Thursday, November 1, 2018

SKST PROGRAMS



ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம் சேவா நிறுவன   அறிவிப்பு:

பாகவத புராணம் ஸ்ரீ கிருஷ்ணன் கோகுல மக்களை, பசுக்களை, அவர்களது பொருள்களை, இந்திரனின் கோபத்தால் விளைந்த கடுமையான இடியுடன் கூடிய தொடர்ந்த மழையிலிருந்து காப்பாற்றினார் என்று கூறுகிறது. எப்படி? அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் நிற்கவைத்து கோவர்தன மலையை இடது சுண்டுவிரலால் தூக்கி மழை அந்த பக்கமே வராமல் காப்பாற்றினார். ஏழு எட்டு நாள் தொடர்ந்து பெய்தும் இந்திரனால் கோகுலத்தை சேதப்படுத்த முடியவில்லை. அந்த ஏழெட்டு நாளும் கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்து இந்திரன் தோல்வியடையச் செய்தார். இந்திரன் தனது கர்வத்தை ஒழித்து கிருஷ்ணன் தாள் வணங்கி விடைபெறுகிறான்.

கோகுல மக்கள் கிருஷ்ணனுக்கு நன்றி கூறும்போது ''உங்களைக் காப்பாற்றிய  இந்த கோவர்தன மலைக்கு அல்லவோ நீங்கள் நன்றி சொல்லவேண்டும். அது தானே குடையாக  காப்பாற்றியது''  என்கிறார். கோகுல மக்கள் அனைவரும்  கோவர்த்தன பூஜா, கிரியஞா என்று கொண்டாடுகிறார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு நிறைய தின்பண்டங்களை தயாரித்து கோவர்தன கிரிக்கு படைக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் தானே கோவர்தன மலையாக உருவெடுத்து அவர்கள் நன்றியோடு, பக்தியோடு அளித்த உணவுப்பண்டங்களை நைவேத்தியமாக ஏற்று மகிழ்கிறார்.  இது தான் புராணம் சொல்வது. இன்றும்  வடக்கே  தீபாவளியை ஒடி  அன்னக்கூட் விழா கிருஷ்ணனை  நன்றியோடு  நினைத்து  வழிபட நடந்து வருகிறது.

ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் வருஷாவருஷம் தீபாவளியை ஒட்டி ஒரு வசதியான ஞாயிறு அன்று எல்லோரும் சந்தோஷமாக ஒரு நாள் 108 தின் பண்டங்கள், உணவு வகைகளை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அளித்து அதை பிரசாதமாக பங்கேற்க ஏற்பாடு செயது இதுவரை மூன்று வருஷங்களாக ''அன்னக்கூடை'' விழா நடைபெற்றது.

இந்த வருஷம் நவம்பர் 25ம் தேதி ஞாயிறு அன்று மாலை 3மணி முதல் 7.30 மணி வரை  சென்னை நங்கநல்லூர்  15வது தெருவில் உள்ள  ரஞ்சனி மண்டபத்தில்  அன்னக்கூடை  விழா,  மற்றும் புத்தக வெளியீடு   விழாக்கள் இடம் பெறும். 108 க்கு மேற்பட்ட  பண்டங்களில் இதுவரை   சிலர் பொறுப்பேற்றவைகளை  தவிர  மற்ற தின்பண்டங்கள்  ஆராதனைப் பொருள்கள் பட்டியலிட்டு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.  குறைந்த பக்ஷ  அளவு தேவையானதையும்  குறிப்பிட்டுள்ளது.  

யார் யார் என்னென்ன நைவேத்திய பண்டம் அளிக்க விரும்புகிறார்கள் என்று உறுதி செய்யவேண்டும். அவரவர்  குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு விழா முடிவில் அனைவரும் பிரசாதங்களை பெற்று ஸ்ரீ கிருஷ்ணர் அருள் பெற வேண்டுகிறோம்.

25.11.2018 SUNDAY.
இடம்: ரஞ்சனி ஹால், நங்கநல்லூர் 15வது தெரு, சென்னை 600061
நேரம் : மாலை 3 மணி.முதல்- இரவு 7.30 மணி வரை
நிகழ்ச்சிகள்
1. மாலை 3 மணி முதல் 4 மணி வரை - குழந்தைகளுக்கு வினாடி வினா - மஹா பாரதம் /ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி 50 கேள்விகள் . ஒவ்வொன்றிற்கும் 3-4 விடைகள் இருந்தும் ஒன்று தான் சரியான விடை. அதை டிக் (tick ) செய்யவேண்டும். முதல் 3 பரிசுகள். மாறும் 3 ஆறுதல் பரிசுகள். 10 வயது முதல் குழந்தைகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லை.

2 மாலை 4 மணி முதல் 5மணி வரை - மஹா பெரியவரின் பக்தர்கள் அனுபவம் பற்றிய ''பேசும் தெய்வம்'' இரண்டாம் பாகம் புத்தக வெளியீடு. தொகுத்து எழுதியவர் ஸ்ரீ ஜே.கே. சிவன். புத்தகத்தை வெளியிடுபவர் விழாத் தலைவர் மதுராந்தகம் திருமால் கவி செல்வர் உ.வே. ஸ்ரீ S. ரகுவீர பட்டாச்சாரியார்.  

3. மாலை 5மணி முதல் 6மணி வரை - நங்கநல்லூர் அபிநயாலயா நாட்டிய பள்ளி மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுத்து அளிப்பவர் நாட்டியப்பள்ளி நடத்துனர் திருமதி காயத்ரி ஜம்புநாதன்.

4..மாலை 6 மணி முதல் 7 வரை - போட்டி பரிசுகள் முடிவு அறிவிப்பு பரிசு வழங்குதல். விழாத்தலைவர் கோவர்தன பூஜை, அன்னக்கூடை விளக்க பேச்சு. கோவர்தன ஸ்ரீ கிருஷ்ணன் பூஜை, 108 பிரசாதங்கள் காணிக்கை

5. 7.30 மணி முதல் 7.50 வரை அன்னக்கூடை பக்ஷண பிரசாத விநியோகம்
6. 8.00மணி நன்றியறிவிப்பு

கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொள்வார்கள் என்று திட்டமிட்டு பகிர்ந்து அளிக்க எந்த அளவு தேவை என்று கீழே ஜாபிதா கொடுத்துள்ளோம். யாரால் எந்த உணவுப் பண்டம் தயாரித்து, (வாங்கியோ) கொண்டுவர முடியும் என்று உடனே தெரிவித்தால் மீதி பண்டங்களை பற்றி தீர்மானிக்க உதவும். வெங்காயம் பூண்டு போன்ற லாஹிரி வஸ்துக்கள் சேர்க்கவேண்டாம்.
அனைத்து நைவேத்திய பண்டங்களும் மேற்சொன்ன இடத்துக்கு மாலை 4 மணிக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பல பண்டங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
நங்கநல்லூர் மற்றும் இதர இடங்களிலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தகவலுக்கு: மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அணுகவும்: ஜே.கே. சிவன் 9840279080
SREE KRISHNARPANAM SEVA SOCIETY - 25.11.2018 ANNAKKOODAI OFFERING LIST /QTY
S.K.S.S.-12.22017 ANNAKKOODAI OFFERING LIST /QTY SPONSOR NAME MOB NOS
PLEASE ENSURE YOU CONFIRM YOUR OFFERINGS AND BRING IT AT 2 PM ON 25.11.18 TO THE VENUE 

   S.K.S.S.-12.22017  ANNAKKOODAI OFFERING LIST /QTYPENDING ITEMS  AS ON 31-10-2018
PLEASE ENSURE YOU CONFIRM YOUR OFFERINGS AND BRING IT AT  2 PM  ON 25.11.18 TO THE VENUE 
S.NO.OFFERING  ITEM QuantitySPONSOR NAME mob no.
10SAATHUKUDI 12 NOS
11PALA PAZHAM 50 SULAI
12MAADHULAI 12 NOS
13NAVAL PAZHAM BLUE50 PCS
19GOYYA  GUAVAH50 PCS
20SAPOTA 50 PCS
21 BERIKKAA 1 DOZ
22PINE APPLE   SLICES 20 PCS
23MANGO   RAW10 NOS
24MANGO RIPE5 NOS
26APPAM20 PCS
30JILEBI 20 PCS
31SWEET BOONDHI1 KG
32SON PAPDI1 KG
33MILK KOAH 1 KG
34 GROUND NUT BURPHY100 PCS
35KAAJU KATLI 1 KG
36RAVA LADDU25 PCS
37LIQUID  PAYASAM:        MILK  PAYASAM2 LITR
38SEMIYA PAYASAM2 LITR
39AVAL PAYASAM1  LTR
40KADALAI PARUPPU PAYASAM1 LTR
41COW MILK WITH CARDAMOM1 LTR
42DRY FRUITS       BHADHAM 1 KG
43ACROOT1KG
44PISTHA 1 KG
45CASHEW NUT500 G
46GROUND NUT  ROASTED500 GRM
49SUNDAL VARITETIES  -  PATTAANI 1 KG
50KADALAI PARUPPU SUNDAL 1 KG
51PAITHAMPARUPPU SUNDAL 1 KG
52PAITHAMPARUPPU SUNDAL1 KG
53MOCHCHAI SUNDAL1 KG
54KOTHTHU KADALAI SUNDAL1 KG
55VELLAI KONDAI KADALAI SUNDAL1 KG
56PAYARU  SUNDAL  1 KG
57RICE VARIETIES  -  PLAIN RICE 1 KG
59COCONUT RICE 1.5 KG
62KALKANDU RICE 1 KG
63PULIYODHARAI 2 KG
64VEN PONGAL 2 KG
65SARKARAI PONGAL 1.5 KG
68MAANGAI THOKKU  WITHOUT GARLIC1 BOTTLE
69LEMON PICKELS   WITHOUT GARLIC1 BOTTLE
70PAPADS75 PCS
71POTATO CHIPS2 KGS
72BANANA CHIPS1 KG
73SNACKS   -   MIXTURE 1 KG
74OMAPODI1 KG
75NADA 500 gr
76KARA SEV500 GR
77KARABOONDHI1 KG
78MURUKKU25 PCS
79THATTAI 25 PCS
80THEN KUZHAL25 PCS
81SIDE DISH   -  AVIYAL 2 LTR
82FRUIT PACHDI 1 LTR
83THAYIR PACHADI 1 LTR
84MOR KUZHAMBU 1 LTR
85VEGETABLE KOOTTU 1 LTR
86POOJA OFFERINGS  -  BUTTER 500 G
87POOJA ITEMS  -   COCONUT5 NOS
88BETEL LEAVES 1 KAVULI
89BETEL NUT 100 GR
90SANDHANAM PASTE 100 GR
91SAMBRANI100 GR
92OODHU PATHTHI1PKT
93INCENSE STICK1 PCKT
94FLOWERS  -  ROSE 2 MUZHAM
95JASMINE 2 MUZHAM
96SAAMANDHI2 MUZHAM
97THULASI LEAVES1 KATTU
98KADHAMBAM2 MUZHAM
99NAATU SARKARAI500 GR
100PANAI VELLAM500 G
101CAMPHOR 1 PKT
104SUKKU VELLAM100 GRM
105AVAL PORI 500 GRM
106ARISI PORI 500 GRM
107POTTUKADALAI500GR
108ROSE WATER PANNEER 1 BOTTE
109SEMBARUTHTHI FLOWER 10 PCS
110UDHIRI PUSHPAM2 PKTS


விவரங்களுக்கும் மற்றும் காணிக்கை பொறுப்பேற்கும் விஷயமாக அணுக: ஜே.கே. சிவன் 9840279080
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...