Wednesday, November 3, 2021

SRI LALITHA SAHASRANAMAM


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்   J.K. SIVAN

ஸ்லோகங்கள்:  57-58  நாமங்கள்:  232-237`

महेश्वर-महाकल्प-महाताण्डव-साक्षिणी ।
महाकामेश-महिषीमहात्रिपुर-सुन्दरी ॥ ५७॥

Maheswara Mahakalpa Maha Thandava Sakshinee
Maha Kaamesa Mahishee Maha Thripurasundari

மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேச மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ || 57

 चतुःषष्ट्युपचाराढ्या चतुःषष्टिकलामयी ।
महाचतुः -षष्टिकोटि-योगिनी-गणसेविता ॥ ५८॥

Chatustatyupacharadya Chathu sashti kala mayi
Maha Chathusashti kodi yogini gana sevitha

சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டி கலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா || 58

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (232 - 237 )  அர்த்தம்

* 232 * महेश्वरमहाकल्पमहाताण्डवसाक्षिणी -மஹேச்வர மஹாகல்ப  மஹா  தாண்டவ சாக்ஷிணே. --  ஊழித்தாண்டவம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பிரபஞ்ச  ஆரம்பத்திலும்  அப்புறம் ஒவ்வொரு யுக  முடிவிலும்   பிரளயம் தோன்றி எல்லாம் அழிந்து மீண்டும் புனருத்தாரணம், புது யுகம் பிறக்கும். அந்த நேரத்தில் அதை விளைவிப்பது ஈஸ்வரனின் சங்கல்பம். அந்த நேரத்தில் அவன் அருகே இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை மட்டுமே.  பிரபஞ்சத்தில் சிவனும் சக்தியுமன்றி வேறெதுவும் இல்லாத நிலை அது.  எல்லாமே  சிவனும் ஐக்கியமாகி மீண்டும் துவங்கும் நேரம். அம்பாள் காலராத்ரி என்று ஒரு பெயர் கொண்டவள்.
 
* 233 * महाकामेशमहिषी - மஹாகாமேச மஹிஷீ -  சர்வமும்  மீண்டும் புத்துயிர் பெற உதவுபவள்  காமேஸ்வரி,  பரமேஸ்வர காமேஸ்வர பத்னி.
 
* 234 *  महात्रिपुरसुन्दरी -மஹா த்ரிபுரஸுந்தரீ -  
முப்புரங்களிலும் அவளைப்போல கொள்ளை அழகு கொண்ட  அதி ரூப சுந்தரி யார் ?  காயத்ரி  மற்றும்  64  கலைஞானமாக எந்த ரூபத்திலும் மிளிரும்  ஞான சுந்தரி. அவளை  அறுபத்து நாலு உபசாரங்களோடு  வழிபடுகிறோம். பூக்களை அர்ச்சிப்பது, வளையல் அணிவிப்பது, விசிறுவது, வாசனாதி திரவியங்களை அளிப்பது, வித விதமான நைவேத்தியங்களை அர்பணிப்பது  போன்றவை.  ஷோடசோபசாரம் என்று பதினாறு தெரியும். அதைப்போல  நாலு மடங்கு அதிகமான இந்த  64 வகை உபச்சாரங்களோடு பூஜிப்பது. அம்பாள் மனம் குளிரவேண்டாமா?

* 235 *चतुष्षष्ट्युपचाराढ्या -  சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா -  
அம்பாள்  64 உபச்சாரங்களோடு வழிபடவேண்டியவள்.

* 236*चतुष्षष्टिकलामयी -  சதுஷ்ஷஷ்டி கலாமயீ -  
அறுபத்துநான்கு என்பது ஒரு விசேஷ எண். அம்பாள் ஸ்ரீ லலிதை  64 வித  தந்த்ர சாஸ்திரம் சொல்லும் கலைகளின்  ரூபம் கொண்டவள்.  பஞ்சதசி சொல்லும் மந்திரங்களில் இந்த  கலைகள் பற்றியும் வரும். அடிக்கடி  64  கலைஞானம் என்கிறேனே . அவை என்ன என்று தெரியவேண்டாமா?

64  கலைகள் என்னவா?  அது இவை தான். 1 கீதம், 2. வாத்தியம், 3  நிருத்யம்,  4. நாட்யம், 5. ஆலேக்யம் .6.விசேஷக சேத்யம். 7. தண்டூல குஸும பலிவிகாரா,8,  புஷ்பாஸ்தரணம்  9. தசாநா வாசனங்காரகா-கர்மா, 10. மணி பூமிகா கர்மா, 11 சயன ரசனம் 12.  உதக வாத்யம்  13  உதக கடம் , 14. சித்ர யோகா,  15. மால்ய கிரந்தன விகல்பா, 16, கேஸாசேகரா பீடயோஜனம்  17 நேபத்ய  யோகா   18. கர்ண பத்ர 
பங்கா 19. கந்தயுக்தி 20. பூஷணயோஜனம்  21. இந்த்ரஜாலம் 22 கௌசுமாரா யோகம்  23 ஹஸ்த
லாகவம்  24 சித்ர சாகாபூப பக்ஷ்ய விகார க்ரியா 25.  பானகர சராகாசவ யோஜனம்  
 26. சூசி வாபகர்மா 27.வீணா டமருக சூத்ர கிரீடா, 28. ப்ரஹெலிகா 29.ப்ரதிமா 30. துர்வசகயோகா 31. புஸ்தகவாசனம்  32 நாடகாக்யாயிக தர்சனம் 33 காவ்ய ஸமஸ்யாபுராணம்.  34 பட்டிகாவேத்ர பாண  விகல்பா 35 தர்க்கு கர்மாணி  36 தக்ஷணம், 37. வாஸ்து வித்யா,  38 ரூப்ய ரத்ன பரிக்ஷா 39 தாது வாதம் 40 மணிராக ஞானம்  41 ஆகார ஞானம் 42 வ்ருக்ஸாயுர்வேத  யோகம்  43 மேஸ குக்குட லாவக யுத்தவிதி . 44  சுகசாரிக ப்ரலாபனம்  45 உத்ஸாடனம்  46 கேச மார்ஜன கௌசலம் 47 அக்ஷர முஷ்டிகாக தனம் 48 ம்லேச்சிதக விகல்பா.  49 தேசபாஷா ஞானம் 50. புஷ்ப சகதிகா நிமித்த ஞானம் 51 யந்த்ரமாத்ரிகா  52  தாரண மாத்ரிகா  53 சம்பாத்தியம் 54 மானசி காவ்ய க்ரியா 55  க்ரியா விகல்பா  56  சலிதகயோகம் .  57 அபிதான கோசச்சந்தோ  ஞானம்.  
58. வஸ்திர கோப னானி.
 59. த்யுத விசேஷம் 60. ஆகர்ஷண கிரீடா  61. பாலகிரீடன கானி  62. வைணாயி கினாம் வித்யானாம் நானம்  63.வைஜயகீனாம்  64 வித்யானாம்  ஞானம்.

ஒரு விஷயம். இந்த  64ம்  ஆளுக்கு ஆள்  மாறுகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும்.  தமிழில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்  என்று கம்பர் சொல்லும்போது அந்த 64   கொஞ்சம் வேறுபடும்,  
உதாரணமாக  பிள்ளையாருக்கே  தமிழ் மாநிலத்தில்  இருக்கும் பெயர்  வடக்கே  வேறே மாதிரி இல்லையா?

* 237 *  महाचतुष्षष्टिकोटियोगिनीगणसेविता - மஹாசதுஷ்ஷஷ்டி கோடி கண சேவிதா -
 ஒருவரிருவர் அல்ல.  64 கோடி யோகினி கணங்கள் ஒன்பது விதமான சக்ரங்களில் அம்பாளை வழிபடுகிறார்கள்.  ஸ்ரீ சக்ரத்தில் எட்டு  மாத்ருகா தேவிகள், அஷ்ட மாதா என்று  பெயர்.  ப்ராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி,  வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா,  மஹாலக்ஷ்மி என்று நாமங்கள் அவர்களுக்கு. இந்த எட்டு பேருக்கும்  எட்டு உதவியாளர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு கோடி  யோகினிகள்.  இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை அனுகிரஹிக்க அம்பாளின்   அஎட்டு ஆவரண  அர்ரேஞ்ஜ்மென்ட் இது. ஒன்பாவது ஆவரணத்தை லலிதாம்பிகையே  நேரடியாக  நிர்வகிக்கிறாள்.

இன்று  ஒரு  சக்தி ஆலயம்      வைஷ்ணவ தேவி    ஜம்மு காஷ்மீர்

மாதா வைஷ்ணோ  தேவி , மாதா ராணி , வைஷ்ணவி என்று பல பெயர்கள்  அம்பாளுக்கு.   அம்பாள் சக்தி ஸ்வரூபிணி. புனிதமான இந்து சமய பெண் தெய்வம்.  வைஷ்ணோ  தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புண்ய ஸ்தலம்.  வடக்கே  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோதேவி   என்ற பெயர் கொண்ட  மலையில் அமைந்துள்ளது. வட இந்திய  சக்தி உபாசகர்கள், தேவி பக்தர்கள்  நாடும் உன்னத வழிபாட்டுஸ்தலம்.  5200 அடி உயரம், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கி.மீ  (7.45 மைல்கள்),  வருஷம் தப்பாமல் குறைந்தது  எட்டு லக்ஷம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அருள் தேடி வந்து காணிக்கை செலுத்துகிறார்கள். 

 திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக பக்தர்கள் வருவது இந்த கோவிலுக்கு தான் என்று சொல்கிறார்கள் என்கிறார் யோசித்துப் பாருங்கள்.  எவ்வளவு கரடு முரடான இடமாக  இருந்தாலும்  மனதில் பக்தி மேலிட்டுவிட்டால் மற்றது எதுவும் ஸ்ரமாகவே  தோன்றாது.  ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் டிரஸ்ட்  ஸ்ரத்தையாக  பராமரித்து வருகிறது. 

உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை செல்ல ரயில் ஓடுகிறது. பணம் உள்ளவர்கள்  ஜம்மு விமான நிலையம் வரை பறந்து அங்கிருந்து ஏதாவது வாகனத்தில் இந்த ஆலயம் வரலாம்.

திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமிக்கு  பாரம் சேர்ந்துவிட்டதால் முப்பெரும் தேவிகள் , ரமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி)  வைஷ்ணவ  தேவியை உருவாக்கினர்கள்.  ஒளிபிராகாச  வடிவத்தில்  வைஷ்ணவ தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணோ  தேவி பூமியில் வசிக்க   மானுட அவதாரம் எடுத்தாள்.   தெற்கே  ஒரு  பக்தர் குடும்பத்தில் பிள்ளை பாக்யம் இல்லாத  ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதிய ருக்கு பெண்ணாக  வைஷ்ணோ  பிறந்தாள் . திரிகுடா என  பெயர்.  ரத்னாகர் தீவிர  விஷ்ணு பக்தர். அவளுக்கு  வைஷ்ணவி என்று பெயர்   சூட்டினார்.  9 வயது நிரம்பியதும்,  அம்பாள் அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள அப்பாவிடம்  அனுமதி கேட்டார். ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.

திரிகுடா மிகவும் புகழ்பெற்ற  அம்பாள்  வைஷ்ணோ  தேவியாக மாறி என்றும்  நித்ய  ஸத்யமாக  நிலைத்திருப்பார் என  ஆசிர்வதித்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...