Thursday, January 24, 2019

MORAL STORY

நீ நல்லவனா கெட்டவனா? J.K. SIVAN

இரும்புத் துண்டோ ஊசியோ, சிறிது நேரம் காந்தத்தின் அருகில் இருந்தால் போதும். அதற்கும் காந்த சக்தி வந்துவிடும். கொதிக்கும் நீரை பனிக்கட்டியின் மேல் ஊற்றினால் பனி உருகி ரெண்டுமே சாதாரண குளிர் நீராகிறது. ரசவாத மந்திரக்கல் எதன் மேல் பட்டாலும் அந்த வஸ்து பொன்னாகும். அழுகிய ஒரு பழம் இருந்தால் போதும் கூடையில் அத்தனை பழமும் அழுக ஆரம்பிக்கும். இந்த உதாரணங்கள் எதற்கு தெரியுமா?

ஆங்கிலத்தில் சொல்வார்களே உன் நண்பனை காட்டு நீ யார் என்று சொல்கிறேன் என்று, அது வாஸ்தவமானது. கூட்டத்தில் ஒரு நல்லவன் இருந்தால் அனைவரும் நல்லவர்களாக சான்ஸ் உண்டு. அதே சமயம் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு மோர் சேர்ந்தால் போதும். அத்தனை பாலும் தயாராகிறது அல்லவா ? அப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு சமூகத்தில் உண்டு. சத்சங்கம் என்பது நல்ல சேர்க்கை. துஷ்ட சகவாசம் ரெண்டாம் ரகம். நல்லவர்களையே கெட்டவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.

ரெண்டு பேர் கொஞ்சநாள் சேர்ந்திருந்தால் ரெண்டு பேர் குணமும் ஒன்றாகவே இருக்க முடிகிறதே. ரெண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள் ஆகின்றனர்.

இதற்கு மூல காரணம் ஒருவன் விடும் மூச்சு. பிராணன். அது ஒருவன் மற்றொருவனிடம், மிருகத்தினிடம், பறவையிடம் பரிமாறிக்கொள்ளும்போது ரெண்டு ப்ராணன்களும் ஒன்று சேர்கிறது. இடைவெளியில் இருக்கும் ஈதர் என்பது உள்ளே இருக்கும் இரண்டு ப்ராணன்களுக்குள்ளும் பிரதிபலிக்கும் உணர்வுகளை ஒன்று சேர்க்கிறது. மஞ்சளும் நீலமும் ஒன்று சேர்ந்து பச்சையாகிறது. மஞ்சள் கறுப்போடு சேரும்போது ப்ரௌனாக மாறுகிறது. இதை எல்லாம் நன்கு அறிந்து தான் நமது முன்னோர் நல்ல சகவாசம் வேண்டும் என்று கவனமாக இருந்தார்கள். கண்டவர்களோடு சேர சேர்ந்து விளையாட கூட அனுமதிக்கவில்லை. சத் சங்கம் என்பது இது தான்.

மந்தரையின் சேர்க்கை விடாது இருந்ததால் கைகேயி என்ற உத்தம பெண்ணின் குணம் மந்தரையின் குணமாக சுலபத்தில் மாறியது. தசரதனையும் உலுக்கியது. ராமன் காட்டுக்கு போனான். சில ரிஷிகள் ஆயுர்வேத தவ வலிமையால் வயதற்று வாழ்ந்தனர். ஒரு சமயம் தாம் இருக்கும் இடம் விட்டு மலைமீதிலிருந்து இறங்கி நதியோரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தனர். அங்குள்ள அண்டை அசல் மக்கள் கூட பழகியதில் அவர்களும் மற்றவர்கள் போல் வயதானவர்களானார்கள் என்று ஒரு கதை உண்டு.

இதேபோல் நல்ல சகவாசத்தால் ஒருமனிதன் உயர்ந்த மெச்சத்தகுந்த குணத்தைப் பெறுவதும் நிகழ்கிறது. ராமன் கால் பட்டதுமே கல்லாயிருந்த அஹல்யா ரிஷி பத்னியாக மீண்டும் மாறினாள். அர்ஜுனன் கீதா ஞானம் பெற்றது கிருஷ்ணனோடு பழகியதால்.

அசத்தியம், அ -சத் விஷயங்கள் நிரம்பியவர்களின் சகவாசம் உடல் உள்ளம் ரெண்டையுமே பாதிக்கும். அழிவுக்கு அழைத்து போகும். சத்சங்கம் என்றால் தாடி மீசை காவி ஜடை கொண்டவர்கள் நட்பு என்று கொள்ளக்கூடாது. வேதங்களை மந்த்ரங்களை கேட்பது, தூய எண்ணங்களை அள்ளித்தரும் நிகழ்ச்சிகளை நாடுவது கூடத்தான். நல்ல புத்தகங்களை படிப்பதும் அவற்றில் சிந்தனை கொள்வதும் சத் சங்கம் தான். சான்றோர் சகவாசத்தால் உள்ளே ஒரு பாசிடிவ் விளைவு ஆத்மாவில் தோன்றும்.

தாயே எனக்கு நல்லோர் நட்பு கிடைக்க அருள் செய் என்று வேண்டுகிறோம். இருளி லிருந்து ஒளிமயத்துக்கு அழைத்துபோ என்கிறோம் . நாம் எப்படிப்பட்டவர்கள் சத்சங்கம் பக்கமா எதிர்மறையா என்று நமது செயல்கள் விளக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுகிறோம், ஆத்ம விஷயங்களில் நேரம் செல்கிறது, த்யானம் , ஜபம், செய்கிறோம்.

போதை, குடி, நாக்கின் ருசிக்கு அடிமை -- இதனால் ''பார்ட்டிகள்'' சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவதில்லை, தேடிப்போகிறோமா என்று கவனித்தால் விடை கிடைக்கும். மற்றவர் யாரும் உன்னைப்பார்த்து நீ நல்லவன் என்று சொல்ல எதிர்பார்க்க வேண்டாம். உன்னையே நீ எண்ணிப்பார் இது தான்.
''நமக்குள்ளே ரெண்டு ஓநாய்கள் உள்ளன என்று சொல்கிறாயே என்ன தாத்தா அது? உண்மையிலேயே அந்த ரெண்டும் நமக்குள்ளே இருக்கா?

''ஆமாடா பேராண்டி, ரெண்டுக்கும் எப்போதும் கொலை சண்டை நடக்கிறது. எப்போதும் தான். முதல் ஓநாய் ரொம்ப மோசமானது. அது தான் கோவம், பொறாமை, பேராசை துக்கம், திமிர், அழுத்தம், பொய் எல்லாம் உண்டாக்குகிறது. மனதை இதால் நிரப்புகிறது. ரெண்டாவது இருக்கிறது பார், அது சாது, நல்லது. நம்பிக்கை, அமைதி, அன்பு, சந்தோஷம், உண்மை, தான தர்ம தாராளம், இதெல்லாம் உண்டாக்கி மனதையும் இதயத்தையும் நிரப்புகிறது. ஆனால் ரெண்டுக்கு சண்டை. நான் தான் நிரப்புவேன் என்று. ''

''எது தாத்தா ஜெயிக்கும்?''
''நீ எதுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கிறாயோ அது''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...