Tuesday, August 14, 2018

DWARAKAI


சேலை வியாபாரம் - J.K. SIVAN

இப்போது தெருக்கூத்து பார்த்தவர்கள் கேட்டவர்கள் குறைந்து போயிருப்பார்கள். சினிமா, டிராமா ரேடியோ, டிவி வருவதற்கு முன்பு தெருக்கூத்து எளிமையான பொழுது போக்கு. மேடை வேண்டாம், சபா, விளம்பரம் வேண்டாம். விளக்கை அணைத்து பகலிலேயே இருட்டு பண்ணவேண்டாம். தெருக்கூத்து ஆரம்பிப்பதே இரவு எட்டு மணிக்கு மேலே தான். வேலை செயது விட்டு வீடு திரும்பிய தொழிலாளிகள் தான் ஆணாக, பெண்ணாக வேஷம் கட்டி ஆடுவது. மரத்தடியில், மண் தரையில், உட்காருபவர்களுக்கு ஜமுக்காளம் எல்லாம் கிடையாது. வெளிச்சம் தீவட்டி, விளக்குகள்.

அதில் வரும் காட்சிகள் முக்கால்வாசி நமது பழம்பெரும் இலக்கியங்கள் , நல்ல தங்காள் கதை, அல்லி அரசாணி மாலை, அல்லி அர்ஜுனன் கதை, மஹா பாரதம், ராமாயணம் போன்ற கதைகளிலிருந்து. பாடல்கள் அவர்களே புனைந்து பாடுவது. அல்லது யாரிடம் கற்றுக்கொண்டார்களோ அதே

ஒரு தவில், டோலக், ஹார்மோனியம், வாய் பாட்டு, பின் பாட்டு, ஜால்ரா. சில சமயங்கள் நாயனம் தவில்.

செங்கல் பொடி , அரிசி மாவு, சாயம் , மை , சவுரி, ஏதோ சில வீட்டில் கிடைத்த புடவை. வேஷ்டி துண்டுகள். சில முக்கிய பாத்திரங்களுக்கு தலை மகுடம், தோளை ஒட்டிய கவசம், பின்னாலே வேஷ்டி மறைப்பு, ரெண்டு பக்கமும் வேஷ்டி, படுதா பிடித்துக்கொண்டு நிற்பதற்கு நாங்கள் கெஞ்சுவோம். வீட்டிலிருந்து செம்புகளில் குடிநீர் கொண்டுவந்து தருவோம்.
+++
ஒரு குடுகுடுப்பாண்டி விடிகாலையில் ஒரு வீட்டு வாசலில் பாடிக்கொண்டு போகிறான். அந்த வீட்டின் திண்ணையில் ரெண்டு தமிழ் புலவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். குடுகுடுப்பாண்டி குரல் கேட்கிறது

''அத்தனத்துக்கும் ஓட்டை கைக்கும் அம்புட்டு தூரம் ஆனாலும் கன ஜோரு சேலை யாவாரம் ''
ஏதோ ஒரு ராகம் போட்டு பாடிக்கொண்டு போய் விட்டான் குடுகுடுப்பாண்டி. தமிழ் புலவர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டும் என்ன சொன்னான் அந்த குடுகுடுப்பாண்டி என்று புரியவில்லை.
மறுநாள் அவன் வருவதற்கு காத்திருந்தார்கள். வழக்கம்போல் அந்த வீட்டை தாண்டி செல்லும்போது ஏதோ வேறு வார்த்தைகள் சொல்லி பாடினான்.

''இந்தாப்பா இங்கே வா.''
''சரி எல்லோருக்கும் நல்ல காலம் சொல்லும் நமக்கு இன்று ஏதோ நல்ல காலம். கொஞ்சம் காசு கிடைக்கும் என்று ஆவலோடு வந்தான் குடுகுடுப்பாண்டி.
''நேற்று நீ ஏதோ பாடினாயே அதற்கு என்ன அர்த்தம்?
''நேத்து இன்னா பாடினேன்னு இப்போ கேட்டா எப்படி சாமி கவனம் இருக்கும். ஏதேதோ பாடறேன்''
''அத்தனத்துக்கும்......னு ஏதோ பாடினேயே அது''
''ஓ அதுவா கிஷ்டன் பாட்டா? ''அத்தனத்துக்கும்....... மீண்டும் பாடினான் ''
''என்னப்பா அர்த்தம்.''
''அதெல்லாம் முறையா தெரியாதுங்க. எங்க குருநாதர் சொல்லிக்கொடுப்பாரு. கப்புனு புடிச்சுக்குவோம். அந்தந்த சீனுக்கு வலுவு தரா மாதிரி குரு நாதர் பாடி சொல்லிக்கொடுப்பாரு''
''என்ன அர்த்தம் அதை சீக்கிரம் சொல்லு''
''அட இன்னாங்க , அர்த்தம் எல்லாம் கேக்கறீங்க. நானு இன்னா படிச்சவனா. இதோ பாருங்க என் கையை. கோவம் வந்தா சுருட்டாலே சுடுவாரு, சரியா சொல்லலேனா தலிலே கொட்டுவாரு.
''அதெல்லாம் சரி என்ன அர்த்தம் அதுக்கு ?''
பாண்டவங்க தோத்துட்டாங்க. ஹஸ்தினாபுரத்தில் கெட்டவங்க சந்தோஷமா இருக்காங்க. இனிமே அந்த த்ரோபதியை இஸ்தாந்து துணி அவுக்கறாங்க. கபகபன்னு துணி வந்துகினே இருக்குது. அடடே இம்மாந்தூரம் இருக்குது அத்தினபுரத்துக்கும் அந்த கிஷ்டன் ஊருக்கும் நடுவுலே, அப்படி இருந்தாலும் சேலை மேலேமேலே வளர்ந்துகினே போவுது. நல்ல சேலை வியாபாரம் ஆவுது'' ஏன்னு சொல்வாரு.
புலவர்கள் அல்ல நாமும் அசந்து போகிறோம்.
ஹத்தினாபுரத்துக்கும் துவார கைக்கும் (துவாரம் : ஓட்டை ) அதினத்துக்கும் என்பது அத்தினாபுரத்துக்கும் துவாரகைக்கும் இடையே வெகுதூரம் இருந்தாலும் அங்கிருந்து (கிருஷ்ணன் அருளால் ) சேலை வளர்ந்து மேலே மேலே ஹஸ்தினாபுரத்தில் வளர்ந்து த்ரோபாதையை காத்ததை சேலை வியாபாரம் பிரமாதமாக நடந்ததாக யாரோ ஒரு படிக்காத கிராமவாசி அற்புதமாக கற்பனை செய்திருக்கிறான். நமது நாட்டில் திறமைக்கு பஞ்சமே இல்லை.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...