Thursday, January 10, 2019

ADHI SANKARAR



ஆதி சங்கரர்      J.K. SIVAN
சுப்ரமணிய புஜங்கம்.  6

         
            சுகம் தரும் சுப்பிரமணியன் திருநீறு 

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரங்கள் 33. அவற்றை ஆறு பிரிவாக பிரித்து எளிய முறையில் நான் புரிந்து கொண்ட வரை, தமிழில், அந்த ஆறுமுகனுக்கு சமர்ப்பிக்க  எண்ணி ஒருவாறு நிறைவு செயகிறேன்.

ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர். சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன்.

விறகு கட்டையை அக்னி பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.  திரு நீறு    எனும்  விபூதிபஸ்மம் , சாம்பல்,  நமது கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது.  விபூதி என்றால் வற்றாத செல்வம்,  ஐச்வர்யம். .

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போய்  சுத்த வெளுப்பாகும். அப்புறம்  எவ்வளவு நேரம்  தீயில் போட்டாலும்  மாறாது.  இப்படி முடிவில்லாமல்  நீற்றுப்போனதே திருநீறு. பஸ்மம்.   ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும், எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம்   சிவன்,  அவர் நெற்றுக்கண் தீப்பொறியிலிருந்து உருவானவர்  ஷண்முகன், கார்த்திகேயன்.  பாவம் நியூட்டன், எல்லா வர்ணங்களையும் கலந்து சுற்றினால் கிடைப்பது வெள்ளை என்றான்.  ரிஷிகள் பல யுகங்கள் முன்பே சகல மாயாஜாலங்கள், வர்ணங்கள் கடந்தது ப்ரம்மஞானம், ப்ராணவாகாரம், சுப்ரமணியம் என்று எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்கள். ஞானம் என்னும் தீ மூண்டபிசுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார். விபூதியைத் தேகம் முழுவதும்  தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும்  பெறலாம்.

இனி சுப்ரமணிய புஜங்கம் ஸ்லோகங்களின் இறுதி  பிரிவை அறிவோம்..

27.  मुनीनामुताहो नृणां भक्तिभाजां                                                                                 अभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।                                                                                         नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥२७॥

Muniinaam-Utaaho Nrnnaam Bhaktibhaajaam
Abhiisstta-Pradaah Santi Sarvatra Devaah |
Nrnnaam-Antya-Jaanaam-Api Sva-Artha-Daane
Guhaad-Devam-Anyam Na Jaane Na Jaane ||27||

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

 சுப்ரமணியா, ஞானத்தின் சிகரம் என்பதால் தானே உன்னை யோகிகளும், ஞானிகளும் முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் தவமிருந்து வேண்டுகிறார்கள். தேவர்களைக் காக்கும் தேவசேனாபதியாக உன்னை வழிபடுகிறார்கள். வேண்டும் வரங்களை வாரித்தர பன்னிரண்டு கரங்கள் கொண்டவன் நீ ஒருவன் தானே.  குலம் கோத்ரம் ஒன்றும் தேவையில்லாமல் மனதில் பக்தி ஒன்றே பிரதானம் என்று அருளும் ஞானகுரு அல்லவா நீ. மனகுகையில் வீற்றிருளப்பதால் தானே  குரு குஹன். உன்னையன்றி நான் வேறெவரையும் அறியேனே.

28.  कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारि गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥२८॥

Kalatram Sutaa Bandhu-Vargah Pashurvaa
Naro Va-Atha Naari Grhe Ye Madiiyaah |
Yajanto Namantah Stuvanto Bhavantam
Smarantash-Ca Te Santu Sarve Kumaara ||28||

களத்ரம் ஸதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நா க்ருEஹு யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தா நீ ஒருவனே. பக்தர்கள் குறை கேட்கவென்றே பன்னிரு செவி கொண்டவனே. இதில் நீ உன் மாமனை மிஞ்சுபவன். அதனால் அல்லவோ  மால் மருகோனே என்று அருணகிரியும் பாடினார். உற்றாரும் மாற்றாரும்எந்நேரமும் உன் நினைவில் ஆடி ஆனந்தமாக பாடி உன்னருள் பெற நீயே அருளவேண்டும்.

29.  मृगाः पक्षिणो दंशका ये च दुष्टाः
तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशौल ॥२९॥

Mrgaah Pakssinno Damshakaa Ye Ca Dussttaah
Tathaa Vyaadhayo Baadhakaa Ye Mad-Angge |
Bhavac-Chakti-Tiikssnna-Agra-Bhinnaah Suduure
Vinashyantu Te Cuurnnita-Krauncha shailaa  ||29||

ம்ருகா பக்ஷணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸதூரே
வநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

ஹே  சுப்ரமணியா ,  எவராலும் அசைக்கமுடியாத  கிரவுஞ்ச மலையில் கூறாக பிளந்தவனே. உன் கூர்வேல் ஒன்றே ஆயுதம், அது ஒன்றே பிணி தீர்க்கும் உபாயம் அதைப் பிரயோகித்து, என் உடல் உபாதைகளை தீர்ப்பாய், மனிதன் பறவை, விலங்கு,புழு பூச்சி, எல்லா உயிர்களும் பிணியின்றி, நோயின்றி, வாழ உன் வேலாயுதத்தை செலுத்தி பிணியகற்றி, வலியகற்றி , துன்பமகற்றி  காத்திடுவாய்  குமரா

30.  जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥३०॥

Janitrii Pitaa Ca Sva-Putra-Aparaadham
Sahete Na Kim Deva-Sena-Adhinaatha |
Aham Ca-Ati-Baalo Bhavaan Loka-Taatah
Kssama-Sva-Aparaadham Samastam Mahe[a-Ii]sha ||30||

ஜநித் பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத
அஹும் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபாரதம் ஸமஸ்தம் மஹுச (30)

சேய்  செய்த பிழைகளை தாய் பொறுப்பதில்லையா. தேவசேனாபதியே, நான் ஒரு சிறுவன், சக்தியில்லாதவன். உன் குழந்தை,  நீ  தகப்பன் சுவாமி. என் தவறுகளை பொருட்படுத்தாமல் மன்னித்தருள்வாய்.  பகைவனுக்கும் அருள் செய்யும் பகவானே.

31.  नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥३१॥

Namah Kekine Shaktaye Ca-Api Tubhyam
Namash-Chaaga Tubhyam Namah Kukkuttaaya |
Namah Sindhave Sindhu-Deshaaya Tubhyam
Punah Skanda-Muurte Namaste Namostu ||31||

நம கேகினே சத்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)

வேதத்தின் உட்பொருளே, மாமயில் மீதேறி வந்து துயர் துடைக்கும் முருகா, அல்லல் தீர்க்கும் ஆறுமுகம், அஞ்சேல் என வேல் கொண்டு காக்கும் ஆறுமுகா , உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சக்தி வேலாயுதா, நின்னையே சரணடைந்தேன். சேவலும் மயிலும் கொண்டு ஆணவமலம், கர்மமலம், போக்கும் ஸ்கந்தா, செந்தில்நாதா,  மீண்டும் மீண்டும் உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

32.  जयानन्दभूमञ्जयापारधामन्
जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥३२॥

Jaya-[A]ananda-Bhuuman.-Jaya-Apaara-Dhaaman
Jaya-Amogha-Kiirte Jaya-[A]ananda-Muurte |
Jaya-[A]ananda-Sindho Jaya-Ashessa-Bandho
Jaya Tvam Sadaa Mukti-Daane[a-Ii]sha-Suuno ||32||

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸJனோ (32)

ஆனந்தமளிப்பவனே, ஞானஒளியே, சர்வமும் நீ என்று சரணடைந்தேன் சரவணா, கருணைக்கடலான கந்தா, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா, வெற்றி வேல் வீரவேல் என்று உன்னை பாடி வரும் பக்தர் திருக்குழாம்  வேண்டுகிறோம். தோன்றாத்துணைவா. அரோஹரா, அரோஹரா.

33.  भुजङ्गाख्यवृत्तेन क्ऌप्तं स्तवं यः
पठेद्भक्तियुक्तो गुहं संप्रणम्य ।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायुः
लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥३३॥

Bhujangga-[A]akhya-Vrttena Klptam Stavam Yah
Patthed-Bhakti-Yukto Guham Samprannamya |
Sa Putraan-Kalatram Dhanam Diirgham-Aayuh
Labhet-Skanda-Aaayujyam-Ante Narah Sah ||33||

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹ

ம் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)

ஆதி சங்கரரின்  அனுபவத்தை சொல்கிறேன்.'' பக்தர்களே, எவனொருவன் இந்த 33 சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரங்களை மனம் முழுமையோடு ஈடுபட்டு தினமும் வேண்டுகிறானோ,அவனுக்கு சர்வ மங்கலானி பவந்து. நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், வளமும், சாயுஜ்யமும்  கிடைக்கும்.

வால்மீகி, ராமாயணத்தில்,  பாலகாண்டத்தில் , விஸ்வாமித்ரர் ராமனுக்கு உபதேசம் செய்யும் போது சொல்லும் ஒரு வாசகம்:

 ‘ராமா, உனக்கு  குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷ்யன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்திர சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்’ என்கிறார். (பாலகாண்டம் – 37வது ஸர்க்கம்: சுலோ: 31-32) .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...