Tuesday, August 7, 2018

GITANJALI

கீதாஞ்சலி      J.K. SIVAN 

ரபீந்திரநாத் தாகூர்

                    வா  கண்ணா  வா

Where dost thou stand behind them all, my lover, hiding thyself in the shadows? They push thee and pass thee by on the dusty road, taking thee for naught. I wait here weary hours spreading my offerings for thee, while passers-by come and take my flowers, one by one, and my basket is nearly empty.

என் உள்ளங்கவர் கள்வா, எங்கே போனாய் ?  ஏன் எல்லோர் பின்னாலும் சென்று  இருளில் நின்றுகொண்டு மறைந்து ஓரமாக நிற்கிறாய்?    எல்லோரும் ஏதோ அவசரத்தில் உன்னை பிடித்து தள்ளிவிட்டு உன்னை தரையில் புழுதியில் விழவைத்து விட்டு  எதற்கு எங்கு அவசரமாக செல்கிறார்கள்?  ஒருவருக்கும்  நீ  லக்ஷியமில்லையா ?  என்னைப்பார்.  நான் உன்னையே வேண்டி மணிக்கணக்காக  கால் கடுக்க  விழி இமைக்காமல் உன்னையே வழிபார்த்து காத்திருக்கிறேன்.  என் கையில் உனக்கு  அளிக்கவேண்டும் என என்னாலியன்ற உனக்கு பிடித்த புஷ்பங்கள் கூடை நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.  வா, வந்து பெற்றுக்கொள், ஒன்று ஒன்றாக  எடுத்துக் கொண்டு விடு.  கூடை காலியாகட்டும்.

The morning time is past, and the noon. In the shade of evening my eyes are drowsy with sleep. Men going home glance at me and smile and fill me with shame. I sit like a beggar maid, drawing my skirt over my face, and when they ask me, what it is I want, I drop my eyes and answer them not.

இதோ  காலை நேரம் ஓடிப்போய்விட்டது.  பகலும்  வந்தது.  சாயங்காலம் தலையை காட்டிவிட்டது. கொட்டாவி விட்டுக்கொண்டு கண் சொக்குகிறது தலை என்னை அறியாமல்  கவிழ்கிறது. தூக்கமா?  உனக்காக காத்திருந்து களைத்து விட்டேனா?   எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கி தின்கிறது.  நான் பிச்சைக்கார பெண் போல  அனாதையாக என் மேலங்கியால் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  ''ஏன் பெண்ணே  இப்படி சோகமாக இருக்கிறாய்? என்ன குறை உனக்கு? என்று சிலர் கேட்டார்கள்.  நான் தலையை குனிந்து கொண்டேன். என்ன பதில் சொல்ல முடியும்???

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...