Saturday, August 18, 2018

SOOR SAGARAM


            சூர் சாகரம்        ஜே.கே சிவன் 

தேவகியிடம் சொல்லுங்கள் 

காலம் ஓடும் வேகம் ஒப்பிடமுடியாதது.  வருஷங்களை
யுகமாக்கி பின்னே தள்ளி விடும்.  கிருஷ்ணன்  பிருந்தாவனத்தை விட்டு  சென்றது நேற்று போல் இருந்தாலும் எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன. எல்லாமே  மாறிவிட்டது காலத்தின் கோலத்தில். 

உத்தவர்  மெதுவாக பிருந்தாவனத்தில் நுழைகிறார். யசோதை நந்தகோபன் வீடு அப்படியே மாறாமல் இருக்கிறது.  வாசலில் யசோதை நிற்கிறாள்.  

''யார்  இவர். என் கிருஷ்ணனா  இப்படி மாறிவிட்டான்?''
உத்தவர்  உருவத்தில் க்ரிஷ்ணனைப் போல் இருப்பவர்கள். நெருங்கின உறவும் கூட.    யார்  இவர் ?

''வாருங்கள் சுவாமி...   யசோதா அவரை உள்ளே அழைக்கிறாள். உபசரிக்கிறாள்.
''நான்  துவாரகையிலிருந்து வருகிறேன். உத்தவன் என் பெயர்.  என் குரு, என் தோழன் என் சகோதரன்  கிருஷ்ணன் வாழ்ந்த இந்த இடத்தைக் காண இங்கே  வந்தேன்.  கிருஷ்ணனும் நீ கோகுலம் பிருந்தாவனம் எல்லாம் சென்று வா என்று அனுப்பினான்.''

கிருஷ்ணன் எனும் பெயர் யசோதையின்  காதில் இன்பத்தேனாக பாய்ந்தது. அப்படியே  உத்தவர் காலடியில் அமர்ந்து அவரையே நோக்கினாள் . ஆனந்தத்தில் வார்த்தைகள் வரவில்லை.  எப்படியோ ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு பேசுகிறாள்:

என் கண்மணி, என் செல்லம், என் கிருஷ்ணன் நன்றாக இருக்கிறானா? அவனை எப்போதும் என் கண் இமையில் வைத்து மூடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள். அவன் எப்போதும் இங்கே தான் என்னோடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதைவிட முக்கியமாக  நீங்கள்  மதுராவுக்கு திரும்பும்
போது  அவனைப் பெற்ற  அந்த புனிதவதி தேவகியிடம் இதைச் சொல்லுங்கள்: 

''தேவகி அம்மா, இந்த யசோதை உங்கள் வேலைக்காரி, உங்கள் மகன் கிருஷ்ணனின்  பணியாள். அவன் மீது சொல்ல முடியாத அன்பும் பாசமும் நிறைய கொண்டவள். அவன் அழகில் கட்டுண்டவள். அப்பப்பா அவன் விஷமங்கள், பிடிவாதம் உங்களுக்கு தான் தெரியுமே.  

விடிந்ததும்   வெண்ணை தேடுவான். குளிப்பாட்டலாம் என்று அவனுக்க்காக  எண்ணெய் , நறுமண சிகைக்காய்  வாசனை பொடிகள், சுத்தமான வெந்நீர் வஸ்திரங்கள் எடுத்து வைப்பதை பார்த்தவுடன் சிட்டாய் பறந்து ஓடிவிடுவான். எப்படியோ ஒருவாறாக அவனை தாஜா பண்ணி, வெண்ணை தின்பண்டங்கள் கொடுத்து பிடித்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். என் உடம்பில் பாதி தெம்பு காணாமல் போய்விடும்.   இதெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டான். சங்கோஜப்பட்டு மறைத்திருப்பான் என்பதற்காக சொல்கிறேன்.''

சூர்தாசர் கற்பனையே  அலாதி.  கீழே  வ்ராஜ்பாஷா வில் அவர்  ஸ்வயமாக மனதில் தோன்றிய மேற்கண்ட விஷயத்தை பாடியது கிடைத்தது:

Sandeso devaki so kahiyo
Hau to dhai tihare sut ki maya karat nit rahiyo
Yadapi tev tum jaanat unki tau mohi kahi aave
Prat hot mero laal ladaiti maakhan roti bhaave
Tel ubatano aru tato jal tahi dekhi bhagi jaave
Joi joi mangat soi soi deti kram kram kari nahave
Sur pathik suni mohe rain din bado rahat dar soch
Mero alak ladaito mohan hwaihe karat sankoch

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...