Tuesday, July 10, 2018

KUDHAMBAI SITHTHAR





குதம்பை சித்தர் - J.K SIVAN

குதம்பை சித்தரின் பாடல்களுக்கு அர்த்தம் சொல்ல அவசியமே இல்லை. எளிதில் புரியும். ரெண்டடி பாடல்கள் தானே. அதில் ஒன்று திரும்ப திரும்ப வருவது.

''தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.

திருமூர்த்திகளான ப்ரம்மா விஷ்ணு சிவன் தான் எல்லா தேவர்களும், சித்தர்களும் தேடும் தெய்வம் ஒன்றே பலவானது.
சத்தாகிச் சித்தாகித் தாவர சங்கமமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.22
எதிலும் ஆதாரம் அந்த பரம ஆத்மா தான்.

உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்.23

அந்த பரமாத்மாவை தான் எல்லா உருவமும் அருவமும் ஆகும்.
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.24

பஞ்ச பூதங்களும் அந்த பரமாத்மாவின் ஸ்வரூபங்கள் தான்.
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி.25

அழிவில் தான் தோற்றம். தோற்றத்தின் முடிவு அழிவு . பழையன கழிதலும் புதியன புகுதலும் அந்த சிவன் ஒருவனாலே தான்.
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது அப்பட்டமான உண்மை.

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
ஆரணஞ் சொல்லுமடி.27
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி.28

காரணம் இன்றி காரியம் இல்லை. இது உலக வழக்கு.
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி.29

தோற்றமான எல்லாவற்றுக்கும் ஜகத் என்று பெயர். அதை ஊக்குவிக்கும் தோற்றம் மறைவு இல்லாத சக்தி மஹத். இது தான் எல்லா வேதங்களும் கூறுவது .
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.30

படைத்தல், காதல், அழைத்தல், மறைத்தல், அருளுதல் இந்த ஐந்தையும் புரிபவனை தான் வேதங்கள் போற்றுகிறது.
யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி.31
அடேயப்பா, இந்த ப்ரபஞ்சத்தில் தான் எத்தனை உயிர்கள். யானை போன்ற பெரிது முதல் எறும்பு வரை, எவ்வளவு விதமான ல் ஜீவராசிகள் அவன் படைக்கிறான்.


மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணளவு வில்லையடி குதம்பாய்
எண்ணளவு வில்லையடி.32

ஊர்கள், உலகம் என்று மண்ணால் அளவு காட்டலாம். ஆனால் அவற்றை படைக்கும் அவனை, அவன் காரியங்களை, எண்ணுவதற்கு இன்னும் ஒரு அளவு, அளவுகோல், கிடைக்கவில்லை.

அழிக்கமுடியாத
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.33

ஆக்கம் காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் நடத்தும் அந்த தோற்றம் மறைவு இல்லாத பரஞ்சோதியை, ஒளியாக கும்பிடுவோம்.
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.34

நமக்கு உயிர், உள்ளம், எண்ணம், புத்தி, தந்தவன் அந்த பரமேஸ்வரன். அவனை வணங்குவோம்.
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி.35
அவனே ஒளி ஒலி, குணம், குணம் இல்லாதது, எல்லாமானவன் , சத்தியம்,



குதம்பை சித்தரை அடிக்கடி வணங்கி அருள்வாக்கு பெறுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...