Wednesday, November 14, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம். J.K. SIVAN
மகா பாரதம்.

தீர்த்த யாத்திரை அற்புதங்கள்

''இக்ஷ்வாகு வம்சம் என்றதும் உடனே நமக்கு ஞாபகம் வருவது ஸ்ரீ ராமர் பற்றி தான். அவர் தோன்றிய குலம். அந்த குலத்தில்
எத்தனையோ ராஜாக்கள். அவர்களில் ஒருவன் யுவனாஸ்வன். எத்தனையோ யாகங்கள் செய்தும் அவனுக்கு ஒரு பிள்ளை இல்லை. ராஜ்யத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்து காட்டுக்குத் தவம் செய்ய செல்கிறான். அங்கே பிருகு ரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தான். அவனுக்கு அந்த நேரம் தாங்கமுடியாத தாகம். அங்கிருந்த ரிஷிகள் ஒரு தீர்த்தத்தில் மந்திரங்கள் ஆவிர்பவித்து புத்திர சந்தானப்ராப்திக்காக வேறு எவருக்கோ வைத்திருந்ததை எடுத்து குடித்து விடுகிறான். ரிஷிகள் அவன் தெரியாமல் செய்ததை அறிகிறார்கள். அவன் உடலிலிருந்து ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு இந்திரன் பால் அளிக்கிறான்.

''என்னிடமே அவன் பால் அருந்துவான் '' என்ற இந்திரன் சொன்ன வடமொழி பொருள் படும் வார்த்தை தான் ''மாந்தாதா''. அந்த குழந்தைக்கும் அதே பெயர் ஒட்டிக்கொள்கிறது. மாந்தாதா பலம் மிகுந்த இக்ஷ்வாகு அரசனாக வளர்கிறான். பெருமை சேர்க்கிறான். இந்திரன் அவனுக்கு உதவுகிறான். '

''யுதிஷ்டிரா இதைப் பார், இது யயாதி யாகம் செய்த இடம். அதோ தெரிகிறதே அது தான் சமி மரம். அதற்கு ஒரே ஒரு இலை தான் உண்டு. ஆச்சர்யமாக இல்லை. நமக்குத்தெரியாத ஆச்சர்யங்கள் இந்த உலகத்தில் அநேகம் இருக்கின்றன.

எதிரே இருப்பது தான் பெயர் பெற்ற பரசுராம ஏரிகள். நாராயண முனிவர் ஆஸ்ரமம் அங்கே தான் உள்ளது. இன்று இரவு அங்கே தங்குவோம். முக்ய புண்ய ஸ்தலங்களுக்கு சென்றால் ஒரு இரவாவது அங்கே தங்கவேண்டும். இங்கே யமுனையின் ஸ்நான கட்டம் ப்ளக்ஷவடாரணம் என்ற பெயர் உடையது. (ஆலமர ரகத்தை சேர்ந்தது).

இன்னும் சற்று தூரத்தில் தக்ஷன் யாகம் செய்த இடம் இருக்கிறது. சரஸ்வதி புண்ய நதி பிரவாகமாக ஓடுகிறது அங்கே. அதன் பக்கத்திலே லோபாமுத்ரை அகஸ்தியரை கணவனாக ஏற்றுக் கொண்ட ஸ்தலம் இருக்கிறது. சிந்து என்று பெயர் அதற்கு.

அங்கேயும் போவோம். தூரத்தில் தெரிகிறதே அது தான் விஷ்ணுபாத க்ஷேத்ரம். அதன் அருகே ஒரு வெள்ளி நூலாக வளைந்து ஓடுகிறதே அந்த நதியின் பெயர் தான் விபாஸா நதி. . இதில் தான் தனது புத்ரர்களை இழந்து மனம் ஒடிந்து வசிஷ்டர் இறங்கி முழுகினார். அது வழியாக மானசரோவர் போகலாம்.

'' யுதிஷ்டிரா உனக்கு உஸினவ மகாராஜா பற்றி தெரியுமோ?

''தெரியாதே, சொல்லுங்கள் அவரைப் பற்றி '' என்கிறான் யுதிஷ்டிரன்.

இப்படிச் சொன்னதன் மூலம் என்சைக்ளோபீடியா ரிஷியான லோமசரிடம் இன்னொரு கதை பெறுகிறான். நாமும் அவன் புண்யத்தில் உசினவன் கதையை வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு சொல்லும்போது அருகே அமர்ந்து கேட்கத் தயாராகுவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...