Monday, November 12, 2018

NARASIMHA



நரசிம்மாஆஆ !! J.K. SIVAN

நமக்கு தெரிந்த நாலு யுகங்களில் முதல் யுகம் சத்ய யுகம். அது எவ்வளவு வருஷங்களுக்கு முன்னால் என்று சொல்லப்போகிறேன் .பக்கத்தில் ஏதாவது ஒரு தூண் இருந்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளவும். 1.728 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு. அந்த யுகத்தை பற்றி வேதம், புராணம் நிறைய சொல்கிறது. அது சரியா தப்பா, என்று யோசிக்க இடமே இல்லை. எவராலும் நிரூபிக்க முடியாததை யாரோ பெரியவர்கள் முன்பே சொல்வதில் இருந்து அறிவோம். அடுத்த ராமர் கால திரேதாயுகம் 1.296 மில்லியன் வருஷங்கள் முன்பு. அப்புறம் கிருஷ்ணன் வாழ்ந்த காலம் 0.8694 மில்லியன் வருஷங்கள் முன்பு. இதற்கிடையில் சில அவதாரங்களை விஷ்ணு எடுத்திருக்கிறார் அதில் நரசிம்ம அவதாரம் ஒன்று அல்லவா. அது நிச்சயம் 1 மில்லியன் வருஷங்கள் முன்பு என்று அனுமானிக்கிறோம்.

நரசிம்மரை பற்றி சற்று சிந்திப்போம்.
நான் மேலே சொன்ன சத்ய யுகத்தில் ஒரு ரிஷி காஷ்யபர். அவருக்கு திதி அதிதி என இரு மனைவிகள். திதிக்கு ரெண்டு பிள்ளைகள் . ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று. அவர்களுடைய ஒரே வேலை தேவர்களை துன்புறுத்துவது. தேவர்கள் விஷ்ணுவிடம் தங்களை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுகிறார்கள். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை கொன்று வேதங்களை பூமியை காப்பாற்றுகிறார். சகோதரனை கொன்ற விஷ்ணு எனும் நாராயணன் மீது ஹிரண்ய கசிபு கோபமாக இல்லாமல் சந்தோஷமாகவா இருப்பான்? தொடர்ந்து தேவர்களை ஹிம்சிக்கிறான். தேவர்களை விட பலம் அதிகம் பெற பிரம்மாவை நோக்கி தவம் இருக்கிறான். ஹிரண்யகசிபு இல்லாத நேரத்தில் இந்திரன் தேவர்கள் படையோடு அசுரர்களை அழித்து இரணியன் வீட்டுக்கு செல்கிறான். அவன் மனைவி கயாது என்பவளை இழுத்துக்கொண்டு போய் தனது ஊர் அமராவதியில் சிறையில் அடைக்க அவளை தேரில் பிணைக்கிறான்.

சொல்லிவைத்தாற்போல் நாரதர் அங்கே வருகிறார்.

''இந்திரா என்ன செய்கிறாய் இங்கே நீ? ''

''முனிவரே ஹிரண்யகசிபு கொடியவன் தேவர்களை துன்புறுத்துபவன். அவன் எங்கோ தவம் செய்ய காட்டுக்கு சென்றுவிட்ட நேரம் மற்ற அசுரர்களை எல்லாம் அழித்து, அவன் நகரத்தை நாசம் செய்து அவன் மனைவியையும் சிறைப்படுத்தி இழுத்துச் செல்கிறேன்.''

''நிறுத்து உன் அவசர காரியத்தை? அசுரர்களை அழித்ததோ, இரணியன் நாட்டை நாசம் செய்ததோ போகட்டும், இந்த பெண் உன்னை எதிர்த்தாளா? உன்னை தாக்கினாளா? ஆயுதம் தரித்தவளா? இவள் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது இவளை நீ எப்படி எதற்காக சிறை செய்ய இயலும்? சொல் ?''

''இரண்ய கசிபு திரும்பி வந்தால் நடந்ததை அறிந்து என்னிடம் மோதுவான் , அப்போது இவளை பகடைக்காயாக பேரம் பேசி அவனை அடக்கவே தான் ''

''நீ செய்வது மிகப்பெரிய தவறு.. உடனே இவளை விடுவித்து அவள் அரண்மனையில் கொண்டு விட்டுவிட்டு பிறகு செல் ''

''தேவரிஷி நாரதரே, நீங்கள் சொல்வது புரிகிறது. அப்படியே செய்கிறேன். கயாதுவை அவள் அரண்மனையில் கொண்டு விடுகிறான் இந்திரன்.

''பெண்ணே நீ கவலைப்படாதே அம்மா. தைரியமாக இரு.''என்கிறார் நாரதர்.

''மகரிஷி தெய்வம் போல் வந்தீர்கள். எனக்கு இந்திரன் மீது நம்பிக்கை இல்லை. என்னை அவன் கொண்டு சென்றிருந்தால் அவனையும் கொன்று என் உயிரையும் மாய்த்து கொள்வது என்று முடிவெடுத்தேன்.''

'' மகளே, உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறதே, அதைக் கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது? அது என்ன தவறு செய்தது கொஞ்சம் யோசி''

''வாஸ்தவம் மகரிஷி, இனி என் கணவனும் மற்றும் எவருமில்லாத இந்த அசுரர் அரண்மனையில் நான் தனியே இருந்து இந்திரனை எண்ணி பயப்படுவதை விட உங்கள் ஆஸ்ரமம் வந்துவிடுகிறேன் அங்கே நிம்மதியாக இருக்கிறேனே'' என்கிறாள் கயாது .
''ஆஹா என் ஆஸ்ரமத்துக்கு கதவே கிடையாது. என் மகளாக அங்கே வாயேன்''

இது நாரதர் முன்கூட்டியே எதிர்பார்த்து காயை நகற்றியது. அவர் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது.

கயாதுவின் வயிற்றில் வளரும் ப்ரஹ்லாதனுக்கு தினமும் நாரதர் ஸ்ரீமன் நாரயணன் மஹிமை, மஹாத்மியத்தை கயாதுவுக்கு சொல்வதின் மூலம் அறிவிக்கிறார். நாராயண பக்தனாக வயிற்றில் ப்ரஹ்லாதன் வளர்கிறான்.

ஹிரண்யகசிபுவின் கடும் தவம் நிறைவேறி அவன் வரம் பெறுகிறான்.

''என்ன வரம் தேடி தவமிருக்கிறாய் ஹிரண்யா என்று பிரம்மன் கேட்கும்போது ''சாகா''வரம் கேட்கிறான் ..

''அது சாத்தியமில்லை அப்பனே''

''அப்படியென்றால்......''

ஹிரண்யன் தனது வரத்தை விவரிக்கிறான்...
TO CONTINUE..



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...