Tuesday, August 14, 2018

SUR SAGARAM


சூர் சாகரம் J.K. SIVAN

அவனருளால் அவன் தாள் வணங்கி...

ஸ்ரீ கிருஷ்ணன் ஒருவனே கதி மோக்ஷம். அவன் காலை கெட்டியாக பிடித்துக் கொள் .குரங்கு குட்டி தாயை பிடித்துக் கொள்வது போல். பிறகு நம்மை கரை சேர்ப்பது அவன் கடமையாகி விடுகிறது. இது தான் சரணாகதித்வம்.
சூர்தாஸ் அற்புதமான கிருஷ்ண பக்தர். பக்திக்கும் படிப்புக்கும் எனக்கும் ஒஸாமாவிற்கும் உள்ள சம்பந்தம் தான். சூர்தாஸ் தனது மனதிற்கு கூறுகின்ற அறிவுரை நமக்காக சொல்லப்பட்டது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.

'ஏ மனமே, பிருந்தாவன நந்தகோபன் குமரன் கிருஷ்ணனின் தாமரை மலர்பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள் . அதற்குப்பிறகு எந்த பயமும் உனக்குள் இருக்காது. இந்த மனித ஜென்மம் மீண்டும் கிடைக்குமோ கிடைக் காதோ. கிடைத்தது உன் பாக்யம். ஏதோ நல்ல காரியம் எப்போதோ செய்திருக்கிறாய், இல்லையென்றால் இந்த உயர்ந்த மனிதப் பிறவியை எடுக்கமுடியுமா உன்னால்? புல்லாகி பூண்டாகி, புழுவாகி பல் விருக்ஷமாகி எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தவர்கள் நாம். அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது.... அல்லவா?

அப்படி மனிதனாக உயர்ந்த பிறவி எடுத்தவன் எவ்வளவு உயர்ந்த எண்ணங்கள் கொண்ட வனாக இருக்கவேண்டும். எவ்வளவு உயர்ச்சி தரும் செயல்களை புரியவேண்டும்? உன்னத மகான்களை பின்பற்றி இந்த சம்சார கடலை, பவ சாகரத்தை கடக்க வேண்டும்..

கிருஷ்ணா, நான் பகலும் இரவும் தூக்கமில் லாதவன். உஷ்ணம், குளிர், காற்று, மழை இவை மாறி மாறி தரும் துன்பத்தை அனுபவிப்பவன். எவ்வளவு முட்டாள் நான். ஒரு நொடி சந்தோஷம் கிடைக்க கெட்டவர்களை, கஞ்சர்களை எல்லாம் சுற்றி சுற்றி அலைந்த வன். எவ்வளவு அற்புதமான மானுட வாழ்க்கையை தொலைக்கின்றவன். கிடைக்குமா அந்த கணங்கள் மறுபடியும்?
கோவிந்த தாசர் விருப்பம் ஞாபகமிருக்கிறதா? நவவித பக்தி. கிருஷ்ணன் புகழ் கேட்பது, நாமங்களை ஜபிப்பது, அவனே நினைவாக வாழ்வது, கிருஷ்ணா உன்னை ,பிரார்த்தனை செய்வது, உன் தாமரைக்கு கழல்களை பணிவது, உன் தொண்டனாக, சேவகனாக, அடிமையாக உன்னை போற்றி பூஜிப்பது, மலர்களை, வாசனை கந்தங்களை அர்ப்பணித்து உன்னை வந்தனை செய்வது, உன்னை பாரதியார் போல் நண்பனாக பாவித்து மகிழ்வது, என்னையே உனக்கு அளித்து சரணடைவது..

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare . Meaning –

சூர்தாஸர் பாடல்கள் அற்புதமாக இயற்றப்பட்டவை. அந்தந்த நேரத்தில் மனதில் உதித்து வார்த்தைகளாக வெளியே வடிக்கப்பட்டவை. யாரோ எழுதி வைத்து நமக்கு சில கிடைத்திருக்கிறது. அவர் இயற்றியது வ்ராஜ்பாஷா என்கிற மொழியில். அவருக்கு தெரிந்த மொழியில் தானே அவர் பேசவோ பாடவோ அழவோ முடியும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...