்று அர்த்தம். ஸா : அவன். அஹம் : நான்.   பரமஹம்ஸ  சன்னியாஸ  மந்திரம்.  ஜீவ  பரப்பிரம்ம  ஐக்கியம் உணர்த்தும் தத்வம்.  அபேத போத வாக்கியம் என்பது இதை தான்.  ஈசாவாஸ்ய உபநிஷத் சொல்லும்  ''ஸோஹமாஸ்மி ''. 

ஸோஹம்  தான்  ஓம்.  பிரணவ மந்த்ரம்.  ஹம்ஸா  ஸோஹம்  மந்திரம் ஜெபிக்குமுன் இந்த  தேகம் நான் இல்லை என்று உணர்ந்து கொள்ள  ''நாஹம் இதம் சரீரம்''  என்று மந்த்ரம் ஜபம் செய்துவிட்டு பிறகு தான்  ஹம்ஸா ஸோஹம்  என்ற  அடுத்த  மேல் படிக்கு செல்லவேண்டும்.இந்த மந்த்ரங்கள் மனதுக்குள்ளேயே சொல்லவேண்டியவை. உரக்க கத்தவேண்டாம். அர்த்தம் தெரிந்து சொல்லவேண்டியது. உணர்ந்து இப்படி சொல்லிக்கொண்டே வந்தால் வித்யாசம் தெரியும். 

எந்த கவலையும் மனதில் இருக்க கூடாது.  ஒரு சிங்கம் பசியோடு வாயைப் பிளந்துகொண்டு ''வா அப்பனே எனக்கு  நீ காலை உண்வு''  என்று நின்றாலும் கூட  ''நான்''  இந்த சிங்கம் தேடும் உடல் அல்ல என்ற நினைப்பு வரவேண்டும்.  வருமா?
வந்தவனுக்கு பற்று நீங்கும். அவன்  வேதாந்தி. சிங்கம் அவனைச் சுற்றிவந்து வேறு இடத்தில் போய் உணவு தேடும்.

ஜீவாத்மா இந்த ஸோஹம் மந்த்ரத்தை  21600 தடவை ஒரு நாளில் மூச்சாக வெளிப்படுத்துகிறது. தூக்கத்தில்  குறட்டை விட்டாலும் கூட. நாம் அதை உணர்வதில்லை.  மூச்சு உள்ளே இழுக்கும்போது ''ஸோ '' வெளியேறும்போது ''ஹம் 
இது தான் ஜபம். பத்துமணிநேரமாவது நாம் உணர்ந்து  சுவாசிக்க வேண்டும். சேஷாத்திரி ஸ்வாமிகள் சதா சர்வகாலமும் இதை மனதில் உச்சரிப்பவர்.அவர் மூச்சில் கலந்த ஆத்ம பலம் தரும் மந்திரம்.  இது   உபநிஷத் மஹாவாக்யத்தில் ஒன்றான  ''அஹம் ப்ரம்ம அஸ்மி '' க்கு  ஈடானது.  இந்த பூமியில்  நாம் எத்தனை காலம் வாழ்கிறோம் என்பதை இந்த ஸோஹம்  பிராணாயாம  மூச்சுதான் நிர்ணயிக்கிறது.  மூச்சு ஒரே சீராக உள்ளேயும் வெளியேயும்  நகரட்டும் . மனம் ஒருமித்து இந்த மந்த்ரம் ஜெபிக்கவேண்டும்.

உள்ளிழுக்கும் மூச்சு  ''ஹம் '' வெளியேறுவது ''ஸா ''.  சித்த சுத்திக்கு இன்றியமையாத மந்திரம் இது. இதற்கு பலர்  பலவிதமான அர்த்தங்களை கொடுப்பது இருட்டில் கருப்பு பூனையை குருடன் தேடுவது. சாஸ்த்ர பிரமாணத்தை குரு எப்படி உபதேசிக்கிக்கிறாரோ அப்படி ஜெபிக்கவேண்டும். அது போதும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...