Thursday, July 26, 2018

LALITHA SAHASRANAMAM



ஒரு  சின்ன விஷய தானம்   J.K. SIVAN 

அம்பாளின் கருணை ப்ரத்யக்ஷமாக எனக்கு கிடைத்ததற்கு  ஒரு சின்ன  உதாரணம்.  நான் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  விளக்கம் எழுத  ஆரம்பித்து முதல் கட்டுரை அனுப்பினேன்.  வயதான ஒரு குரல் டெலிபோனில் வந்தது. ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி, நாற்பத்தைந்து ஐம்பது வருஷங்களாக சக்தி உபாசகர்.   தினமும் ஏழுமணி நேரங்களாவது லலிதா பூஜை வழிபாடு செய்துவிட்டு உண்பவர்.   இப்போது பொன்னேரியில் வசிக்கும்  அவர் 
 அடிக்கடி என்னோடு பேசுபவராகி விட்டார். மகா பெரியவளோடு நெருக்கமான ஒரு குடும்பம்.

இன்று பஞ்ச பஞ்சிகா எனும் ஐந்து ஐந்து  தேவி நாமங்களை பற்றி அறிந்தேன். இந்த பூஜை நாமாவளி  நவாவரண பூஜைக்கு பிறகு உச்சாடனம் செய்வது.  குறிப்பாக இந்த ஐந்தைந்து பிரிவுகளும் வரும் நாமங்களை மட்டும் அவரிடமிருந்து இன்று அறிந்து விஷய தானம் செய்கிறேன்.

பஞ்ச பஞ்சிகா  பிரிவுகள் 
1.லக்ஷ்மி பஞ்சகம் 
2.கோச பஞ்சகம் 
3.கல்பலதா பஞ்சகம் 
4.காமத்துக்கா பஞ்சகம் 
5.ரத்ன பஞ்சகம் 

ஒவ்வொரு பஞ்சகத்திலும் வரும் நாமங்கள் 

1. லக்ஷ்மி பஞ்சகம்:      ஸ்ரீ வித்யா லக்ஷ்மி,  ஸ்ரீ லக்ஷ்மி,  கமலாலய  மஹா லக்ஷ்மி,   த்ரிசக்தி மஹாலக்ஷ்மி,  சாம்ராஜ்ய லக்ஷ்மி 

2. கோச பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கோஸி ,  பரஞ்ஜோதி  கோஸி , பரா நிஷ்கள சாம்பவ கோஸி ,  அஜபா கோஸி  மாத்ருகா கோஸி 

3.கல்பலதா பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கல்பலதா,  துக்தா கல்பலதா , ஸரஸ்வதி கல்பலதா , திரிபுரா கல்பலதா,  பஞ்ச பாணேஸ்வரி  கல்பலதா 

4. காமதுகா பஞ்சகம்:  ஸ்ரீவித்யா மஹா திரிபுரசுந்தரி,  அமிர்த பீடேஸ்வரி,  சுதா, அம்ருதேஸ்வரி, அன்னபூர்ணா.

5. ரத்ன பஞ்சகம்:  ஸ்ரீ வித்யா ரத்னா, சித்த லக்ஷ்மி ரத்னா, புவனேஸ்வரி ரத்னா,  ராஜமாதங்கி ரத்நா , வாராஹி ரத்நா 
ஸ்ரீ லலிதாம்பா நவாவர்ணமோ  சக்தி வழிபாடோ ஒரு பெரிய கடல்.  முத்துக்கள் நவமணிகள் நிறைந்தது. 

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...