Thursday, November 29, 2018

MIND



                         கடவுள் கொடுத்த பரிசு   J.K. SIVAN 

அஹோ  வாரும் பிள்ளாய்  !   
எத்தனையோ தடவை  என்னென்னவோ காரியம் பண்ணிவிட்டு  ''உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா?''   நீ  மூளையை கழட்டி  வீட்டிலே வைச்சுட்டு  இங்கே வந்தியா?  மூளை இருக்கா உனக்கு?  போன்ற  வாசகங்களை அடிக்கடி கேட்டு மூளை என்று ஒன்று இருந்தால் அது நம்மிடம்  இருக்கிறதா என்று ஆராய்ந்து அதைப் பற்றி கொஞ்சம் விவரங்கள் சேகரித்தேன். அதைத்தான் இங்கே தருகிறேன்.

உடல் சாஸ்திரம் பயின்றவர்கள் மூலையில் 90 பில்லியன் என்கிற பல கோடி நரம்பு செல்கள் பல நூறு கோடி தொடர்பு நாளங்களுடன் சேர்ந்து வேலை செய்வதாக சொல்வதை அப்படியே நம்பவேண்டும். மூளைக்கு எத்தனை செய்திகள் நல்லதோ கெட்டதோ எதை  கொடுத்தாலும்  மறுக்காமல்   வாங்கி வரிசைப்படுத்தி அழகாக கேட்கும்போது கொடுக்கிறது. காசு  கேட்காமல் இந்த  இலவச உதவி.  மூளையைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை.  அதன் சக்தியில் நாம் 5%,  ஐந்து சதவீதம் தான் உபயோகிக்கிறோம் என்று அறியும்போது  வெட்கமாய் இருக்கிறது. இருந்தும் கூட  உபயோகப் படுத்தாத முட்டாள்களாக இருப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.
 
மனது என்பது தான் மூளையின் செயலை கட்டுப்படுத்துகிறது.  இதை  நினைவிலி மனம்  (unconscious  mind) என்று ஒன்று  ஆழ் மனது என்று ஒன்று   (subconscious  mind) பிரித்து  அறிகிறோம். ஆழ்மனம்  கில்லாடி.. எல்லாவற்றையும் நமக்குத்தெரியாமலேயே  அது  சேகரித்து வைத்துக்கொள்ளும்.   மனிதன் உணர்ச்சிகளை  அடக்கி வைக்கிறான், வெளியே காட்டாத அவனது இயற்கையான, இயல்பான திறமைகள், அடிப்படைப் புலன்காணும்  உணர்வு (Perception), எண்ணங்கள், பழக்க வழக்கங்கள்  இதெல்லாம் ஒட்டு மொத்தமாக தான்   உள்மனம் என்று ஆரய்ச்சி முடிவுகள் சொல்கிறது. எதிர் பாராத நேரம், அல்லது தேவைப்பட்டபோது வெளி கிளப்பி தள்ளும். அவ்வளவு தான்...ஒருவன் விஸ்வ ரூபம் அப்போது தான் தெரியும்...

எழுத்துக்களை  பார்க்காமலேயே  கம்ப்யூட்டர் திரை screen  பார்த்துக்கொண்டு நான் இப்போது  இதை எழுதுகிறேன் (typing).   எந்த எழுத்து எந்த இடத்தில்  keyboard ல்  இருக்கிறது என்று என் கண் பார்க்காவிட்டாலும் என் மனதுக்கு தெரிந்து அது  கையை, விரல்களை அசைத்தல்லவோ வேலை வாங்கி என் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வார்த்தைகளாக கொட்டுகிறது. எந்த வார்த்தை சரியாக இருக்கும் என்பதையும் அது அல்லவோ என்னைக்  கேட்காமலேயே தேர்ந்தெடுத்து இதை எழுதுகிறேன்.  யோசித்து பார்த்தால் ஆச்சர்யமாக இல்லை. ஒவ்வொன்றாக நானாகவே தேடி தடவி தடவி அதை அமுக்கி வார்த்தையை யோசித்து எழுதினால் எந்த காலத்தில் இந்த கட்டுரை உங்களிடம் வந்து  சேரும்.  ஆழ்மன சக்தியே உனக்கு நன்றி.   என் உள்ளே இதை நுழைத்து வைத்த கிருஷ்ணா உனக்கு  ரெட்டை (double) நன்றி.

இந்த ஆழ்மனம் ஒரு பெரிய பெரிய  நினைவு வங்கி.  வந்த விஷயங்களை எல்லாம் வாங்கி ரகவாரியாக பிரித்து  அலமாரியில் அடுக்கி வைக்கிறது.  21 வருஷங்கள் ஒரு மனிதன் வளர்ந்து விட்டால்  உத்தேசமாக  அவன் உள்மனது சேகரித்த, மூளையின்  வேலை என்ன தெரியுமா? 40 மில்லியன் தலைப்புகளில்  விஷயங்கள்  ஏறக்குறைய  32,640 பக்கங்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு புஸ்தகம் மூளை மடிப்புக்குள் சேர்ந்திருக்கும். 

மனதை ரெண்டாக பிரித்தோம்.  மேல் மனது,  ஆழ்  மனது என்று.   ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ்  சாப்பிடுகிறாய். அதில் ஒரு ஐஸ் கட்டி மிதக்கிறது.  மிதக்கும்போது மேலே தெரிவதை விட உள்ளே மூழ்கி இருப்பது பெரியது அல்லவே. அது போல்  ஆழ்மனது ரொம்ப பெரியது.   தோட்டக்காரன் விதைத்த செடி மேலே கொஞ்சம் தலை தூக்குகிறது. வேர் ஆழமாக கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து இருக்கிறது. 

புலன்களின் உதவியோடு மேல் மனது வெளிவிவகாரங்களை அறிந்து உள்மனதுக்கு  சேதி சொல்கிறது. உள்மனது அதை கேட்டுக்கொள்கிறது. நல்ல விஷயங்களை தேர்ந்தெடுத்து  மேல்மனது உணர்த்தினால்  உள்மனது அதை கெட்டியாக வாங்கிக்கொண்டு நமக்கு அடிக்கடி எடுத்து சொல்லும். 
ஆழ்மனதுக்கு  கடிகாரம்  இல்லை. நேரம் காலம் எதுவும் கிடையாது.  எப்போதும் நிகழ் காலம் தான் அதற்கு.  நீ நினைத்த  மறுகணம் வேண்டிய விஷயத்தை மூளைக்கு  அனுப்பும். 

 ஒரு விஷயம் சொல்கிறேன். ஆச்சார்யப்படுவீர்கள்.  ஒவ்வொரு வினாடியும் நமது மூளைக்கு 2 மில்லியன் குட்டி குட்டி செயதிகள் போய்க்கொண்டே இருக்கிறது. அதை வடிகட்டி, பதப்படுத்தி பத்திரப்படுத்துவது ஆழ் மனது.
விஷயங்களை கிரஹித்துக் கொள்ளும்போது,  படம், உணர்ச்சி, கனவு,  பிரதிபலிப்பு, மொழி, என்று வார்த்தை இல்லாமல் சேகரித்துக் கொள்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாளம் கொடுத்து வைத்துக் கொள்கிறது. 

ஒரு போட்டோவை பார்த்தோமானால், அதில் இருக்கும் சுப்பு பாட்டி, ராமு தாத்தா, கோபு மாமா, விசா மாமி, இன்னும் ஏழோ எட்டோ பேர் இருக்கும் குரூப் போட்டோ.... படம் ஒன்று. அது சொல்லும் விஷயம் பதினாயிரம்.அவரவருடன் நம் உறவு. அவர்கள் பேசியது, இருந்த ஊர் விஷயம்.  நடை உடை பாவனை, அவர்கள் வாழ்க்கை, அவர்கள் செய்தது சொல்லியது, இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் ஞபாகமாக உடனே வருகிறதே. படம் ஒன்று தானே. விஷயங்கள்??  இது தான் ஆழ்மன வேலை. ஒவ்வொன்றையும் படம் பிடித்து வைத்துக் கொள்கிறது.  அத்தனை விஷயங்களையும் கேட்கும்போது  அதாவது நாம் ''நினைக்கும்போது '' தருகிறது. என்ன உள்ளே அனுப்புகிறோம்  என்பதைப் பொறுத்து தான் ஆழ்மனம் வேலை செயகிறது. ஆகவே தான் நண்பர்களே நல்லதையே நினையுங்கள், செய்யுங்கள், பேசுங்கள், அது உள்ளே ஊறிவிடும்.

ஆழ்மன சிந்தனை இன்னும் கொஞ்சம் அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...