Sunday, November 11, 2018

KRISHNA



                               
      ​​  ''நீ ​தான் கடவுளா?''      J.K. SIVAN 
                    ​​

இன்றோ நேற்றோ அல்ல,  எத்தனையோ  வருஷங்களுக்கு முன்பு,   ஒரு கிராமத்தில் ஒரு சிறு 
​ஏழை முஸ்லிம் ​
பையன்.  அப்பா அம்மா​ கிடையாது. 
​  அனாதை ஏழைச்சிறுவனை யார் 
கவனித்து உணவு அளிக்க 
​போகிறார்கள்? 
அவனை  யாருமே அவன் மதத்திலேயே கூட   ஏற்றுக் கொள்ள வில்லையே.  ​இயற்கை அனாதைகளை வளர்க்குமே . வளர்ந்தான். ​ அவன்​ ​ஒரு தனிக்கட்டை.​    ''பாசம்'' என்றால்​ என்ன? ​  கிலோ என்ன விலை ?  என கே
​ட்கும் பாமரன்.பாசமறியாதவன்.  கிடைக்காதவன். 
 எப்படியோ பாவம்  உயிரோடு  வளர்ந்தான். 


பசுக்களை  மேய்க்கும் உத்தியோகம் கிடைத்து வயிறு கழு​வினான். சிறுவன் என்பதால்  வேலையை எப்படி ​, எவ்வளவு ​அதிகமாக  வாங்கமுடியுமோ அப்படி  வேலை வாங்​கும்  எஜமானன்.  அந்த அனாதை  பையனுக்கு  வரும்படி​, வருமானம் ​ என்று  கண்ணில் காசைக் காட்டவில்லை.  ​பசிக்கு சோறு  அவ்வளவு தான். ​சூரிய உதய
​த்தின் 
 போதே அவன் பசுக்களோடு காட்டுக்கு சென்றுவிடுவான். இயற்கை அவனைத்   தாயாக வளர்த்தது.

​தினமும்  மாடு மேய்க்கும் ​காட்டில் ஒரு ​ ஒரு சின்ன ஆறு . அதில்  நிறைய பேர் வந்து ஸ்நானம் பண்ணுவதை​ப்  பார்ப்பான்.    ஒரு பிராமண பண்டிதர்​ உரக்க மந்திரங்களை சொல்லிக்கொண்டு வருவார். பஞ்சகச்சம், காதில் கடுக்கன். பட்டை பட்டையாக விபூதி கழுத்தில் கையில் ருத்ராக்ஷம், தலையும்  அரை குடுமி. ​  தினமும்  வருவார்.  நதியில் நீராடுவார். கரையில் புல்லில்  கிழக்கே பார்த்து  அமர்வார். கண்களை மூடிக்கொண்டு ஏதோ முணுமுணு  என்று தியானம் செய்வார். நீண்ட நேரத்திற்கு பின்  எழுந்து செல்வார்.

''
​எ
ன்ன செய்கிறார் இவர்?''  ​என முஸ்லீம் 
பையனுக்கு ஆச்சர்யம்.  அவனுக்கு  ஜபம், பூஜை, ஒன்றுமே தெரியாதே.​பள்ளிக்கூடம் படிப்பு ஒன்றுமே கிடையாதே. ​  ஒருநாள்  தைரியமாக  அவர் அருகே சென்று​ அவரிடம் கேட்டான் ​

''சாமி,  கண்ணை மூடிக்கிட்டு  என்ன செய்றீங்க ? ''

அவனை ஏற இறங்க பார்த்த  பண்டிதர் அவனை  ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்ல தயங்கினார்.  பிறகு என்ன தோன்றியதோ ​பதில் சொன்னார்:​

'ஏ  முட்டாளே,  'நான்  கடவுள்  தரிசனத்திற்காக த்யானம் செய்கிறேன்

​. தொந்தரவு பண்ணாதே  போ ​
'

பையனுக்கு  கொஞ்ச காலமாகவே  கடவுள் என்ற பெயரில்  யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற
​ அளவுக்கு ​
 கேள்வி​ப் ​ பட்டிருந்தான் . அவர் மேல் மதிப்பு எதற்காக என்றால் அவர் தான் எல்லோரையும் காப்பாற்றுகிறார் என்று யாரோ சொல்லி கேட்டதால்.  ஆகவே  கொஞ்ச காலமாகவே  அவன் மனதிற்குள்  அந்த இனம் புரியாத  கடவுள் என்ற வஸ்து  இடம் பிடித்து விட்டது. 
​அவர் நமக்கும் உதவுபவரா? உதவுகிறாரா?  அவனுக்கு அந்த  ''கடவுளை'' பிடித்துவிட்டது. பார்க்க முடியுமா?


​''​கடவுள்​'' ​ என்று சொல்லி விட்டதால்  அந்த  பண்டிதரை விடாமல்  பின் தொடர்ந்தான் சிறுவன்.  
​அவருக்கு முன்பாக ஒருவேளை கடவுள் தோன்றினால் தானும் பார்க்கலாமே என்ற எண்ணம். ​
அவருக்
​கோ ​
 அவனைக் கண்டாலே  வெறுப்பு. 
​ 
ஏனென்றால் அவன்  அவரைப் பார்க்கும்போ
தெல்லாம் 
​கடவுளை பற்றி ஏதாவது கேள்வி கேட்பான்.​


''எனக்கும்  கண்ணை மூடிக்கொண்டால் கடவுள்  தெரிவாரா?'' என்ற  தொண தொணப்பு  துளைத்து 
​எடுத்தான். அவர் அவனை ஒரு புழுவாக மதித்தாலும் அவன் அவரை விடுவதாக இல்லை. 
  ஒருநாள் அவனை எப்படியாவது விரட்ட வேண்டும் என்பதற்காக, 
​அந்த பிராமணர் ​


 ''
​அடே பையா,  ​
நீயும்  கண்ணை மூடிக்கொண்டுகடவுளை நினைத்துக் கொண்டு  உட்கார்.   எனக்கு தெரிவதைப் போலவே உனக்கும்  கடவுள் தெரிவார்'' என்று சொல்லி விட்டு  போய்விட்டார்
​ அந்த பிராமணர்.


உடனே ஓடினான்  நதிக்கு.  அமிழ்ந்து குளித்தான்.  ஈரத்தோடு தரையில் புல்லில் அமர்ந்தான். கண்களை 
​இறுக்க ​
மூடிக்கொண்டு  ''ஏ கடவுளே  நீ
​ என் கிட்டே ​
 வா '' என்று வேண்டினான்.   வெகுநேரம் ஆனது. ஒன்றுமே நடக்கவில்லையே. 
​ ​
அவனோ  விடாப்பிடியாக  கண்ணை மூடிக்கொண்டே  ''கடவுளே வா'' என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.  பசி வயிற்றைக் கிள்ளினாலும் அவன் 
​அதைப்பற்றி கொஞ்சமும் ​
 கவலைப் படவில்லை.

கிருஷ்ணன் வெகுநேரம் அந்த பையனைக்  காக்க வைக்க விரும்பவில்லை.​ தொழில் நேசம்.​

 'என்னைப் போலவே அந்த பையனும்  பசுக்களை மேய்ப்பவன் அல்லவா. அதற்காகவாவது
​......​
''  என்று  கருதி கிருஷ்ணன்  பையன் அருகில் வந்து நின்றான். பையன் ரொம்ப நேரம்  கழித்து  கண்ணைத் திறந்தான்.

எதிரே, பளபளக்கும் பீதாம்பரம்,  கேயூர குண்டலங்களோடு, கௌஸ்துப  துளசி ஹாரத்தோடு , சந்தனம் பூசியவாறு, தலையில் அழகிய  மயிலிறகை சூடிக்கொண்டு கையில் ஒரு புல்லாங்குழலோடு கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே நின்றதை பார்த்தான்.

''நீ  தான்  கடவுளா?
​ ​
 அந்த பிராமண பண்டிதர் சொன்ன ஆளா?  அவர் முன் தோன்றியவனா?''

''ஆமாம்''  என்று  தலையை ஆட்டி
​ சிரித்துக்கொண்டே 
 ஆமோதித்தான்
​ ​
 கிருஷ்ணன்.

'இந்த  ஆள்  சொல்லுவதை நம்பலாமா? தெரியவில்லையே. நான் இதற்கு முன் கடவுள் எப்படி இருப்பார் என்றே தெரியாதவன் ஆயிற்றே
​.  என்னைப்போல ஒரு பையனாக அல்லவோ இவன் இருக்கிறான். ஆனால் தலையில் மயில் இறகு, கையில் ஏதோ ஊதாங்குழல்,  நிறைய மாலை,  நீலகலர்,  வேடிக்கையாக இருக்கிறானே.   இவனைப் பார்த்தால் கடவுளா என்று தெரியவிலையே. ஒருவேளை என்னோடு விளையாடுகிறானா? சொல்வதெல்லாம்  பொய்யோ?  அடேடே  .....  ஒருவேளை இவனே கடவுளாக இருந்தால்.....?   இவனை விட்டுவிடக்கூடாதே....... மேற்கொண்டு 
 என்ன செய்யலாம் ?'' என்று எண்ணிய  பையனுக்கு ஒரு யோசனை தோன்​றியது ..

''ஏ  கடவுளே, நீ  இங்கிருந்து இனி என்னிடமிருந்து தப்ப முடியாது. உன்னை எனக்கு  யாரென்றே தெரியவில்லை.  விநோதமாக இருக்கிறாய். நான் வரும்வரை நீ இங்கே இரு. அந்த  பண்டிதரை பிடித்து அழைத்து வருகிறேன். அவருக்கு
​ தான் ​
 உன்னை தெரியுமே  அவர் அடை
யாளம்
​ ​
சொல்லட்டும்
​ ​
நீ தான் கடவுள் என்று''


​''சரி '' என்று தலையாட்டினான்  கிருஷ்ணன்.   பையனுக்கு உள்ளூர  சந்தேகம். ​நம்மை ஏமாற்றிவிட்டு இந்தப் பயல் ஓடிவிட்டால் . அவனை எங்கு போய் தேடுவது.  வந்தவனை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடலாமா? 


நிறைய  கொடிகளை அறுத்து  வடமாக்கி  கிருஷ்ணனை  ஒரு மரத்தில் கட்டிப் போட்டான்
​ அந்த முஸ்லீம் 
 பையன். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே  அவன் கட்டுவதை தடுக்காமல் கட்டுண்டான்.​ கட்டுண்ட மாயன் அல்லவா? ​  வெயில் கொளுத்தியது. 
  ​
பையன் 
​வெகு வேகமாக ​
ஓடினான். பண்டிதரைத் தேடினான்.

தூரத்தில் எங்கோ பண்டிதரை பார்த்துவிட்டான். வெயில் சுட்டெரித்தது. தலையில் துணியை போட்டுக்கொ
ண்டு அவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

''சாமி  சாமி'' , என்று  பையன் அலற  வெறுப்புடன் அவனை திரும்பி பார்த்தார்  பண்டிதர். வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''ஏண்டா
​, ​
  என்னை தொந்தரவு பண்ணித் தொலைக்கிறாய். எதற்கு இப்போ வந்தாய்?''

மூச்சு வாங்க  பையன்
​ பேசினான்:  

''சாமி நீங்க உடனே  ஆத்தங்கரைக்கு வரணும்.  யாரோ  ஒரு ஆ
​ளா , பையனா என்று தெரியலே. ​
 நான்தான்  கடவுள் என்று  என் எதிரே வந்து நின்றான். அவன் தான் கடவுளா' ன்னு  நீங்க  தான் பார்த்து சொல்லணும்.  அவனை ஓடாத படி கட்டிப்போட்டு விட்டு வந்திருக்கிறேன்''​   

பிராமணர் எவ்வளவோ  சொல்லி அவனிடமிருந்து கழண்டுகொள்ள பிரயத்தனம் செய்தார். அவன் விடுவதாக இல்லை. ​
''க்ரஹசாரம் இந்த பையனோடு.  பிராரப்தம்
​...  கர்மம்....​
'' .  அவனை சபித்துக்கொண்டே  பண்டிதர் அவனோடு நதிக்கரை வந்தார். ஏனென்றால் அவன் வழி மறித்து, அவரை ​மேலே செல்ல  ​விடவில்லையே. வேறு வழி?.

''அதோ பாருங்க அவனை''   பண்டிதர் ஒரு பெரிய  குவியலாக  செடி கொடிகளை, மரத்தோடு சேர்த்துக் கட்டியதை பார்த்தார். ''என்ன  இது பேத்தல்?'' அவருக்கு  கிருஷ்ணன்

​ கண்ணுக்கு த் ​
 தெரியவில்லை.

''அதோ அந்த ஆளை பாருங்க, அவர் தான்  கடவுளா?''​   அவருக்கு வெறும்  செடிகொடிகள்  மரத்தோடு கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அது அசைவதும் தெரிந்தது. ​

அவர் விழிப்பதை பார்த்து  அவன்  '' ஏங்க,  சரியா அந்த ஆள்  முகம் தெரியலையா.  இதோ அந்த கொடிகளை கொஞ்சம் விலக்கி விடறேன் அப்போ பார்த்து சொல்லுங்க. அதோ பாருங்கள் இடுப்பிலே   மஞ்சள்  துணி, கழுத்திலே  துளசி மாலை. சந்தனம் நெத்தியிலே, கையிலே ஒரு  புல்லாங்குழல், தலையிலே பாருங்க  அழகாக  ஒரு பெரிய  மயில் இறகு கூட செருகி  வைத்திருக்கிறான் இந்த நீல வர்ண  ஆசாமி.''  அடையாளம் காட்டி இவர் தான்  கடவுள் என்று  நீங்க சொன்னால் நான்  அவரை  அவிழ்த்து விட்டுடுறேன்''

பண்டிதருக்கு  கிருஷ்ணன் கண்ணில் தென்படவில்லை, என்றாலும்  பையன் விடமாட்டான் என்பதால், அவன் வர்ணனைகள்  கிருஷ்ணனை அறிவுறுத்துவதால் ''ஆமாம்  இவரே தான் கடவுள் '' என்று தடுமாறிக்கொண்டே சொன்னார்.

பையன்  ஒரே பாய்ச்சலில்   கிருஷ்ணன் அருகே சென்று அவர் மீதிருந்த கொடிகள் எல்லாம் அகற்றி  அவர்  காலில் விழுந்தான்.  ''சாமி  உன்னை பார்த்ததில்லை. அய்யிரு சாமி சொன்னப்பறம்  தானே  எனக்கு தெரியுது. உன்னை  பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குது.  ரொம்ப நேரமா உன்னை கட்டிப்போட்டுட்டேனே.

சிரித்துக்கொண்டே  அந்த பையனிடம் கிருஷ்ணன் '' அந்த பண்டிதர்  என்னை பார்த்த
தில்லை.  பொய் தான் சொன்னார் உன்னிடம்'' என்று  சிரித்துக்கொண்டே சொன்னான்

'பையா உனக்கு என்ன வேண்டும் சொல்''

''சாமி  எனக்கு என்ன வேணும்.  ஒண்ணுமே  வேண்டாம். நீங்கள் தான்  கடவுள் என்றால்  உங்களைப் பார்க்க

​ணு 
ம்னு தான்  ரொம்ப நாளா  ஆசை. ​நீங்க தான் இத்தினி வருஷமா என்னை காப்பாத்தினவருன்னு  சொல்றாங்க. கேட்டதிலிருந்து உங்களை  பார்க்க ஒரு ஆசை. ​இப்போ பாத்துட்டேன்.  அந்த  அய்யிரு சாமி தான் பார்த்ததே இல்லை  என்கிறீங்களே. அவருக்கும்  உங்களை காட்டணும். அவராலே  தானே  சாமி  நானே உங்களை பார்த்தேன் இப்போ''

பண்டிதருக்கும்   முஸ்லிம் பையன் தயவால்  கிருஷ்ண தர்சனம் 
​ கண் இமைக்கும் 
நேரம் கிடைத்தது. அந்த பண்டிதர்  பையன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அவனை குருவாக ஏற்றுக்கொண்டார்.

பையன் ஞானம் பெற்றான்.  பிற்காலத்தில் 
​''​
ஹரிதாசர்
​''​
 என்று பெயர் பெற்று விளங்கினான்.  கௌடிய வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில்
​  ​''
நாம ஆச்சார்யர்
​'' ​
 என்று  போற்றப்படுகிறார். ஏனெனில் ஒவ்வொருநாளும்  கிருஷ்ணன் நாமத்தை 3 லக்ஷம் முறை ஜபித்து அதிலேயே  மூழ்கினார். ''மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிர்கள், தாவரங்கள்,  இவற்றால்  கிருஷ்ணன் நாமத்தை ஜபிக்க முடியாதே, அவர்களுக்காக  நான்  ஜபிக்கிறேன்' 
என்பார் . அற்பர்கள் அவரை  முஸ்லிம் என்று இகழ்ந்தார்கள். அவர்  இதெல்லாம் லட்சியம் செய்யவில்லை. 
​அவர் தான்  இதெல்லாம் காதில் கேட்காத  ரொம்ப ரொம்ப  ​
உயரே சென்றுவிட்டாரே.

ஒரு உயர்ந்த  பிராமண ஞானி அவரை வணங்கி போற்றி  பூரி  ஜகந்நாதர் ஆலயம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் சரியான ஒரு இடத்தில் அவர் சமாதி அமைய  உதவினார்.

பக்தி எப்படி பூரண நம்பிக்கையின் அடிப்படையில் என்று  புரிகிறதா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...