Wednesday, August 15, 2018

RASA NISHYANDHINI



ரஸ நிஷ்யந்தினி J.K. SIVAN

பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்

ராமன் யார் தெரியுமா? 3

தசரதன் அரண்மனையில் ராமனை என்னிடம் அனுப்பு என்று விஸ்வாமித்ரர் கேட்டபோது உலகமே இருந்தது தந்தை தசரதனுக்கு, ஏதோ சினிமா பார்க்க அழைப்பது போலவா விஷயம். கொடிய ராக்ஷ்சர்கள் உலவும் அரண்யத்தில் ரிஷிகள் தவத்தை கலைக்க கோபமாக வரும் பலமிகுந்த ராக்ஷஸர்களை சிறுவன் ராமன் தம்பி லக்ஷ்மணனோடு சேர்ந்து எதிரித்து தடுக்கவேண்டும்.....!! பதினாறு வயது போர் அனுபவம் பெறாத பாலகன்.... தவமிருந்து பெற்ற பிள்ளை... கேட்பவரோ தவ சிரேஷ்டர். அவருடன் ராமனை அனுப்பவோ துளியும் நெஞ்சில் எண்ணமில்லை. வேறு யாராவதாக இருந்தால் அவர் தலை சீவப்பட்டு கோட்டை வாசலில் சிதறி இருக்கும். என்ன செய்வது?

தசரதன் மனநிலை புரியாதவரா ப்ரம்ம ரிஷி ராஜரிஷி விஸ்வாமித்ரர். தசரதா, நீ ராமனைப் பற்றி சிறிதும் கவலையே படவேண்டாம். அவன் யார் என்று உனக்கு நான் அறிந்ததை உணர்த்துகிறேன் என்று நூறு காரணங்களை காட்டுகிறார் விஸ்வாமித்ரர்.

இப்படி ஒரு கற்பனையின் மூலம் ராமனது நூறு கல்யாண குணங்கள், பௌருஷம் பற்றி தானே விஸ்வாமித்ரராக மாறி கிருஷ்ணசாஸ்திரிகள் நூறு விஷயங்களை ராமன் அசாதாரணமானவன், மனித உருவில் வந்த மஹா விஷ்ணு என்று குறிப்பிடுகிறார். கண்ணை மூடிக்கொண்டு, இதெல்லாம் சாஸ்திரிகள் நூற்றிருப்பது வருஷங்களுக்கு முன்னால் எங்கோ தனக்கு முன் கூடியிருந்த மகா ஜனங்களுக்கு உணர்ச்சி வசமாக மைக் இன்றி உரக்க சொல்லும்போது அவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்தேன். நானும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்திருப்பேனோ என்று மகிழ்ந்தேன்.

விஸ்வாமித்ரர் தொடர்வதை கேட்போம்:

15. தசரதா, ராமன் கல்வி கற்றதாக சொல்கிறாயே எனக்கு தெரியும் சகல சாஸ்திரங்கள் வேதங்கள் ஞானங்கள் அனைத்திற்கும் அவனே ஆதாரம் உன் மகன் ராமனே என்று.

16. ராமன் தர்ம வழியில் நடப்பவன் என்கிறாயே, உனக்கு தெரியுமா தசரதா , தர்ம தேவதையே அவனை தொழுது பின் செல்கிறது என்று?

17. உன் ராமன் வெறும் கோசல மன்னனா? அவன் ஈரேழு பதினாலும் லோகங்களுக்கும் அதிபதி அப்பா!

18. என் குழந்தை ராமன் பிறந்து பன்னிரண்டு வயசு கூட பூர்த்தி அடையவில்லையே என்று ஆதங்கப்படுகிற தசரதா, அவன் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன் என்று நான் அறிவேன்.

19. உன்னை பொறுத்தவரை தசரதா மற்ற அரசர்கள் போல ராமனும் செல்வத்திற்கு அடி பணிபவன்....ஆனால் உண்மை எதுவென்றால் ராமனை வெற்றிகொள்வது அவனது பக்தர்கள் அவனிடம் செலுத்தும் பக்தி ஒன்றே.

20. பாவம் நீ தசரதா , ராமனை அவன் செய்யும் நல்வினை தீவினை கட்டுப்படுத்தும் என்று குழந்தை போல் நம்புகிறாய். என்னைப்போல் நீயும் புரிந்துகொள் அவனிடம் இவை நெருங்கமுடியாது.

21 ராமன் மற்றவர்களை போல் கர்ம வினைகளின் பயனை துய்ப்பவன் அல்ல தசரதா, அவனை கர்மா நெருங்காது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். அகர்மன்.

22. ராமனின் உடல் நம்மைப்போல் பஞ்சபூதங்களால் உருவானதா? அவன் உடலில் நம்மைப்போல் எலும்பு, சதை தோலா?? நல்ல வேடிக்கை இது. பஞ்ச பூதங்களின் சிருஷ்டி காரணன் அவன். அவன் அதுவாகுமா? அவை தான் அவனாகும்.அருவம் உருவம் இரண்டும் அவனே.

23 ராமன் காலத்தினால் கட்டுண்டவன் இல்லை. வயது எண்ணிக்கை கூடுபவன் அல்ல. அவன் உபநிஷதங்கள் அசைவைப் பற்றி கூறும் ப்ரம்மத்தையும் அசையாததை பற்றி கூறும் க்ஷத்ரத்தையும் தயிர்சாத மாக உண்பவன். அதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் எதுவா? வேறு என்ன ம்ருத்யு எனும் காலம், மரணம் தான். பிறப்போ இறப்போ இல்லாதவனை இவை என்ன செய்யும் தசரதா ?

பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி பஞ்சாக ஊத்தி தள்ளுகிறாரே மீதி 77 உதாரணங்களை, காரணங்களையும் அறிந்து ராமனை கொண்டாடுவோம்



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...