Tuesday, July 24, 2018

VIDHURANEETHI



 விதுர நீதி. 2     J.K. SIVAN                                                     
                                    

          விதுரா எனக்கு அறிவுரை வழங்கு''

துரியோதனன் கொடுத்த தொல்லை  தாங்கமுடியாமல் திருதராஷ்டிரன் புத்திரபாசத்தால் அவனுடைய சாதிக்கு உட்பட்டு, சஞ்சயனை அனுப்பி  யுதிஷ்டிரன் மற்றும் பாண்டவர்களை தனது புதிய மாளிகைக்கு விருந்தினராவ வரவழைக்க  அழைப்பு விடுத்தான். விருந்தினராக வந்த பாண்டவரை எப்படியாவது மடக்கி  சூதாட வைத்து பாண்டவர்களை ஏமாற்றி அவர்களது ராஜ்யத்தை பறிக்க திட்டம். இதற்கு முழு முதல்  சகுனி, அவனது திட்டம் இது. சூதில் அவனை வெல்ல எவராலும் முடியாது. யுதிஷ்டிரன் தோற்பது நிச்சயம் என்று தெரிந்து திருதராஷ்டிரன் அழைப்பு விடுத்தான். 


கேட்பார் பேச்சு கேட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதற்கு திருதராஷ்டிரன் ஒரு தக்க உதாரணம். துரியோதனன் மேல் உள்ள கண்மூடித்தனமாக பாசம், சகுனி, கர்ணன் துச்சாதனன் என்று பலர்  திருதராஷ்டிரன்  மனதில் இருந்த கொஞ்சநஞ்சம் நேர்மை, நீதி, நியாயம் எல்லாவற்றையும் அழித்து சஞ்சயனை பாண்டவர்களிடம் அனுப்பி ஹஸ்தினாபுரம் மாளிகைக்கு அழைக்கிறான். சஞ்சயன் வெற்றியோடு வந்தால் துரியோதனன் திட்டம் பலிக்கும், யுதிஷ்டிரன் நிராகரித்தால்?  எப்படி துரியோதனனை சமாளிப்பது.  மனம் வியாகூலம் அடைந்து  கண்ணற்ற திருதராஷ்டிரன் சஞ்சயன் பாண்டவர்கள் பதிலோடு வந்துவிட்டான் நாளை  அரசவையில் யுதிஷ்டிரன் பதில் படிக்கப்படும்.  சஞ்சலம் நிறைந்த மனதில்  திருதராஷ்டிரன் நீதிமான் தர்மவான் விதுரனை அழைத்து அவன் அறிவுரை கேட்பது தான்  விதுர நீதி.

அவன் சொல்லை யுதிஷ்டிரன் தட்டமாட்டான் என்று தெரியும். இருந்தும் மனதில் தான் செய்த காரியம் அவனை உறுத்தியது.  தனது தம்பி விதுரனை அழைத்து அவனிடம் அறிவுரை கேட்கிறான்.  சஞ்சயன் திரும்பி வந்துவிட்டான். என்ன பதில் கொண்டுவந்தான். யுதிஷ்டிரன் அழைப்பை ஏற்றானா? இல்லையா?  என்று மனம் அலைபாய்ந்தது திருதராஷ்டிரனுக்கு.  மேலே சம்பாஷணையை முதல் கட்டுரையிலிருந்து தொடர்வோம்.

विदुर उवाच ।
अभियुक्तं बलवता दुर्बलं हीनसाधनम् ।
हृतस्वं कामिनं चोरमाविशन्ति प्रजागराः ॥ १३॥

कच्चिदेतैर्महादोषैर्न स्पृष्टोऽसि नराधिप ।
कच्चिन्न परवित्तेषु गृध्यन्विपरितप्यसे ॥ १४॥

விதுரன் பேசுகிறான். 
अभियुक्तं बलवता दुर्बलं हीनसाधनम् ।हीनसाधनम् हृतस्वं कामिनं चोरमाविशन्ति प्रजागराः ॥ १३॥
कच्चिदेतैर्महादोषैर्न स्पृष्टोऽसि नराधिप । कच्चिन्न परवित्तेषु गृध्यन्विपरितप्यसे ॥ १४॥

மஹாராஜா, தூக்கமின்மை, திருடனை தூங்கவிடாது. பேராசைக்காரனை, சொத்து சுதந்தரம் எல்லாம் இழந்தவனை, தோல்வியை கண்டவனை, பலமற்று எதிரியிடம் படுதோல்வி அடைந்தவனை தூக்கமில்லாமல் பண்ணிவிடும். மஹாராஜா எதற்கு உங்களுக்கு இதெல்லாம் வரப்போகிறது. அவசியமே இல்லையே. நீங்கள் என்ன மற்றவர் சொத்துக்காக பேராசைப்பட்டு பெருமூச்சு விடுபவரா??'' என்கிறார் விதுரர்.

धृतराष्ट्र उवाच ।
 श्रोतुमिच्छामि ते धर्म्यं परं नैःश्रेयसं वचः । अस्मिन्राजर्षिवंशे हि त्वमेकः प्राज्ञसम्मतः ॥ १५॥

" என் அன்பு தம்பி விதுரா, நீ எனக்கு தர்ம வழியைச்  சொல். உயர் பண்பான செயல்கள் பற்றி சொல். ரிஷிகள் ஞானிகள், ஆச்சார்யர்கள் எல்லோருமே உன்னைத்தானே விதுரா, சிறந்த ஞானி, தர்மவான், நியாயஸ்தன் என்கிறார்கள். ஆகவே நீ எனக்கு அறிவுரை கூறு.


 विदुर उवाच ।
 रजा लक्षणसम्पन्नस्त्रैलोक्यस्याधिपो भवेत् ।
भवेत् प्रेष्यस्ते प्रेषितश्चैव धृतराष्ट्र युधिष्ठिरः ॥

'திருதராஷ்ட்ர மஹாராஜா,   யுதிஷ்டிரன்  நேர்மையானவன், நியாயவான், தர்மவான், இன்னும் என்ன  தகுதி வேண்டும் ஒரு அரசனுக்கு மொன்று லோகங்களையும் ஆள.   இருந்தபோதிலும்,  உன்னோடு இது;தகைய சிறந்த அரசனை அருகில் வைத்துக்கொண்டு பயன் பெறாமல்  நீங்கள் அவனை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டீர்கள். ''  என்றான் விதுரன். உண்மையைச் சொல்லவேண்டுமானால் யுதிஷ்டிரனிடம் இருக்கும்  குணாதிசயங்கள் தங்களிடம் இருப்பதற்கு நேர் மாறானவை.  உங்களை எடுத்துக்கொண்டால்  நீங்கள் உரிமையுள்ளவர், நியாயமாக இந்த நாட்டின் அரசராக இருக்க தகுதி கொண்டவர்,  எனினும் கண் பார்வை இழந்தவராதலால் உங்களுக்கும் ஆளும் உரிமை இல்லாமல் போய்விட்டது. மற்றவரிடம் பொறுப்பை தரவேண்டி ஆகிவிட்டது.


॥ विपरीततरश्च त्वं भागधेये न सम्मतः ।३
अर्चिषां प्रक्षयाच्चैव धर्मात्मा धर्मकोविदः ॥

 आनृशंस्यादनुक्रोशाद्धर्मात्सत्यात्पराक्रमात् ।
 गुरुत्वात्त्वयि सम्प्रेक्ष्य बहून्क्लेषांस्तितिक्षते ॥-

॥ दुर्योधने सौबले च कर्णे दुःशासने तथा
 एतेष्वैश्वर्यमाधाय कथं त्वं भूतिमिच्छसि ॥-

யுதிஷ்டிரன் யாரையும் எதிர்க்காதவன். கருணை உள்ளம் கொண்டவன். நேர்மையானவன். சத்தியத்தை தர்மத்தை  மதிப்பவன், சக்திமான், உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் உள்ளவன்,  இதனால் எத்தனையோ தீங்குகள் இழைத்தாலும் தவறுகள் நடந்தாலும் பொறுமையாக ஏற்றுக்கொள்பவன்.

 நீங்கள் துரியோதனன், சகுனியிடம், கர்ணனிடம், துச்சாதனனிடம் பொறுப்பை அளித்துவிட்டு, ராஜ்யபாரம் அவர்கள் நடத்த செய்தால்  சுபிக்ஷம் எங்கிருந்து பெறமுடியும்?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...