Saturday, August 11, 2018

LALITHA SAHASRANAMAM

   
 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (353 - 365)   -  J.K. SIVAN

भक्तिमत्-कल्पलतिका,

पशुपाश विमोचनी ।
संहृताशेष पाषण्डा, 
सदाचार प्रवर्तिका ॥ 78 ॥

Bhakthi mat kalpa lathika 
Pasu pasa vimochani
Samhrutha sesha pashanda 
Sadachara pravarthika


பக்திமத் கல்பலதிகா 
பசுபாஸ விமோசிநீ |
சம்ஹ்ருதாசேஷ பாஷண்டா
ஸதாசார ப்ரவர்திகா || 78

तापत्रयाग्नि सन्तप्त 
समाह्लादन चन्द्रिका ।
तरुणी, तापसाराध्या,
 तनुमध्या, तमो‌உपहा ॥ 79 ॥

Thapatryagni santhaptha 
samahladahna chandrika
Tharuni Thapasa aradhya 
Thanu Madhya Thamopaha

தாபத்ரயாக்நி ஸந்தப்த 
ஸமாஹ்லாதந சந்த்ரிகா |
தருணீ தாபஸாராத்யா 
தநுமத்யா தமோபஹா || 79

चिति, स्तत्पदलक्ष्यार्था, 
चिदेक रसरूपिणी ।
स्वात्मानन्दलवीभूत 
ब्रह्माद्यानन्द सन्ततिः ॥ 80 ॥


Chithi Thatpada lakshyartha 
Chidekara swaroopini
Swathmananda lavi bhootha 
brahmadyanantha santhathi

சிதிஸ் தத்பத லக்ஷ்யார்த்தா
சிதேகரஸ ரூபிணீ |
ஸ்வாத்மாநந்த லவீபூத
ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி: || 80

                                                     ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (353 -365)  அர்த்தம்
 
* 353 * பக்திமத் கல்பலதிகா -    நாம் மனதில் விரும்பியதெல்லாம்  ஒரு மரத்தின் கொடியில்  உடனே தொங்கும் கண்ணுக்கெதிரே  கையிலெட்டும் . இப்படி ஒரு மரம், கொடி  கிடைத்தால்?  ஏன் கிடைக்கவில்லை. நாம் அதை தெரிந்துகொள்ளவில்லை. ஸ்ரீ லலிதாம்பாள் தான் அந்த கல்ப லதா, வேண்டும் வரம் தருபவள்,  என்று மண்டையில் குட்டுகிறார் ஹயக்ரீவர்.   பக்திமான்கள், யோகிகள் ஞானிகள் அவளை மனதில்  கண்டு ஆனந்தத்தை அனுபவிப்பவர்கள். தூய்மை இல்லாத  மாசுபடிந்த உள்ளத்தில் அம்பாளை பல ஜென்மத்திலும் காண இயலாது.

* 354 *பசுபாஸ விமோசிநீ -   சம்சார பந்தம், அகந்தை, கர்மவினை எல்லாவற்றிலிருந்தும் விமோச்சனம், விடுதலை தருபவள் ஸ்ரீ அம்பாள்.   ப்ரஹதாரண்யக உபநிஷத்   என்ன சொல்கிறது?(I.iv.10).  ப்ரம்மம்  என்பது ஆத்மா. அதுவாகவே ஆரம்பத்தில் இருந்தது.  ''நானே  ப்ரம்மம்'' என்று உணர்ந்தது.  அதுவே எல்லாமானது. எண்ணற்ற தேவதைகள் ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள்  இதை அறிந்து எல்லாரும் எல்லாமும்  ப்ரம்மம் ஆயின.  பிரம்மனை உணரமுடியாத  ஜீவன்களை  தான்  பசு  என்பது. ஐந்தறிவு கொண்டவை. இங்கே அஞ்ஞானிகலாய் குறிக்கும் சொல். பாசம்  என்பது அஞ்ஞானத்தினால் பெறுகிற  பந்தம், பற்று.
''பசு''  என்ன தேடுகிறது.  வயிறு புடைக்க ஆகாரம், நிழலில் தூக்கம். இப்படி தானே நாமும் வாழ்கிறோம்.
பந்த பாசத்தை , மும்மலங்களை நீக்கி, விலக்கி,  நம்மை உயர்த்துபவன் தான்  ''பசு பதி ''  பரமேஸ்வரன். அதையே தான் அம்பாளும் அருள்கிறாள்.

* 355 *சம்ஹ்ருதாசேஷ பாஷண்டா --  இறை  அன்பு இல்லாத,  தெய்வத்தை தூஷிக்கும்  விரோதமான, ஆணவம் கொண்டவர்களை தான் அரக்கர்களாக நாம் அறிவோம்.  பலமிக்க அவர்களை அழிப்பவள்  அம்பாள், ஸ்ரீ லலிதாம்பிகை.

* 356 * ஸதாசார ப்ரவர்திகா-   சிறந்த  ஆசாரத்தை கடைப்பிடிக்கும் பக்தர்களை நல்வழிப்படுத்துபவள்  அம்பாள். ப்ரம்ம ஞானத்தை அருள்பவள்.

* 357 * தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா  -  மூன்று வித தீ நம்மை சுடுகிறது.   பற்றினால் , நோயினால், ஏற்படும்  தேஹ வலி,  சம்பந்தமான அக்னி,  ஐந்து பூதங்களினால் விளையும்  தீமை எனும் அக்னி, தெய்வ குற்றம் மூலம் விளையும் தீ,   இந்த மூன்றுவித அக்னியிலிருந்தும்   சந்திரநின் குளிர் நிலவொளி போல,  நமக்கு விடுதலை தருபவள் அம்பாள். இதை தான்  ஆதி ஆத்மீக, ஆதி பௌதிக, ஆதி தைவத  துன்பம் என்று சொல்கிறோம்.

* 358 * தருணீ -   என்றும் இளைமையோடிருப்பவள் அம்பாள்  என்கிறது இந்த நாமம்.  ப்ரம்மத்திற்கு வயதேது.. 

* 359 * தாபஸாராத்யா - தவம் செய்யும் யோகிகளால், ரிஷிகளால் , முனிவர்களால் , ஞானிகளால்,  தொழப்படும் தெய்வம் அம்பாள். 

* 360 * தநுமத்யா  --   கண்ணதாசன் எழுதுவாரே, '' இடையா, அது இல்லாதது போல் இருக்குது''  என்று அது தான் ஸ்ரீ லலிதாம்பிகையின் இடை.   கொடியிடை அம்மன். 

* 361 *  தமோபஹா - இருளகற்றி அருளளிப்பவள்.   இருள் இங்கே  அஞ்ஞானம்.  தமோகுணம். 

* 362 *  சித்தி  என்பது எங்கே  சின்னத்திரை நாடகமோ, அம்மாவின் தங்கையோ இல்லை. நாம் நினைக்காத, சிந்திக்காத சித்தி நமது சித்தம் தூய்மையாகி, தியானத்தால், தூய வழிபாட்டினால் உயர்வடைந்து ஞானம் பெறுவது. அதுவே ''சித்தி'' அடைவது. அதை அடைந்தவன் சித்தன். சித்தர்.  அந்த சித்தி அம்பாள். அவளை அடைந்தால்  சித்தியை , பிரம்மத்தை அடைந்ததாகும்.

* 363 * தத்பத லக்ஷ்யார்த்தா   வேதத்தின்  அதி முக்கியமான வார்த்தையான  ''தத்''  (அது) என்பதை உணர்த்தும் அர்த்தமாக உள்ளவள் ஸ்ரீ லலிதாம்பிகை.  ''தத்  தவம் அஸி'' (நீ தான் அது) என்பது  வேதத்தின் உபநிஷதங்கள் மஹா வாக்கியத்தில் ஒன்று.  அதில் முதல் வார்த்தை  ''தத்'' என்பதன் பதம்  தான்  அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர்.

* 364 *  சிதேகரஸ ரூபிணீ  --   அறிவு  ஞானம் என்று எதை அறிகிறோம்  அதன் ஸ்வரூபம்  தாம்  அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.   ஞானப்பழத்தை பிழிந்து ரசமன்பினோடு கலந்ததானவள். 

* 365 * ஸ்வாத்மாநந்த லவீபூத ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி -  அற்புதமான ஒரு நாமம்.  பிரம்மாதி தேவர்கள் பலர் அடையும்  ஆனந்தம் எல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்த்தால் அது,   அம்பாள் ஸ்ரீ லலிதாம்பாளின்  ஆனந்தம் எனும்  கடலின் ஒரு சொட்டு என்கிறார் ஹயக்ரீவர். அதை தான் பிரம்மானந்தம் என்பது. 


காஞ்சியில் சக்தி பீடம்:  காஞ்சி காமாக்ஷி:

இன்று நாம் காணப்போவது  அதி முக்கியமான ஒரு சக்தி பீடம். காஞ்சிபுரத்தில்  உள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயம். -  காமகோடி பீட வாஸினி.  ''கா'': ஸரஸ்வதி +மா: லக்ஷ்மி  அக்ஷி  என்றால் கண்:  சரஸ்வதியும் லக்ஷ்மியும் அவளோடு சேர்ந்து மூன்று தேவியருமாக அருளும் சக்தி பீடம். காஞ்சிக்கே சத்யவ்ரத க்ஷேத்திரம் என்று ஒரு பெயர். மண்ணினால் லிங்கம் செய்து உமாதேவி சிவனை வழிபட்ட ஸ்தலம்.
பஞ்சாக்னி இடையே அமர்ந்து தவம் செயது சிவனை மணம்புரிகிறாள் அம்பாள். காஞ்சியில் எண்ணற்ற சிவன் கோவில்கள்  இருந்தபோதிலும் அம்பாளுக்கென்றே பிரத்யேகமாக  பிரதானமாக  சந்நிதி கொண்ட  கோவில் காமாட்சியம்மன் கோவில் தான்.   ஆலயத்தை சுற்றி எட்டு சக்தி தெய்வங்கள் உள்ள க்ஷேத்ரம். இங்கு அம்பாள் உறையும் இடம் காயத்ரி மண்டபம் (நாபி ஸ்தான ஒட்டியாண பீடம்) .  மூன்று ஸ்வரூபங்களில் உள்ளாள். அதாவது  ஸ்ரீ காமாட்சியாக, ஸ்ரீ பிலாஹாசமாக, ஸ்ரீ சக்கரமாக.  காமாக்ஷி பத்மாசனத்தில் அருள்பாலிக்கிறாள்.
ஆதிவராஹ பெருமாள் உறையும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. தசரதன் ராமனைப் பெற புத்ரகாமேஷ்டியாகம் செய்த க்ஷேத்ரம்.  அம்பாளின் உக்கிரத்தை தணிக்க ஆதிசங்கரர்  சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரங்கள் பாடி ஒரு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்த ஆலயம்.  வாய் பேசமுடியாத ஒரு ஊமை பக்தன் அம்பாள் அருளால் பேசிய க்ஷேத்ரம். ஆதிசங்கரர் இதை மூக பஞ்ச தசி என்று ஐநூறு ஸ்லோகங்கள் பாடியிருக்கிறார். 
பல்லவ கால ஆயிரம் வருஷத்துக்கு மேலான கலைச் சிற்பங்கள் நிறைந்த ஆலயம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...