Monday, November 19, 2018

RAMAYANAM



இதிகாசம்:   J.K. SIVAN 
ராமாயணம் 

            மறவாத  பெயர்கள்  சில 


16.  அங்கதன் -அங்கத்தில் ஒரு ஆபரணம், வீரர்கள் அணியும்   கங்கணம் போன்ற ஒன்றை அணிந்தவன்.  வாலியின் மகன். ராவணனிடம் தூது போனவன். 

17. லவன் -  ராமனின் இரு பிள்ளைகளில் ஒருவன். குசனின் சகோதரன். வனத்தில் பிறந்தவன்.

18. வாலி -  கிஷ்கிந்தா  வானர தேச அரசன்.  மிக பலம் கொண்டவன்.  யாருடன் மோதினாலும் எதிரிகளின் பலத்தில் பாதி பெறுபவன்.  சுக்ரீவனுக்கு உதவ ராமனால் கொல்லப்பட்டவன்.

19.லக்ஷ்மணன் -  ராமனின் சகோதரன். .நிழலாக ராமனை தொடர்ந்த அற்புத சகோதரன். ஆதிசேஷனின் அவதாரம். சுமித்ரையின் மகன்.
20. ஷ்ரவணன்  -  ஒரு  மாதத்தின் பெயர் கொண்டவன். கண்ணற்ற வயதான பெற்றோரை காத்து வந்தவன்.   காட்டில் வாழ்ந்த  ஒரு ரிஷி  குமாரன்.தசரதன் அம்பினால் கொல்லப் பட்டவன்.

21. அஹல்யா -  ரிஷி கௌதமர் மனைவி.  இந்திரனால் ஏமாற்றப்பட்டு கணவனால்  சபிக்கப்பட்டு கல்லானவள். ராமனால் மீண்டும் உயிர் பெற்றவள் 

22.கௌசல்யா  -  தசரதனின் மூன்று மனைவியரில் ஒருவள்.  ராமனைப் பெற்றவள். 

23. வால்மீகி -  வனவேடனாக இருந்து ரிஷியாக மாறியவர்.  ராமாயணத்தை உலகத்துக்கு அளித்த மஹான்.  சீதை  காட்டுக்கு அனுப்பப்பட்டபோது  சீதையை, அவள் குமாரர்கள் லவ குசனை தனது ஆஸ்ரமத்தில்  வளர்த்து பாதுகாத்தவர்.

24. சுநயனா  -  அழகான கண்களை உடையவள் என்ற அர்த்தம் கொண்ட பெயர்.  யாருக்கும் அதிகம் தெரியாத இராமாயண பத்ரம்.  சீதையின் தாய். ஜனகரின் மனைவி.

25. வசிஷ்டர் -   ரிஷிகளில் முதன்மையானவர்.  ராமனுக்கு முடி சூட்டியவர். தசரதனின் குல குரு. ப்ரம்ம ஞானி. 

26. ராவணன்  -  இலங்கை அரசன்.  பத்து தலைகள் கொண்ட அரக்கன். வரங்கள் பெற்று தேவர்களை துன்புறுத்தியவன்.   தேவர்களின் குறை தீர்க்க  அவனை அழிக்க  ஒரு மானுடனாக,  மஹா விஷ்ணுவே  ராமனாக அவதாரம் எடுக்க வைத்தவன். சீதையை கடத்திய பலசாலி.  சிவ பக்தன்.  ராமாயணத்தில் மிக முக்கிய பாத்திரம். விபீஷணன் கும்பகர்ணன்  சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். மூத்தவன்.இந்திரஜித்தின் தந்தை. காலத்தால் சோதிக்கப்பட்ட  ஒரு அற்புத வீரன். 

27. அனுசுயா -  மனதில் எவரிடமும் பொறாமை, அசூயை, இல்லாதவள் என்ற அர்த்தம். ஒரு அருமையான ரிஷி பத்னி.

28. சுக்ரீவன் - அழகான கழுத்தை உடையவன் என்று அர்த்தம். வாலியின் சகோதரன். ராமன் உதவியால் வாலியை அழித்து மீண்டும் கிஷ்கிந்தா அரசனானவன்.  ஹனுமானின் தலைவன். ஹநுமானை  ராமனிடம்  முதலில் அனுப்பியவன்.

29. சசீவன் -  சுக்ரீவனின் ஒரு மந்திரி. 

30. ஜனகன் -   ஒரு  ராஜ ரிஷி.  மிதிலையை  ஆண்டவர்.  சீதையின் தந்தை. அவளை எடுத்து வளர்த்தவர். ப்ரம்ம ஞானி. 

இன்னும் வருவார்கள் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...