Thursday, January 17, 2019




கிருஷ்ண கர்ணாம்ருதம் J.K. SIVAN
லீலா சுகர்

4 ஆடலும் பாடலும் ஆனந்த கண்ணனோடு...
कमनीय किशोर मुग्ध मूर्तेः
कल वेणु क्वणित आदृत आनन इन्दोः
मम वाचि विजृम्भताः
मुरारेः मधुरिम्णः कणिक अपि कापि कापि 1.7

kamanīya kiśora mugdha mūrteḥ
kala veṇu kvaṇitaādṛta ānana indoḥ
mama vāci vijṛmbhatāḥ
murāreḥ madhurimṇaḥ kaṇika api kāpi kāpi

கமனீய கிஷோர முக்த மூர்த்தே,
கலவேணு க்வணீதாத்ருதான நேந்தோ
மமவாசி விஜ்ரும்பதாம்
முராரே மதுரிம்ண க்வணிகாபி காபி காபி

கண்ணனை ஒருமுறை பார்த்தால் கண்ணை அவன் மீதிருந்து மீண்டும் எடுக்க முடியாது. எல்லோரும் தேடும் அவ்வளவு கவர்ச்சியான கம்பீர சிங்கக்குட்டி அவன். ஆஹா என்ன அழகான காந்த சக்தி கொண்ட கருணை ஒளி வீசும் தேனில் தோய்ந்த சந்த்ரோதய தாமரை முகத்தில் விவரிக்க இயலாத அபூர்வ கண்கள். அவன் வைத்திருக்கும் வம்ஸி என்ற புல்லாங்குழல் அவனுக்கேற்றவாறே புகழ் வாய்ந்ததாக இருக்கிறதே. எப்படி தான் அதிலிருந்து நெஞ்சை அள்ளும் கொஞ்சும் இசையமுதம் ஊற்றாக பெருகுகிறதோ? அதை எப்படி எந்த வார்த்தையால் எழுதுவேன். அந்த இன்ப நாதத்தின் ஒரு சொட்டு, ஒரு துளி, யாவது என் நாவில் விழுந்தால் கொஞ்சம் விவரித்து சொல்ல முயற்சிப்பேன். அல்லது எழுத முயல்வேன். அதற்கு தானே காலமெல்லாம்
காத்திருக்கிறேன்.

1.8 मदशिखण्डिशिखण्डविभूषणं
मदनमन्थरमुग्धमुखांबुजम् ।
व्रजवधूनयनाञ्जनरञ्जितं
विजयतां मम वाङ्मयजीवितम् ॥ १.८॥

Madha shikhandi shikhanda vibhooshanam,
Madana mandha mugdha mukhambujam,
Vraja vadhoo nayananchala vanchitham,
Vijayatham mama vang maya jevitham. 1-8

மத³ஶிக²ண்டி³ஶிக²ண்ட³விபூ⁴ஷணம்
மத³நமந்த²ரமுக்³த⁴முகா²ம்பு³ஜம் ।
வ்ரஜவதூ⁴நயநாஞ்ஜநரஞ்ஜிதம்
விஜயதாம் மம வாங்மயஜீவிதம் ॥ 1.8॥

ஒரு பட்டி மன்றமே நடத்தி விடலாம் போல் இருக்கிறதே. கண்ணன் அழகு அவன் முகத்திலா அல்லது அவன் அணிந்திருக்கும் மயில் பீலி யாலா? . நிச்சயம் நடுவர் திணறி ரெண்டினாலும் தான் அதிலும் அழகுக்கு அழகு செய்வது மயில் பீலியினால் தான் என்று கூறிவிடுவார். ஒரு திடகாத்திரமான அழகுமயில் ஒன்று தனது சிறந்த மயில் பீலியை அவனுக்கு தந்திருக்கிறது. அப்படிப்பட்டவனை வ்ரஜ பூமியில் வாழும் கோபியர் கண் வீச்சு சிறை பிடித்துவிட்டதே. இவ்வளவு சௌந்தர்யம் படைத்த கண்ணன் அருள் சற்றே என் பக்கம் திரும்பினால்.... என் இந்த படைப்பு, என் எழுத்தும், உயிர் மூச்சு பெறுமே! என்று வியந்து வேண்டுகிறார் லீலா சுகர்.

1.9 पल्लवारुणपाणिपङ्कजसङ्गिवेणुरवाकुलं
फुल्लपाटलपाटलीपरिवादिपादसरोरुहम् ।
उल्लसन्मधुराधरद्युतिमञ्जरीसरसाननं
वल्लवीकुचकुम्भकुङ्कुमपङ्किलं प्रभुमाश्रये ॥ १.९॥

Pallavaruna pani pankaja sangi venu rava kulam.
Phulla patala patalee pari vadhi pada saroruham,
Ulla sanmadhuraa dhara dhyuthi manjari sarasaananam,
Vallavee kucha kumbha kunkuma pangilam prabhumasraye. 1-9

பல்லவாருணபாணிபங்கஜஸங்கி³வேணுரவாகுலம்
பு²ல்லபாடலபாடலீபரிவாதி³பாத³ஸரோருஹம் ।
உல்லஸந்மது⁴ராத⁴ரத்³யுதிமஞ்ஜரீஸரஸாநநம்
வல்லவீகுசகும்ப⁴குங்குமபங்கிலம் ப்ரபு⁴மாஶ்ரயே ॥ 1.9॥
இந்த கண்ணன் இருக்கிறானே அவன் கோபியர் புடை சூழ அல்லவோ காணப்படுகிறான். அவர்கள் அவனை ஆசையாக பாசமாக அணைக்கும்போது அவர்கலந்து குங்குமம் எல்லாம் அவன் உடல் பூரா இளம் சிவப்பாகி விடுகிறது. அவனது இளந்தளிர் கரங்களில் அழகிய புல்லாங்குழல், அதுவும் சிவப்பாகி, அவன் தாமரை மலர்ப்பதங்களின் நிறம் பெற்றுவிடுகிறது. அவன் முகம் கேட்கவே வேண்டாம். அன்றலர்ந்த விரிந்த தாமரை மலர். அந்த உதடுகள், தாமரையின் இதழ்கள். ம்ருதுவானவை. இதனால் அனைத்து கோபியர்கள் நெற்றி சிந்தூர திலகங்களும் கலைந்து காணப்படுகிறதே. சிவப்பும் கருத்துமாக அற்புதமாக காட்சி அளிக்கிறான் கிருஷ்ணன்.

1.10 अपाङ्गरेखाभिरभङ्गुराभि
रनङ्गलीलारसरञ्जिताभिः ।
अनुक्षणं वल्लवसुन्दरीभि
रभ्यर्चमानं विभुमाश्रयामः ॥ १.१०॥

.Apanga rekhabhi rapangaraabhi,
Rananga leelaa rasa ranjithabhi,
Anukshanam vallava sundareebhi,
Rabhyarchya maanam vibhumasrayama. 1-10

அபாங்க³ரேகா²பி⁴ரப⁴ங்கு³ராபி⁴
ரநங்க³லீலாரஸரஞ்ஜிதாபி:⁴ ।
அநுக்ஷணம் வல்லவஸுந்த³ரீபி⁴
ரப்⁴யர்சமாநம் விபு⁴மாஶ்ரயாம: ॥ 1.10॥

எந்த கோவிலுக்கும் அந்த கோபியர்கள் செல்லவில்லை. தெய்வமே அவர்கள் எதிரில் அவர்களோடு கூடிக் குலாவுகிறதே. அவர்கள் பரிபூர்ண பக்தியோடு பாசத்தோடு தெய்வத்தை குழந்தையாக, கண்ணனெனும் குழந்தையை தெய்வமாக வழிபட்டார்கள். அவர்கள் இந்த தெய்வத்திற்கு அர்ச்சித்த மலர்கள் என்ன தெரியுமா. அவர்களின் கண்களில் இருந்த அன்பும் அளவற்ற பாசமும் அன்பும். இதைத்தான் அன்பு மலர்கள் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது. இன்று தான் அர்த்தம் புரிகிறது. அவர்கள் ''தான்''என்பதையே மறந்து அவர்களே கிருஷ்ணனாகி விட்டார்களே. எப்படியா? அவன் எங்கும் எதுவுமானான் என்று சொல்லும்போது? கோபியர்களும் அவனே, அவனே கோபியர்கள்.


हृदये मम हृद्यविभ्रमाणां
हृदयं हर्षविशाललोलनेत्रम् ।
तरुणं व्रजबालसुन्दरीणां
तरलं किञ्चन धाम सन्निधत्ताम् ॥ १.११॥

Hrudhaye mama hrudhya vibhramaanaam,
Hrudayam harsha visaala lola nethram,
Tharunam vruja bala sundareenaam,
Tharalam kinchana dhama sannidathaam. 1-11

ஹ்ருʼத³யே மம ஹ்ருʼத்³யவிப்⁴ரமாணாம்
ஹ்ருʼத³யம் ஹர்ஷவிஶாலலோலநேத்ரம் ।
தருணம் வ்ரஜபா³லஸுந்த³ரீணாம்
தரலம் கிஞ்சந தா⁴ம ஸந்நித⁴த்தாம் ॥ 1.11॥

ஒன்று கலந்த இதயங்கள் அங்கே உறவாடிக்கொண்டிருக்கிறது. பரிபூர்ண பாசம் நேசம் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது. மானும் மயிலும் இதை கண்டு கழிக்கிறது. அவனது புல்லாங்குழல் அதற்கு சினிமாவில் பின்னணி போல் இன்பமூட்டுகிறது. கண்கள் கூடை பேச்சு பேசுகின்றன. எல்லார் பேச்சும் ஒரே மாதிரிதான். கிருஷ்ணா கிருஷ்ணா என்ற ஒரே சப்தம் தான். இப்போது தான் ஊத்துக்காடு ''குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட'' என்று பாடியதின் அர்த்தம் புரிகிறது. உள்ளும் புறமும் சந்தோஷம், காலத்தை வென்ற களிப்பு கோபியர்களிடம் காண்கிறது. அவர்கள் ஆடுவதிலும் பாடுவதிலும் அது வெளிப்படுகிறது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...