Wednesday, November 21, 2018

RAMAYANAM

இதிகாசம்:
ராமாயணம்   J.K. SIVAN 
                                      
                         மறவாத  சில பெயர்கள் 

31. கருடன் -  கழுகரசன் -  மஹாவிஷ்ணுவின் வாஹனம்.  விநதையின் மகன்.

32. மந்தரை -  கைகேயியின்  பணிப்பெண்களில் ஒருவள்.  முதுகில் கூனலாக இருந்தவள்.  ராமாயணத்தில் ராமன் முடி துறந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்ல காரணமாக இருந்தவள். 

33. வானரர்கள் -  குரங்குகள்  -  சுக்ரீவன் பிரஜைகள். வீரர்கள். ராமாயணத்தில் சீதையை தேடி கண்டுபிடிப்பது முதல்  ராவண ராம யுத்ததில் ராமனுக்காக போரில் பங்கேற்றவர்கள்.  இலங்கைக்கு பாலம்  அமைத்தவர்கள்.

34.  தாடகை -   ஒரு  ராக்ஷஸி. மாரீசனின் தாய்.  ராவணனால்  கொல்லப்பட்டவள் . விஸ்வாமித்திரரின் யாகத்தை கெடுக்க வந்தவள்.

35. மாரீசன் -  ராவணனின் முக்கிய உறவினன்,  சீதையை ராவணன் கடத்த பொன்னிற மானாக வந்து  ராமனை சீதையிடம் இருந்து பிரித்து  ராவணனுக்கு  உதவியவன்.  

36. சம்பாதி -  கழுகு அரசன்  ஜடாயுவின் சகோதரன்.  சீதையை  ராவணனால் எடுத்துச் சென்ற இலங்கைக்கு செல்ல  வானரர்களுக்கு வழி சொன்னவன். 

37. கைகேயி -  தசரதனின் மூன்று மனைவியரில் ஒருவள்.  பரதனின் தாய்.  ராமன் முடி இழந்து பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்ய காரணமானவள் . ராமாயணத்தின் எதிர் மறை பாத்திரங்களில் முதன்மையானவள்.ஆனால் ராவணன் அழிவுக்கு காரணமாக உதவியவள்.

38. ஹனுமான் - அறிமுகம் தேவையில்லாத ராமாயண  பாத்திரம்.  வானர யூதன்.  ராம பக்தன். சிரஞ்சீவி. சீதையை  இலங்கையில் கண்டுபிடித்து அவளுக்கும் ராமனுக்கும் உதவிய மஹா வீரன். தெய்வமாக கொண்டாடப்படுபவன்.

39. அகஸ்தியர் -  மூர்த்தி சிறிதானாலும்  கீர்த்தி மிகவும் பெற்ற  சப்த ரிஷிகளில் ஒருவர்.  நமக்கு காவேரியை தந்தவர். சிறந்த ஞானி. 

40. துளசிதாசர்  -  சிறந்த ராம பக்தர். துளசியை தெய்வமாக வழிபட்ட ஒரு வேதாந்தி. வால் மீகியின்  ராமாயணத்தை   அவதி எனும் வட மொழியில்  ராமச்சரிதமானஸ் என்று நூலாக்கியவர்.

41. விஸ்வாமித்ரர் -  ராஜ ரிஷி.  கௌசிகன் என்ற பெயர் கொண்டவர்.  வசிஷ்டராலேயே ப்ரம்ம ரிஷி என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர்.   ராமனை காட்டுக்கு அழைத்துப் போய்  தாடகையை வதம்  செய்ய வைத்தவர்.  சிவதனுசுவை முறித்து  ராமன் சீதையை  மிதிலையில் மணம் புரிய காரணமானவர்.

42. சத்ருக்னன்  - தசரதனின் நான்கு பிள்ளைகளில் ஒருவன். ராமனின் இளைய சகோதரன். 
ராமருக்கு லக்ஷ்மணன் எப்படியோ  அப்படி  பரதனுக்கு நிழலாக உழைத்தவன். 

43.  மண்டோதரி -  ராவணனின் மனைவி. ராவணன் மாண்டவுடன் ராமனை சபிக்க கோபமாகி  யுத்தகளம்  வருகிறாள். எதிரே காலை வெயிலில் ராமன் எதிரே நிற்பதை பார்க்கிறாள். அவனோ  அவள் நிழல் கூட  தனது மேல் படாமல் ஒதுங்கி நிற்பதை காண்கிறாள். பிறன் மனைவி நிழலைக் கூட  மிதிக்காத ராமன் பிறன்  மனைவியை அபகரித்த  தனது கணவனைக்கொன்ற  ராமனை வணங்கி திரும்பி செல்கிறாள்.

44  அருந்ததி -  ப்ரம்ம ரிஷி வசிஷ்டரின்  மனைவி. ஒரு  நக்ஷத்ரமாக  ஜொலிப்பவள். 

45  மேகநாதன்  -  ராவணனின்  புதல்வன்   மேகத்திலிருந்து  பெரிய சப்தமாக  பிறந்தவன். அதாவது பெரிய இடி போன்ற பலத்த சப்தத்தோடு  தாக்குபவன். மறைந்து தாக்கும் கலையில் வல்லவன்.  தனது சக்தி வாய்ந்த அஸ்திரத்தால்  லக்ஷ்மணனை  மயங்கி விழச் செய்தவன்.


இன்னும் வருகிறார்கள்.

1 comment:

  1. வானர யூதன் என்றால் எப்படி?

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...