Tuesday, November 9, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  - நங்கநல்லூர்  J K  SIVAN.

ஸ்லோகங்கள்  68-70    நாமங்கள் 289-304.

श्रुति -सीमन्त-सिन्दूरी-कृत पादाब्जधूलिका ।
सकलागम सन्दोह  शुक्तिसम्पुट मौक्तिका ॥ 68 ॥

Shruti simanta sirurikruta  padabja dhulika
 Sakalagama sandoha shukti sanputa maoktika – 68

ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத  பாதாப்ஜதூலிகா |
ஸகலாகம ஸந்தோஹ சுக்திஸம்புட மௌக்திகா || 68

पुरुषार्थप्रदा, पूर्णा, भोगिनी, भुवनेश्वरी ।
अम्बिका,‌உनादि निधना,हरिब्रह्मेन्द्र सेविता ॥ 69 ॥

 Purushardhaprada purna bhogini bhuvaneshvari
Anbika nadi nidhana  paribramhendra sevita – 69

புருஷார்த்த ப்ரதா பூர்ணா  போகிநீ புவநேச்வரீ |
அம்பிகாsநாதிநிதநா ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா || 69

नारायणी, नादरूपा,नामरूप विवर्जिता ।
ह्रीङ्कारी, ह्रीमती, हृद्या, हेयोपादेय वर्जिता ॥ 70 ॥

Narayani nadarupa namarupa vivarjita
 Hrinkari hrimati hrudya  heyopadeyavarjita – 70    
 
நாராயணீ நாதரூபா  நாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய வர்ஜிதா || 70  

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (289-304) அர்த்தம்

*289*श्रुतिसीमन्तसिन्दूरीकृतपादाब्जधूलिका - ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜதூலிகா -  
ஸ்ரீ லலிதாம்பிகையே  அதி உன்னத  பரப்பிரம்மம் என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமத்தின் மூலம். வேதங்கள்  கூட பிரம்மத்தை  விளக்க இயலாது என்றால்  அவளை விளக்க எவரால் முடியும்? சௌந்தர்ய  லஹரி   (2-3) '' அம்மா  கண்ணுக்கு தெரியாத உன் பாத தூளி ஒன்று  போதுமே இந்த அஞ்ஞான இருளை போக்க '' என்கிறது.

* 290 * सकलागमसन्दोहशुक्तिसम्पुटमौक्तिका -   ஸகலாகம ஸந்தோஹசுக்திஸம்புட மௌக்திகா --
வேதங்களை  முத்து சிப்பிகளாக  கொண்டால் அதில் உள்ளே இருக்கும்  முத்து ஸ்ரீ லலிதாம்பிகை.   தைத்ரிய உபநிஷத் ஒரு இடத்தில்   (II.9)  ''வார்த்தைகள் எண்ணங்களோடு கலந்து பிரம்மத்தை தேடி சென்று அடைய முடியாமல்  திரும்பிவருகிறது''  என்கிறது. அடிக்கடி சொல்கிறேனே. ''கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை ''  

ஞானத்தை  ஆறு விதமாக அணுகுவார்கள் :
ப்ரத்யக்ஷமாக அறிந்துகொள்வது,  உத்தேசமாக அனுமானமாக, சப்தம், ஆகமம் மூலம், எதோ ஒரு உதாரணம், உபமானம் மூலம்,  அர்த்தத்தை வைத்து, அர்த்தாபத்தி , (சூழ்நிலையின் அடிப் படையில் மேற்கொள்ளும் அனுமானம். சந்தர்ப்ப சூழ்நிலையை நன்கு அறிந்து அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருதல். புலன்களால் அறிய முடியாத, ஊகிக்க முடியாத விஷயங்களையும் இதன் மூலம் அறிய லாம். துப்பறிதல்  மாதிரி) அல்லது   எந்த தயக்கமுமின்றி அனுபலப்தி.( எதிர்மறை நிரூபணம். அதாவது, ஒரு பானையை இங்கே காணோமே ,  அப்படி என்றால்  இங்கே பானை இல்லை என்று பொருள்  கொள்வது போல ). எப்படி அறிந்தாலென்ன?

* 291*  पुरुषार्थप्रदा - புருஷார்த்த ப்ரதா -
நமக்கு  தான தர்ம பலன், ஏகபோக ஐஸ்வர்யம், சந்தோஷம்,  மோக்ஷம் எல்லாம் அருள்பவள் அம்பாள்.

* 292 *  पूर्णा -  பூர்ணா --  
அம்பாள்  எந்த வித  குறையுமில்லா  பரி பூரணமானவள்.  பூர்ணமத, பூர்ணமிதம்,பூர்ணாத் பூர்ணமுதச்யதே,  பூர்ணஸ்ய, பூர்ணமாதாய, பூர்ணமேவா வசிஷ்யதே''    --   இது ஸ்ரீ லலிதாம்பிகையே தான்.  அள்ள  அள்ள குறையாத  அமுத சுரபி போல் அருள்பவள்.

* 293 *  भोगिनी -  போகிநீ  -  
அம்பாள் அறியாத, அனுபவிக்காத  போக போக்யங்கள் உண்டா?   குண்டலினி சக்தியை  ஒரு சர்ப்பமாக ஊகிக்கும்போது  போகினி  என்பது பெண் சர்ப்பம் என்று  ஒரு  அர்த்தமும் உண்டு.   .

* 294 *  भुवनेश्वरी - புவநேச்வரீ    -
ஈரேழு  உலகமும்  சகல புவனம்  எனில் அதெல்லாவற்றிற்கும்  ஈஸ்வரி தலைவி அம்பாள்.

* 295 *  अम्बिका - |அம்பிகா  --
லோக மாதா  அம்பாள்.  ஸ்ரீ மாதா  என்று சொல்லும்போது உலக ஜீவன்களின்  தாய்  உலகம னைத்துக்கும் தாய்  என்று  போற்றுகிறோம்.

*296*  अनादिनिधना - அநாதிநிதநா  -  
அம்பாளுக்கு  தோற்றம், ஆரம்பம் அல்லது  முடிவோ இல்லையே!

*297* हरिब्रह्मेन्द्रसेविता -ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா    -  
அம்பாளை  தொழுதேத்த நிற்பவர்கள் யார்?   விஷ்ணு, ப்ரம்மா , சிவன், இந்திராதி தேவர்கள் என்றால் அம்பாள்  சக்தியை என்னவென்று சொல்வது.

*298* नारायणी - நாராயணீ -   சங்கரனும்  நாராயணனும்  சேர்ந்த  ஸ்வரூபம்  சங்கரநாராயணன்.  அம்பாளும்  சிவனும் சேர்ந்த ஸ்வரூபம்  அர்த்த நாரீஸ்வரி.  தூத்துக்குடி  சங்கரராமர்  கோவிலில்  நான்  தரிசித்து மகிழ்ந்த  பாகம் பிரியாள் . தினமும்   காலையிலோ சாயந்திரமோ சென்றது  நினைவிருக்கிறது.  நாராயணனாக அம்பாள் இருப்பது நாராயணி ஸ்வரூபம்.   அம்பாளை  விஷ்ணு ரூபிணி என்று அதனால் தான்  போற்றுகிறோம்.

*299* नादरूपा -   நாதரூபா  --  
சப்த ஸ்வரூபிணி.    இனிய  தேவகானமாக , மந்த்ர கானமாக  இருப்பவள்  அம்பாள் ஸ்ரீ லலிதை . நாத உபாசனையில் வழிபடப்படுபவள்.

*300*   नामरूपविवर्जिता -விவர்ஜிதா -
 இவ்வளவு நாமங்களை சொல்லிக்கொண்டே வந்துவிட்டு  ஹயக்ரீவர்  ஸ்ரீ லலிதா  நாமமே  இல்லாதவள்  ரூபமே  இல்லாதவள் என்பதையும்  எடுத்துக் காட்டுகிறார். ப்ரம்மத்துக்கு  நாமம்  ஏது  ரூபம் ஏது.  நாமாக   வைத்து கூப்பிட்டு  மகிழ  எத்தனையோ பேர்  இருந்தாலும் அவள் இயல்பாக  பெயரோ உருவமோ இல்லாதவள்.

* 301 * ह्रीङ्कारी -   ஹ்ரீம்காரீ -
வண்டுகளிடமிருந்து எப்படி ஒரு ரீங்கார சப்தம் வருமோ அதுபோல் அம்பாளிடமிருந்து சுநாதமாக ஒரு ஹ்ரீம் என்கிற சக்தி சப்தம் வந்து கொண்டே இருக்கும். ஹ்ரீம் என்கிற சப்தத்துக்கு சாக்த ப்ரணவம் என்று பெயர். ஓம் என்கிற ப்ரணவ சப்தம் போல் சக்தி வாய்ந்தது. பஞ்சதசியில் ஒவ்வொரு கூடம் எனப்படும் பிரிவும் ஹ்ரீம் என்கிற சப்தத்தோடு முடியும். அமைதியும் மங்கலத்தையும் அருளும் சப்தம்.   ஒரே ஸ்ருதியில் , ஏதோ மந்திரம் சொல்வது போல்  வண்டுகளின்  சப்தம் கேட்கிறோம்.  ஹ்ரீம்  என்ற  அம்பாள் பீஜ மந்த்ரத்தை போல்    வண்டுகள் சப்திப்பதால்  ஹ்ரீம்காரம்  என்று சொல்வது காலப்போக்கில் ரீங்காரம்  ஆகிவிட்டது.  

*302* ह्रीमती -   ஹ்ரீமதீ -
அம்பாள் நாணத்தில் முகம் சிவப்பவள்.

*303*   हृद्या -  ஹ்ருத்யா --
ஹ்ரிதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள் லலிதாம்பிகை. ஹ்ருதயத்தில் மத்தியில் ஆத்மா வின் இடம் என்பார்கள். அதுவே அம்பாள். நமது தேகத்தில் வலது பக்கத்தில் சத்தம் ரத்தம்  இல்லாமல்  உள்ளது  ஹ்ருதயம்  என்பார்  ஸ்ரீ ரமண மஹரிஷி . எக்ஸ்ரே, ஸ்கேன் இதில் எல்லாம் அகப்படாது. டாக்டர்கள் வெட்டி ஓட்டுவது இடது பக்கத்தில் உள்ள  ஹ்ருதயம். கடோபநிஷத் (II.i.13) '' புருஷன் எனும் ஆத்மா ஒரு கட்டைவிரல் அளவு கொண்டது. புகையற்ற ஒளிவிடும் ஜோதியாக தேகத்தின் நடுவே உள்ளது '' என்கிறது.

*304*  हेयोपादेयवर्जिता - ஹேயோபாதேய வர்ஜிதா --
அவளிடம் உள்ள தன்மையில் எதையுமே கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது. பூரண ப்ரம்மம் அவள். சாஸ்திரங்களை அப்பாற்பட்டவள்.

சக்தி ஆலயம்   -   திருமீயச்சூர்  லலிதாம்பிகை.  
இந்த அம்பாளை பற்றி எழுதி இருக்கிறேன்.  அவளைப்  பற்றிய  ஒரு அரிய  சம்பவம் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இது நடந்ததாக, கற்பனை இல்லை, என்று  யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன்.

ரொம்ப  வருஷங்களுக்கு  முன்னே,  ஒரு பெங்களுர்  பெண்மணிக்கு, அம்பாள் பக்தைக்கு, அடிக்கடி கனவில் அம்பாள்  ''எனக்கு தங்க கொலுசு வேண்டுமே கொண்டுவா''  என்று கேட்பதைப்போலவே இருந்தது.  

அவளுக்கு தமிழ்நாட்டில்   திருவாரூர் ஜில்லாவில்  திருமீயச்சூரில்  லலிதாம்பாள் இருக்கிறாள் என்பதே தெரியாது.  எங்கெல்லாமோ கனவில் வந்த அம்பாளை தேடினாள் . வெகுநாள்  கழித்து   திடீரென்று ஒருநாள்  ஏதோ ஒரு ஆன்மீக புத்தகத்தில் திருமீயச்சூர்  லலிதாம்பாள் படம் கிடைத்து கண்டு பிடித்துவிட்டாள். 

''அம்மா  நீ  இங்கே இருக்கிறாயா? உ ன்னை எங்கெல்லாமோ தேடினேன்.    இதோ நீ கேட்டதை வாங்கி விட்டேனே''  என்று அம்பாள் சந்நிதியில் நின்றாள்.

''என்ன வேண்டும் உங்களுக்கு ?''   அர்ச்சகர் கேட்டதும்  வார்த்தை வரவில்லை. கண்கள் ஆறாக பெருக கையிலிருந்த   பெட்டியை திறந்து காட்டினாள்.   அற்புதமாக  செய்யப்பட தங்க கொலுசு  கண்ணைப் பறித்தது.
அர்ச்சகர் முகம் சுளித்தார்.  
''முடியாதே அம்மா.  அம்பாள்  காலைச்  சுற்றி  கொலுசு அணிவிக்க வழியில்லையே. திருப்பி எடுத்துக் கொண்டு போங்கள் ''
''இல்லே சுவாமி.  அம்பாள்  என்னை விடாமல் அடிக்கடி கனவில்  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாளே. அதனால்  தானே பணத்துக்கு ஏற்பாடு பண்ணி இதை அவளுக்கு  செய்து கொண்டு வந்தேன். பாருங்கள்  வழி இருக்கும். அம்பாள் ஏற்றுக் கொள்வாள்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் கேட்டிருக்கமாட்டாளே.''
பல வருஷங்களாகஅம்பாளை தொட்டு  அபிஷேகம் பண்ணி,   துடைத்து,ஆடை  ஆபரணம் உடுத்திய அந்த அர்ச்சருக்கு என்ன செய்வதென்றே புரியாமல் உள்ளே   சென்றார்.அம்பாள் கால்களை, பாதங்களை உன்னிப்பாக கவனித்தவருக்கு  புதிதாக ஒரு  அதிசயம் ஆச்சர்யம் காத்திருந்தது. அம்பாள் கணுக்காலை  சுற்றி கொலுசு நுழைய  ஒரு  சிறிய இடம் எங்கிருந்து வந்தது????   அம்பாள்  தான்  கேட்ட கொலுசை அணிந்தாள் . பக்தை மகிழ்ந்தாள். 
''திருப்தியா அம்மா உனக்கு , நீ கேட்டதை தந்தேன் பிடிக்கிறதா?''

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...