Tuesday, August 14, 2018

SALAGRAMAM


சாளக்ராமம். -- J.K. SIVAN .

சாளக்கிராமத்தை தொட்டாலே கோடி ஜென்ம பாபங்கள் விலகும். சாளக்ராமம் விஷ்ணுவின் அநேக அம்சங்களில் தோன்றுகிறது. நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைப்பது. உலகெங்கும் பூஜிக்கப்படுவது. ஒவ்வொரு சாளக்ராமத்துக்கும் விஷ்ணு சம்பந்தப் பட்ட ஒரு நாமம் உண்டு. பாஞ்சஜன்யம், கௌமோதகி, சார்ங்கம். ஸ்ரீவத்சம், கதாதரம், விஷ்ணு நாமங்கள், அவதாரங்கள் பெயர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

வாசுதேவன் எனும் சாளக்ராமம் வெள்ளை நிறம். ரெண்டு வட்ட கோடுகள் அதன் வாயில் தெரியும். சங்கர்ஷணன் என்பது சிவப்பாக இருக்கும். வாயில் ரெண்டு வட்ட கோடுகள். ப்ரத்யும்னன் என்பது மஞ்சள், சின்னதாக ஒத்தை வட்ட கோடு .அநிருத்தன் என்பது வட்டவடிவம். நீல நிறம். மூன்று கோடுகள் வாயருகே. நாராயணன் என்பது கருப்பு வண்ணம். கதாயுதம் மாதிரி ஒரு உருவம் அதன் வாயில் தெரியும். கிருஷ்ணா என்பது கருப்பு வர்ணம்.பின்பக்கம் கொஞ்சம் சப்பையாக இருக்கும். சாளக்ராமங்களை விவரிக்கவே ஒரு தனி கட்டுரை எழுதலாம்.

சாளக்ராமங்கள் முக்தி க்ஷேத்திரம் எனப்படும் தாமோதர குண்டத்தில் கிடைக்கிறது. நேபாளத்தின் வடமேற்கே. சாளக்ராமம் எங்கிருக்கிறதோ அங்கே மஹாலக்ஷ்மி சமேதராக விஷ்ணு இருக்கிறார். அதற்கு விலையே கிடையாது. உலகத்தில் உள்ள எல்லா தங்கங்களைக்கொட்டி கொடுத்தாலும் ஒரு சாளக்ராமத்தின் மதிப்புக்கு ஈடாகாது என்பார்கள். சாளக்ராமத்திற்கு சங்கு தீர்த்த அபிஷேகம் செயது பூஜிப்பவன் பாக்கியசாலி. மரணாந்த காலத்தில் சாளக்ராம தீர்த்தம் அருந்தியவன் மறுபிறப்பற்றவனாம்.

சாளக்ராமம் சாளக்ராமம் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் படித்துக்கொண்டிருக்கும் சாளக்ராம விவரம் அற்புதமாக இருக்கிறதே.

நான் இப்போது நேபாளத்தில். எங்கும் ஒரே ஆலமரங்களாக இருக்கிறது. அதற்கு அங்கே சால மரம் என்று பெயர். நேபாளமே ஒரு கிராமம் மாதிரி தோன்றியது.

சாலமரம் நிறைந்த கிராமம் சாள க்ராமமா ? எதிரே ஒரு நதி அகலமாக நீண்டு ஓடியது. அதில் இறங்கினேன். என்னை இழுத்துக் கொண்டு போகிறது.... எங்கே போகிறேன்? சந்தோஷமாக இருக்கிறது.

''ஹே, நதியே புனிதமான நீராக இருக்கிறாயே, உன் அழகு என்னை கொள்ளை கொள்கிறதே. உன் பெயர் என்ன சொல்?
''கண்டகி..''..
''இது உன் பெயரா?''
''ஆமாம் எப்போதுமே, நான் அழகிய பெண்ணாக இருந்தபோதும் இதே பெயர் தான்.''..
''அட நீ சொல்வது வினோதமாக இருக்கிறதே. நீ எப்போது பெண்ணாக இருந்தாய், இப்போது அழகிய நதியாக அல்லவோ தெரிகிறாய்?''
''நானும் யாரிடமாவது சொல்லவேண்டாமா? சொல்கிறேன் கேள்.
''நான் விஷ்ணு பிரியை. ஒரு ரிஷியின் பெண். அளவு கடந்த மோகம் விஷ்ணுவின் மேல். என்ன செய்வேன்?
நீ தவம் இரு உனக்கு விஷ்ணு கிடைப்பார் என்று யாரோ சொன்னார்கள். எனவே நான் இங்கே வந்தேன். ''
''இந்த நதிக்கரைக்கா?
''இங்கு நதியே இல்லை, அப்புறம் சொல்கிறேன். குறுக்கே பேசாதே. கேள். எங்கும் சால மரங்கள்... (SAL ,PINE , FIR, spruce DEVADARU என்று பூகோள புத்தகத்தில் படித்த ஹிமாலய மலை மரங்கள் பேர் ஞாபகம் வருகிறது). என் தவம் துவங்கியது, தொடர்ந்ந் ந் ந் ந் ந் தது.......காலம் வருஷமாகியது, வருஷங்களாகியது. நான் சிறுபெண் அல்ல இப்போது, கிழவி,,,,எனக்கு அந்திம காலம் வந்தது....வயதாகிவிட்டாலும் விஷ்ணு வரவில்லை. இனியும் விஷ்ணு வரவில்லை என்றால் நான் மடிகிறேன் என்று முடிவெடுத்தேன். ஒருநாள் என் எதிரே இந்த வயதான கிழவி முன் விஷ்ணு தோன்றினார். அதற்குள் நான் கரைந்து நீரானேன்.
நாராயணா , இனியாவது நான் உன்னை அடைவேனா? என் மகனாக நீ வளர்வாயா?
''கண்டகி உனக்கு என்னை அடையும் நேரம் இப்போது தான் வந்தது... இப்போது மட்டும் அல்ல இனி எப்போதுமே நான் உன்னோடு இருப்பேன், உன்னிடம் வளர்வேன், என்று உனக்கு புரியவேண்டும். இனி இங்கே நதியாக என்றும் ஓடுவாய் கண்டகி'' என்கிறார் நாராயணன்..
''உன்னை எப்படி வளர்ப்பேன் நாராயணா?
''நான் தான் சொன்னேனே, நான் என் பல அம்சங்களாக உன்னிடம் வளர்ந்து உன்னோடு கலந்திருப்பேன் போதுமா. நீ நதி நான் கல். சேர்ந்தே இருப்போம். கண்டகி உனக்கு திருப்தியா?
''பிரபோ என் பெயரை சொல்லி அழைத்தீர்களே, உங்கள் பெயர் என்ன இப்போது, வெறும் கல்லா? என் மகன் பெயர் என்ன என்று தெரியாத தாயா நான்?''
''இல்லை கண்டகி, நான் இந்த சாலமரங்கள் வளரும் கிராமமாக சாளக்ராமம் என்ற பெயரில் கல்லாக உன்னிடம் வளர்வேன் என்னை என் பக்தர்கள் தேடி வந்து உன்னை வணங்கி எடுத்து செல்வார்கள்.. நான் அங்கும் இங்குமாக இருப்பேன். ....'' என்கிறார் நாராயணன்.

........சாளக்ராமம்.... சாளக்ராமம்....






நான் படித்துக்கொண்டே கண்ணயர்ந்து இந்த உண்மையை ஞானமாக பெற்றேனா? வெறும் கனவாக இருக்க முடியாதே. நிஜம் நிழலாகுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...