Monday, August 6, 2018

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (301 - 320) -
J.K. SIVAN

ह्रीङ्कारी, ह्रीमती,
हृद्या, हेयोपादेय वर्जिता ॥ 70

Hrinkari hrimati
hrudya heyopadeyavarjita

ஹ்ரீம்காரீ ஹ்ரீமதீ
ஹ்ருத்யாஹேயோபாதேய வர்ஜிதா
राजराजार्चिता, राज्ञी,
रम्या, राजीवलोचना ।
रञ्जनी, रमणी, रस्या,
रणत्किङ्किणि मेखला ॥ 71 ॥

Rajarajarchitha Rakhini
Ramya Rajeeva lochana
Ranjani Ramani Rasya
Ranath kinkini mekhala

ராஜராஜார்ச்சிதா ராஜ்ஞீ
ரம்யா ராஜீவலோசநா |
ரஞ்ஜநீ ரமணீ ரஸ்யா
ரணத் - கிங்கிணி மேகலா || 71

रमा, राकेन्दुवदना,
रतिरूपा, रतिप्रिया ।
रक्षाकरी, राक्षसघ्नी,
रामा, रमणलम्पटा ॥ 72 ॥

Ramaa Raakendu vadana
Rathi roopa Rathi priya
Rakshaa kari Rakshasagni
Raamaa Ramana lampata

ரமா ராகேந்துவதநா
ரதிரூபா ரதிப்ரியா |
ரக்ஷாகரீ ராக்ஷஸக்நீ
ராமா ரமணலம்படா || 72

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (301-320) அர்த்தம்

* 301 * ஹ்ரீம்காரீ - வண்டுகளிடமிருந்து எப்படி ஒரு ரீங்கார சப்தம் வருமோ அதுபோல் அம்பாளிடமிருந்து சுநாதமாக ஒரு ஹ்ரீம் என்கிற சக்தி சப்தம் வந்து கொண்டே இருக்கும். ஹ்ரீம் என்கிற சப்தத்துக்கு சாக்த ப்ரணவம் என்று பெயர். ஓம் என்கிற ப்ரணவ சப்தம் போல் சக்தி வாய்ந்தது. பஞ்சதசியில் ஒவ்வொரு கூடம் எனப்படும் பிரிவும் ஹ்ரீம் என்கிற சப்தத்தோடு முடியும். அமைதியும் மங்கலத்தையும் அருளும் சப்தம்.

*302* ஹ்ரீமதீ - அம்பாள் நாணத்தில் முகம் சிவப்பவள்.

*303* ஹ்ருத்யா ---ஹ்ரிதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள் லலிதாம்பிகை. ஹ்ருதயத்தில் மத்தியில் ஆத்மா வின் இடம் என்பார்கள். அதுவே அம்பாள். கடோபநிஷத் (II.i.13) '' புருஷன் எனும் ஆத்மா ஒரு கட்டைவிரல் அளவு கொண்டது. புகையற்ற ஒளிவிடும் ஜோதியாக தேகத்தின் நடுவே உள்ளது '' என்கிறது.

*304* ஹேயோபாதேய வர்ஜிதா --அவளிடம் உள்ள தன்மையில் எதையுமே கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது. பூரண ப்ரம்மம் அவள். சாஸ்திரங்களை அப்பாற்பட்டவள்.

*305* ராஜராஜார்ச்சிதா - ராஜாதி ராஜாக்கள் எல்லோருமே வணங்கி வழிபடுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. தாய் அல்லவா. எல்லோராலும் தொழப்படுபவள். இன்னொரு அர்த்தம் கூட உண்டு. ராஜ ராஜன் என்றால் குபேரன், மனு, மற்றும் பத்து பெயர்கள் கொண்டவர்களை குறிக்கும். ராஜராஜன் என்கிற பேர் பன்னிரண்டு பேரை குறிக்கும் அவர்கள் குபேரன், மனு, மற்றும் பத்து பேர். இவர்கள் வணங்கும், வழிபடும் லலிதாம்பிகை என்று ஒரு அர்த்தம்.

*306* ராஜ்ஞீ -- ஸ்ரீ காமேஸ்வரனின் மஹாராணி என்கிறது இந்த நாமம். இந்த பிரபஞ்சத்தை ஆள்பவள். மா என்று எல்லோராலும் போற்றப்படும் தாய்.

*307* ரம்யா - ரம்யமாக இருக்கிறது என்றால் எல்லோரையும் மகிழ்விப்பது. அம்பாளின் திருநாமத்தை சொல்லும்போது மனம் இனிக்கிறதல்லவா? அழகின் சிகரம் மகிழ்விக்காதா?

*308* ராஜீவலோசநா -- தாமரைக்கண்ணாள் என்கிறார் ஹயக்ரீவர். மான் விழி, கயல்விழி, என்றும் சொல்லலாம். ராஜீவ என்றால் மான், மீன் என்றும் அர்த்தம். மற்றெதுவுடனும் ஒப்பிட முடியாத அழகிய விழிகள். அவள் கடைக்கண் பார்வையே உலகை ரக்ஷிக்கிறது.

*309* ரஞ்ஜநீ - தன்னுடைய சிவந்த நிறத்தால் சிவனையும் சிவப்பாக்குபவள். சிவன் பளிங்கு, நிறமற்றவர். எதையும் பிரதிபலிப்பவர். எனவே அம்பாளின் ஒளி அவரை சிவந்து காட்டுகிறது. மறுபிறப்பெனும் துன்பமில்லாமல் நம்மை காப்பவள்.

*311* ரஸ்யா -- எல்லாமே கரைத்து குடித்தவர் என்று ஒருவரை சொல்கிறோமே என்ன அர்த்தம். சகலமும் அறிந்தவர் என்று தானே. ஸ்ரீ லலிதை எல்லாவற்றின் ஸாரமானவள். ஆத்மாவின் ரஸம் அவள். தைத்ரிய உபநிஷத் ஒரு வார்த்தை சொல்லும்: (II.vii) '' ரஸோ வை ஸா '' -- ' இனிப்பானது, சுவையானது என்றால் அது தான்'' . ஆத்மாவை தான் சொல்கிறது.

*312* ரணத் - கிங்கிணி மேகலா -- இடுப்பில் ஒட்டியாணம் அணியும் வழக்கம் போய் விட்டது. இடுப்பே இல்லாத காலம் போய் இடுப்பை அடையாளம் காண முடியாமல் போய்விட்டதே. எப்படி எங்கே ஒட்டியாணம் அணிவது. தங்க பெல்ட் என்பார் அனந்தராம தீக்ஷிதர். அந்த தங்க ஒட்டியாணத்தில் சிறு சிறு மணிகள் கட்டி இருப்பார்கள். அவைஒட்டியாணம் அணிந்தவள் நடக்கும்போது சுநாதமாக ஒலிக்கும். கைவளை, கால் சதங்கை வேறு பக்கவாத்யமாக இசைக்கும். ஸ்ரீ லலிதாம்பிகையின் இடையில் அவள் அணிந்த ஒட்டியாண சலங்கைமானிகளின் ஓசையை அனுபவித்து ஹயக்ரீவர் இந்த நாமத்தை நினைவு கூறுகிறார்.

*313* ரமா - ஸ்ரீ லலிதாம்பிகை தான் லக்ஷ்மி என்கிறது இந்த நாமம். ரமா என்றாலே லக்ஷ்மிகரம். செல்வத்தின் அதிபதி.

*314* ராகேந்துவதநா -- களங்கமற்ற பூரண சந்திரனைப் போன்ற முகமுடையாள் ஸ்ரீ லலிதாம்பாம்பிகை

*315* ரதிரூபா - காந்தமென அனைத்தையும் கவர்பவள். அழகின் சிகரம்.

*316* ரதிப்ரியா - மன்மதன் மனைவி ரதியை அம்பாளுக்கு பிடிக்கும். அதனால் தான் ரதி துயரத்தோடு வேண்டியபோது மன்மதனை உயிர்ப்பித்தாள். இன்னொரு விஷயம். ரதிப்ரியா என்ற நாமத்தில் ஒரு யக்ஷிணி உண்டு. குபேரனின் மனைவியான அவள் தான் செல்வத்தை வாரி வழங்குபவள். குபேரன் யக்ஷர்களின் தலைவன். இன்னொரு விஷயம் சொல்கிறேன். செல்வம் வேண்டும் என்று ரதிப்ரியா மந்திரங்கள் ஜபிப்பவர்கள் இரவில், ஆலமரத்தின் உயர கிளைகளில் அமர்ந்து உச்சரிப்பார்களாம். அந்த மந்திரம் என்ன தெரியுமா? ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியா ஸ்வாஹா: '' லக்ஷம் தடவை சொல்லுங்கள் அம்பாள் எதிரே நிற்பாள் பெரிய பை பெட்டிநிறைய செல்வத்தோடு. ஆலமரம் தேடுங்கள் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம். ரதிப்ரியாவுக்கு பதில் போலீஸ் வந்து இரவில் மரத்தருகே நின்றால் நீங்கள் தான் பொறுப்பு.நானல்ல.

*317* ரக்ஷாகரீ - நம்மை எல்லாம் காப்பவள். லோக நாயகி.

*318* ராக்ஷஸாக்நீ -- அரக்கர்களுக்கு ராக்ஷஸர்களுக்கு, கூடியவர்களுக்கு அம்பாள் என்றாலே சிம்ம சொப்பனம். தீயைப்போல் அவர்களை கபளீகரம் பண்ணி விடுவாள். இதற்காகத்தான் கிருஷ்ணனும் அர்ஜுனனிடம் ''யுகம் யுகமாக நான் வருவேன். தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை அழிக்க என்றான்'' அம்பாள் யுகத்தில் மட்டும் வருபவளல்ல. நொடியில் வருபவள்.

*319* ராமா Rāmā -- ஸ்த்ரீ சக்தி ஸ்ரீ. பெண்மைக்கு தனி சக்தி உண்டு. கருணை தயை அன்பு எத்தனையோ அத்தனை அவளிடம் கோபம், எதிர்ப்பு, அழிக்கும் சக்தியும் உண்டு. ராமா என்ற இரண்டெழுத்து தாரக மந்திரம் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிப்பது.

*320* ரமணலம்படா - காமேஸ்வரனாகிய சர்வேஸ்வரனிடம் பூரண அன்பு கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சித்தானந்தம், சித்தானந்தத்தில் திளைப்பவள்.

அமெரிக்கா செல்வம் கொழுக்கும் நாடு. அங்கே ரோசெஸ்டர் என்ற ஊரில் ஒரு ராஜராஜேஸ்வரி இருக்கிறாள். அவளது கழுத்தில் ஆயிரம் தங்கக்காசுகள் கொண்ட மாலை. ஒவ்வொரு காசிலும் லலிதாம்பிகையின் சஹஸ்ரநாமங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...