Saturday, August 18, 2018

RASA NISHYANDHINI

ரஸ நிஷ்யந்தினி -- J.K. SIVAN
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்

ராமன் யார் தெரியுமா? 4

தசரதன் அசந்து போகிறான். ஆச்சர்யத்தில் ஆழ்ந்து பிளந்த வாய் மூடாமல் சிலையாக நிற்கிறான். அவன் முழு கவனமும் அடுத்து விஸ்வாமித்ரர் தனது அருமை மகன் ராமனைப்பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பதை கேட்பதிலேயே இருக்கிறது. பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரியார் படிப்பவர்களுக்கும் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று ஆவல் மேலிடுவதில் என்ன ஆச்சர்யம். எவ்வளவு அடக்கம் நற்பண்பு. ஸ்ரீ பருத்தியூர் பெரியவா. விஸ்வாமித்ரர் சொன்னாரோ சொல்லவில்லையே, அவர் சொல்வதாக தன்னுடைய ஞானத்தை ராமன் பற்றிய சகல விபரங்களையும் ஒவ்வொன்றாக ஸ்தோத்ரமாக பாடியிருக்கிறார். பலே ப.கி.ஸா ஸ்வாமிகளே.

பருத்தியூர் பெரியவா ராமனைப்பற்றி 23 காரணங்கள் சொன்னதை தொடர்ந்து மேற்கொண்டு விஸ்வாமித்ரர் தசரதனுக்கு இன்னும் சில காரணங்களைச் சொல்வதையும் அறிவோம்:

24. தசரதா, ராமன் ஏதோ கர்மா வினைப்பயனால் உனக்கு புத்திரனாக பிறந்ததாக நீ நினைத்துக் கொண்டிருக்
கிறாய். உண்மையில் ராமனாக உன் இல்லத்தில் பிறந்தது அவன் எடுத்த முடிவு. தெய்வத்தின் சங்கல்பம்.

25. ராமன் பராக்கிரமன், அவனால் வெளியே உள்ள எதிரிகளை வெல்ல முடியும் என்று நீ நம்புகிறாய். உனக்கு தெரியுமா அவன் நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் எதிரிகளையும் அழிக்கக்கூடியவன் என்று எனக்கு தெரியும் தசரதா .

26. ஐம்புலன்கள் உணர்வினால் கட்டுண்ட சாதாரண மானிடனாக நீ ராமனை பார்க்கி றாய். ராமன் ஐம்புலன்கள், ஐம் பூதங்கள் அனைத்தையும் கடந்த அருவமானவன்.

27.தன்னை அண்டியவர்களுக்கு எல்லா வசதிகள் உதவிகளையும் புரியும் ஒரு மானுட அரசனாக நீ ராமனை பார்க்கிறாய். அவன் இம்மைக்கு தேவையானவை மட்டுமல்ல மறுமைக்கும் பக்தர்களுக்கு முக்தி தருபவன்.

28. ராமனை நீ ''ஒரு'' மானிடனாக அறிகிறாய் தசரதா. அவன் ''எண்ணற்ற பலர்'' ஆனவன். நீ காண்பது அவர்களில் ஒருவனை.

29.தசரதா , நீ ராமன் என்கிற '' ஒரு'' உருவத் தை மட்டும் கண்ணால் காண்கிறாய். எனக்கு தெரியும் ராமனை. அவனை கண்களால் முழுவதும் காண முடியாது. அவனை விளக்கிச் சொல்லமுடியாது, காதால் கேட்டு மாளாது. எந்த புலனாலும் அவனை உணர முடியாது. அதற்கு அப்பாற்பட்ட எல்லையற்ற இயம்ப முடியாத ப்ரம்மம்.

30. இத்தனாம் நாள், தேதி, கிழமை, நேரம், காலம் அதில் ராமன் ஜனனம் என்று நீ குறித்து வைத்தவன். அதுமட்டுமே அல்ல. அது எண்ணற்ற எதிலோ ஒரு சிறு துளி. அவன் பிறவியற்றவன். எந்த ரூபத்திலும் காண தன் உருவத்தை அமைத்துக் கொள்பவன்.

31. இன்னாருக்கு புத்ரன், இன்னாருக்கு பேரன் என்று ராமனின் விருத்தாந்தத்தை சொல்கிறாயே தசரதா . அவ்வளவுதானா? அவன் எடுத்த பிறவிகள், எடுக்கப்போகிறவை பூரண ஞானிகளால் மட்டுமே உணரமுடியும்.

32. ஏதோ ஒரு அரசனின் புத்ரியை அவனுக்கு மனைவியாக நிச்சயித்து கல்யாணம் பண்ணி விடலாம் என்று நீ உத்தேசம் பண்ணுகிறாய் தசரதா. மஹா லட்சுமி அவனது பத்னியாக இருக்கும் இடத்தில் வேறு யாரை அமர்த்த முடியும் என்று நீ உணரமாட்டாய். எனக்கு
தெரியும்.

33. ராமன் என்றால் ஒரு தலை , அதற்கு மேல் அழகிய பொன்னாலான கிரீடம் என்று தான் உனக்கு தெரியும். தசரதர் புரிந்து கொள். இந்த உலகத்தில் எத்தனை உயிர்களை அவன் படைத்து காக்கின்றானோ அத்தனை தலைகள் உள்ளவன் ராமன். அவ்வளவும் அவன் உடலே.

34. இந்த அழியும் உலகத்தின் ஒரு ராஜாவாக ராமனை நீ நினைத்து சந்தோஷப்படுகிறாய் தசரதா. ஸ்ரீ ராமன் நித்ய அநித்யமான எல்லாவற்றிற்கும், சகலத்திற்கும் அவனே எஜமானன்.

தசரதன் கெட்டியாக அருகில் இருக்கும் துணைப் பற்றிக்கொண்டு நிற்கிறான். அவன் மனதில் இப்போது ராமன் தனது சிறிய வயது மகன் அரக்கர்களை எதிர்கொள்ள


முடியாத சிறுவன் என்ற எண்ணம் மறந்து விட்டது. தன் மகன் ராமன் யார் என்று மேலும் கேட்டுது தெரிந்து கொள்ள ஆவலாக நிற்கிறான். அப்படியே அந்த அரசவை மண்டபத்தில் எல்லோரும். ஏன் எங்கெங்கோ வீட்டிலிருந்தபடி இதை படிக்கும் நாமும் தான் ஆவலாக உள்ளோம். பருத்தியூர் பெரியவா தொடர காத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...