Thursday, July 5, 2018

KONERI RAJAPURAM TEMPLE



திருநல்லம் கைலாசநாதரை மீட்போம்.
J.K. SIVAN

திருநல்லத்தில் ஏக போகமாக அலங்காரம். காலை வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தாலும் மரங்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில் வெயில் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. கிராமத்தின் ஒரே பாதை முழுதும், வழியெல்லாம் தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் தென்னங்குருத்து மாவிலைகள், வாழைமரங்கள் கட்டி மலர் பந்தல் கோவில் கட்டும் இடம் வரை பரந்திருந்தது. நறுமணம் வீச அகில் புகை வளர்த்தார்கள். காற்றில் மணத்தது. வழியெங்கும் நீர் தெளித்து சுத்தமாக நடு வீடு போல காணப்பட்டது.

அழகுக்கு அழகு செய்வது போல் பெரிய மாக்கோலங்கள் பல பல வண்ணம் குழைத்து கண்ணை கவரும்படியாக பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருந்தார்கள் . திருநல்லம் கிராம நுழைவாயிலில் மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி வரவேற்பு. ஊர் பிரமுகர்கள் கை கட்டி நின்றனர். கையில் பெரிய தாம்பாளங்களில் பழங்கள், வெற்றிலை பாக்கு இனிப்புகள், வாத்திய கோஷ்டி தங்கள் கைவரிசையை காட்டின. பெரிய பெரிய பாத்திரங்களில் பொறி கடலை, வெல்லம் நீர் மோர் பானகம் எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் அளித்தனர்.

நாட்டிய பெண்கள் ஒரு ஓரத்தில் ''மதன காம ராஜன்'' தெருக்கூத்து ஆடிக்கொண்
டிருந்தனர். என்ன விசேஷம் இன்று?

'' நம்ம ஊர் கோவில் வேலை புதுசு பண்றாங்க , பெரிய ராணியம்மா வராங்க. அதோ வந்துவிட்டது பல்லக்கு'' . எல்லோர் விழியும் பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. சோழ பெரிய மஹாராணி, வரப்போகிறார் என்ற சேதி சில நாட்களுக்கு முன்பே காதில் விழுந்ததால் மக்கள் வெள்ளம். பெரிய மகாராணியை பார்த்தால் ஸ்ரீ லலிதாம்
பிகையை பார்த்தது போல் என்பார்கள். எத்தனை கோவில்களுக்கு தான தர்மம். நிலம், விளக்குகள், அர்ச்சர்களுக்கு நிலம், மான்யம்... அடடா... பழங்கால காரை செங்கல் கோவில் எல்லாம் கல்லாக மாத்தறாங்க அந்த தெய்வம். இங்கே உமாமஹேஸ்வரர் கோவில் புதுசாவுது. உள்ளே ராஜா கண்டரா தித்தர் சிலை சாமி கும்புடுறாப்புலே வைக்கிறாங்க.''

பல்லக்கு திரைச்சீலையை விலக்கி அந்த முதிய சோழ ராணி வெளியே பார்த்தாள் . அவள் எதிர்பார்த்த கோபுரம் அங்கே விரைவில் தோன்றப்போகிறது. வேலைப்
பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தனது கணவர் சிவபாதசேகரன் சிவபக்தி செல்வர் கண்டராதித்த தேவரின் நினைவாக அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கு கண்டராதித்த புரம் என்று பெயர் சூட்டப்போகிறார்.

ரெண்டு மூன்று முறை நடராஜர் சிலை வடித்தது திருப்தியாக இல்லை.சிற்பிக்கு அரசர் ஏற்கனவே கட்டளையிட்டுவிட்டார். இந்த முறை நடராஜர் சிற்பம் சரியாக அமையவில்லையென்றால் அவன் உயிர் பலியாகும் . சிற்பி பயத்தில் பொறுப்பை ஏற்றோ, உபவாசம் இருந்து சிலை வடித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ ஒரு கிழ தம்பதியர் சிற்பி யின் இல்லத்துக்கு வந்தனர்.

கவலையோடு தனது உயிரைப் பணயம் வைத்து நடராஜர் சிலை வடிக்க பஞ்சலோகங்
களை காய்ச்சி வார்படம் செய்யும் நேரத்தில் வந்த கிழ தம்பதியர் வந்து பேச்சுக்கு கொடுப்பது சிற்பிக்கு எரிச்சலை தந்தது. .

''யார் நீங்கள், என்ன வேண்டும் இங்கே ? முக்கிய ராஜ காரியம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் உங்களோடு நேரம் ஒதுக்க முடியாது. வந்த விஷயம் சொல்லுங்கள் ?'' கோபமாக தான் சிற்பி பேசினான்.

''திரு நல்லம் க்ஷேத்ர தரிசனம் வந்தோம். களைப்பாக இருந்தது இங்கே கொஞ்சம் நேரம் அமர வந்தோம். நீ தான் நடராஜா சிலை வடிக்கிறாயாமே அதை பார்க்க வந்தோம்.

''ஐயா பெரியவரே, தொண தொணவென்று பேசாமல் இருக்கிறீர்களா, இப்போது தான் வார்ப்படம் தயாராகிறது. இப்போது நடராஜர் சிலை பார்க்கமுடியாது. சென்று அப்புறம் வாருங்கள்''

ஓ அப்படியா. தாகமாக இருக்கிறதே கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருவாயா மகனே? கால் நீட்டி சற்று உட்காருகிறோம்'' முதியவர் சொன்னார்.

சிற்பிக்கு எரிச்சல் . இங்கே உட்காரமுடியாது. எழுந்திருந்து செல்லுங்கள்.

''தாகமாக இருக்கிறது, என்று தண்ணீர் கேட்டோமே அப்பா''

''ஆமாம் இங்கே தண்ணீர்ப்பந்தல் வைத்திருக்கிறேன் வருவோர் போவோர்க்கு உபச்சாரம் செய்ய. வேண்டுமானால் இதோ கொதிக்கிறதே உலோக குழம்பு அது நிறைய இருக்கிறது, தாகம் தீர தாராளமாக எடுத்து குடியுங்கள்.'' கோபத்தோடு சொல்லிவிட்டு சிற்பி எழுந்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டுவர போனான்.

''ஆஹா சரியப்பா, நீ சொல்கிறபடியே செயகிறோம். நீ ரொம்ப நல்லவன்.'' என்கிறார்கள் இருவரும்.

சிற்பி தண்ணீர் சொம்புடன் திரும்பி வந்தபோது அந்த கொதிக்கும் பஞ்சலோக குழம்பை காணோம். அந்த முதியவர் கிழவி இருவரும் இருந்த இடத்தில் நடராஜர் அம்பாள் சிலைகள் தான் இருந்தது. அவர்கள் அந்த உலோக குழம்பை அவன் சொல்லியபடி குடித்து சிலையாகி விட்டார்களா????

இந்த செய்தி அரண்மனைக்கு எட்டி பெரிய மஹாராணி செம்பியன் மாதேவி நேரே வந்துவிட்டார்கள் திரு நல்லம் க்ஷேத்ரத்துக்கு. இனி அந்த நடராஜரின் அழகை படத்தில் நாம் பார்ப்போம்.

கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் அற்புதமான நடராஜனின் கதை மேலே சொன்னேன். அவன் அழகைப் பார்த்து வியந்தேன். கூடவே ஒரு கொசுறு செய்தியும் கிடைத்து புல்லரிக்கவைத்தது.

பெரிய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு வட மேற்கே ஊரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. எஸ். புதூரிலிருந்து லிருந்து கொடியமங்கலம் வழியாக கோனேரி ராஜபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .

திருநல்லம் என்ற புராணப்பெயர் படைத்த ஊரில் பிற்காலத்தில் ஒரு சோழமன்னனின் அதிகாரி கோனேரி ராஜன் என்பவன் பொறுப்பேற்று நிர்வகித்தான். பிரதான சிவன் உமாமஹேஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்து நிறைய தான தர்மங்கள் அளித்து அந்த கிராமத்தை தனது பெயருள்ளதாக மாற்றினான். திரு நல்லம் காலப்போக்கில்
கோனேரி ராஜபுரம் ஆகிவிட்டது. உமாமஹேஸ்வரர் ஆலயம் பெரிதாக சோழ மஹாராணி செம்பியன் மாதேவியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு கற்றளி ஆலயமாகி பின்னர் பல அரசர்களால் பராமரிக்கப்பட்டு பெரிய கோவிலாக இன்று நமக்கு காட்சி தருகிறது. அந்த கோவிலை சுற்றி ஒரு சில பழைய கோவில்கள் இருந்தன .

அப்படி சுற்றியிருந்த சில கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் முழுதுமாக க்ஷீணமாகி தற்போது ஒரு சில பக்தர்களால் ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு புதிய சிறிய கோவிலாக வளர்கிறது. கைலாச நாதர் இருந்த கோவில் அது. முழுதும் மறைந்து ஆலயத்தில் இருந்த சிலைகள் சிலரால் பாதுகாக்கப்பட்டு கோனேரிராஜபுரம் உமாமஹேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள். 150 வருடம் முன்பு வடக்கு தெரு ஸ்ரீ சியாமா மாமா என்பவர் ஸ்ரீ ராமசாமி அய்யர் டிரஸ்டி ஆக இருந்த காலத்தில் பெரிய கோயில் சுற்று பிரகாரத்தில் இந்த கோயில் சுவாமிகள் அனைவரையும் முறைப்படி பிரதிஷ்டை செய்தார். ஒரு கோயில் பெரிய கோயில் என்று அழைக்க பட்டால் இன்னும் சில கோயில் உள்ளது என்று தானே அர்த்தம்! இவ்விரண்டு சிவன் கோயில்கள் தவிர வேறு 3 கோயில்கள் உள்ளன.

கோவிலோ சிலைகளோ முழுதும் காணாமல் போனாலும் கோவில் இருந்ததற்கு சான்றாக ஒரு பெரிய பாம்பு புற்று ஒன்று செம்பியன் மாதேவி காலத்து செங்கல்லோடு நிற்கிறது. நல்லவேளை நாகராஜன் காப்பாற்றினான். இல்லையென்றால் அந்த இடமும் அடையாளம் தெரியாமல் போயிருக்கும். செம்பியன் மாதேவி கால செங்கல்லும் அவளோடு சேர்ந்து மறைந்திருக்கும். அபேஸ் பண்ணியிருப்பார்கள்.

ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரி ராஜபுரம் 18 வாத்திமா கிராமங்
களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ரஹாரமாக குருக்கள் மற்றும் பாரிஜாக்கர்கள் பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே எஞ்சியவை.

கோனேரி ராஜபுரம் நிறைய சாம வேதக்காரர்கள் நிறைந்த ஊர். 1950 களில் ஸ்ரீ மஹா பெரியவா கும்பகோணத்தில் முகாம் இருந்த காலத்தில் இங்கு வந்து அநேகமாக எல்லா வீடுகளிலும் தங்கி ஆசிர்வதித்து உள்ளார். உமா மகேஸ்வர கோயில் ஸ்தல வ்ருக்ஷம் அரசமரம். குளக்கரையில் பலி பீடமும் மஹா வில்வ மரமும் உள்ளன.

ஸ்ரீ கைலாசநாதர் முன்பு தெற்கு முகம்.இப்போது மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்ய போகிறார்கள்.
இன்னமும் கூட அழியாமல் இருக்கும் மேலே சொல்லப்பட்ட ம்பு புற்று தான் கைலாசநாதர் கோயில் மீண்டும் தற்போது எழுவதற்கு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீ கைலாசநாதர் தன் கோயிலை தானே கட்டி கொள்கிறார் என்று சொன்னாலும் நாம் அனைவரும் செம்பியன் மாதேவி வாரிசு
களாக இதில் பங்கு கொண்டு கைலாசநாதர் கோவிலை நிர்மாணித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வோமே.

ஒருவேளை ஒரிஜினல் கைலாச நாதர் சிலை நூறாண்டுகளுக்கு முன்பே ஜாக்கிரதையாக உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு பாதுகாப்பிற்காக கொண்டு சென்று வைக்கப்பட்டிருந்த அந்த சிலையோ, அல்லது புதிதாக வடிக்கப்பட்ட ஒரு கைலாச நாதரோ நிச்சயம் இந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டு அருள் ஆசி வழங்குவது நிச்சயம். மூலவர் ஸ்ரீ கைலாச
நாதர், அம்பாள் ஸ்ரீ சுந்தர குஜாம்பா. பக்தர்கள் அனைவரையும் ரக்ஷிப்பது .நிச்சயம். கோவில் இருந்த இடத்தை காப்பாற்றி கொடுத்த நாகராஜன் செங்கல் கோவிலும் புதிதாக அவனது புற்றை தொந்தரவு செய்யாமல் உருவாகிறது. பெரிய புற்று. படத்தை பார்த்தால் தெரியும்.

23.04.2018 அன்று பூமி பூஜை போடப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக புனருத்தாரணம்
,ஜீரணோத்தாரணம் நிற்காமல் நடந்து வருகிறது. ரொம்ப சிரமம் நிதி வசதி தான்.
சில நல்லுள்ளங்கள் ஒன்று சேர்ந்து அந்த ஆலயத்தை புதுப்பிக்கிறார்கள் என்றேன், அதில் ஒருவரான ஸ்ரீ மோகன் என்ற பக்தர் முன்னின்று இதை கவனிக்கிறார். இதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் ஸ்ரத்தையாக வங்கி கணக்கு துவங்கி நன்கொடை பெற்று கோவில் வளர்கிறது. அந்த வங்கிக்கணக்கின் விபரம்:

A/C NAME :SRI KAILASANATHAR SAMAYA SEVA POTHU NALA MANDRAM
A/C TYPE : CURRENT ACCOUNT A/C NUMBER:510909010094663 IFSC CODE:CIUB0000014










ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரிராஜபுரம் 18 வாத்திமா கிராமங்களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ராஹாரமாக குருக்கள் மற்றும் பாரிஜாக்கர்கள் பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே உள்ளன. பழங்கால பண்டைய புராதன கோவில்களை மீட்பது நமது கடமை. நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் அல்லவா? கோனேரி ராஜபுரம் ஊரை சேர்ந்தவர்களுக்கு இது முக்கிய அறிவிப்பு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...