Wednesday, January 16, 2019

KRISHNA KARNAMRUTHAM


கிருஷ்ண கர்ணாம்ருதம்  J.K. SIVAN 
லீலா சுகர்

                                       

  3 கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லி......

லீலா சுகர் எனும் பில்வமங்கள் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதம், சரியான பெயரைக் கொண்ட ஒரு பாடல் திரட்டு என்று சொல்வதை விட திரட்டுப் பால் என்று சொல்லலாம் போல் இருக்கிறது.

चातुर्य एक निदान सीम चपल अपाङ्ग च्छटा मन्थरम्
लावण्यामृत वीचि लोलित दृशम् लक्ष्मी कटाक्ष आदृतम्
कालिन्दी पुलिन अङ्गण प्रणयिनं काम अवतार अङ्कुरम्
बालम् नीलम् अमी वयम् मधुरिम स्वाराज्यम् आराध्नुमः

cāturyaikanidhānasīmacapalāpāṅgacchaṭāmantharam
lāvaṇyāmṛtavīcilālitadṛśaṁ lakṣmīkaṭākṣādṛtam |
kālindīpulināṅgaṇapraṇayinaṅkāmāvatārāṅkuram
bālam nīlamamī vayam madhurimasvārājyamārādhnumaḥ || 1-3

சாதுர்யைகநிதா⁴நஸீமசபலாঽபாங்க³ச்ச²டாமந்த³ரம்
லாவண்யாம்ருʼதவீசிலாலிதத்³ருʼஶம் லக்ஷ்மீகடக்ஷாத்³ருʼதம் ।
காலிந்தீ³புலிநாங்க³ணப்ரணயிநம் காமாவதாராங்குரம்
பா³லம் நீலமமீ வயம் மது⁴ரிமஸ்வாராஜ்யமாராத்⁴நும: ॥ 1.3॥

எப்படி இவ்வளவு கொள்ளை அழகு அவனிடம்? தன்னைப் போல் மற்றொருருவர் இல்லாதவன். பக்தர்களுக்கு சாயுஜ்யம் அளிப்பவன். குழல் ஊதிக்கொண்டே அப்படி ஒரு தினுசாக திரும்பி ஒரு கோணல் பார்வை பார்த்தாலே போதும். அமிர்த மழையில் நனைந்து அந்த கோபியர்கள் அனைவருமே அவன் கண் வீச்சில் மயங்கி திக்கு முக்காடுவார்களே. எங்கெல்லாம் அவன் பார்வை படுகிறதோ அங்கெல்லாம் சுபிக்ஷம், யாரெல்லாம் அவன் கடை விழிப் பார்வையில் பட்டார்களோ அவர்கள் எப்போவோ முக்தி அடைந்தாகி விட்டது. சாதாரண சிறுவனாக அந்த சர்வஞன் யமுனை நதிக் கரையில் மற்ற சிறுவர்களோடு மணலில் நீரில் விளையாடினான். கோபியர் வீட்டில் வெண்ணையும் ஏன் அவர்கள் மனதையும் திருடியவன் அல்லவா அவன்.
இந்த கண்ணன் இருக்கிறானே  அடேயப்பா ரொம்ப சாதுர்யமிக்கவன். நாம் ஒன்றுமே பண்ணவேண்டாம். பேசாமல் அந்த நீல மணி வண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும். நம்மையே மறந்துவிடுவோம்.  அது எப்படி அவன் கண் வீச்சிலே  அவ்வளவு காந்த சக்தி.   எல்லோரையும் சுண்டி இழுக்கிறதே. அவன் கடை விழிப் பார்வையை சந்தித்தால் நமது பல ஜென்ம பாபங்கள் மடியுமே. மனதை சுண்டி இழுக்கும் பார்வை தேன் தோய்ந்தது. மஹாலக்ஷ்மி தேவியே மயங்கும் பார்வை அது. அவனா இப்படி சாதாரண பிருந்தாவன கோபியர், சிறுவர்களுடன் யமுனை நதியில் குதித்து ஆடுகிறான்.  ஆற்றின் இடையே  மணல்திட்டுகள் மேல் எவ்வளவு மோகம்.  கரையில் அழகிய பசுக்கள் கன்றுகளோடு ஓடி ஆடுகிறான். எல்லோர் இதயத்திலும் முழுமையாக வீற்றிருப்பவன் .அவனே பேரழகன். அவனுக்கு இன்னொரு பேரழகன்  மன்மதனே மகனாக ப்ரத்யும்னன் என்று  பிறந்தான்.  மதுர மான (இனிமையான)  சாம்ராஜ்ய அதிபதி.

बर्होत्तंसविलासिकुन्तलभरं माधुर्यमग्नाननं
प्रोन्मीलन्नवयौवनं प्रविलसद्वेणुप्रणादामृतम् ।
आपीनस्तनकुड्मलाभिरभितो गोपीभिराराधितं
ज्योतिश्चेतसि नश्चकास्ति जगतामेकाभिरामाद्भुतम् ॥ १.४॥

barhottamsa-vilasa-kuntala-bharam madhurya-magnananam
pronmilan-nava-yauvanam pravilasad venu-pranadamritam
apina-stana-kudmalabhir abhito gopibhir aradhitam
jyotish cetasi nash cakastu jagatam ekabhiramadbhutam

ப³ர்ஹோத்தம்ஸவிலாஸிகுந்தலப⁴ரம் மாது⁴ர்யமக்³நாநநம்
ப்ரோந்மீலந்நவயௌவநம் ப்ரவிலஸத்³வேணுப்ரணாதா³ம்ருʼதம் ।
ஆபீநஸ்தநகுட்³மலாபி⁴ரபி⁴தோ கோ³பீபி⁴ராராதி⁴தம்
ஜ்யோதிஶ்சேதஸி நஶ்சகாஸ்தி ஜக³தாமேகாபி⁴ராமாத்³பு⁴தம் ॥ 1.4॥

ஒரு நிமிஷம் என்னைப்பற்றி சிந்திக்கிறேன். இதுவரை உலக விஷயங்கள் மட்டும் தானே என்னை ஈர்த்தன. இது தானே எனக்கு சுகம் அளித்தது. பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும் தின்பண்டம் உண்மையில் விஷம் கலந்த ஒரு பக்ஷணம். என்னைக் கொல்லக்கூடியது. இதோ அதற்கு மாற்று கிடைத்து விட்டது.

இதுவரை நினைக்காத ''அவனை'' கிருஷ்ணனை,  நினைத்துவிட்டேன்? கண்ணுக்கு விருந்தானவன். எந்த விஷயமும் (விஷமும்) என்னை அணுகாது. என்னுடைய ஒரே ஈர்ப்பு இப்போது அந்த குட்டி பால கிருஷ்ணன் என்ற அந்த துக்குணியூண்டு அழகன். என் மனதை முழுதும் வியாபித்தவன் . காந்தம் போல் கவரும் தாமரை முகம், சிறிய அவன் சிரத்தில் அழகழகான மயில் இறகுகள். அசைந்தாடும் குண்டலங்கள். கருணையால் கட்டிப்போடும் காந்த பார்வை. சுண்டியிழுக்கும் அமிர்த சக்தி வாய்ந்த புன்னகை. என்னைப்போல் கோடானுகோடியரை தன் வசப் படுத்தும் அழகு திருமேனி. அம்ரிதத்தை இழை இழையாக இசையாக வெளிப்படுத்தும் புல்லாங்குழல் கானம். அன்பினால் ஆளவந்த அழகு பூபதி... பாலக்ருஷ்ணன். 


मधुर तर स्मित अमृत विमुग्ध मुख अम्बु रुहम्
मद शिखि पिङ्छि लाङ्छित मनोज्ञ कच प्रचयम्
विषय विष आमिष ग्रसन गृध्नुनि चेतसि मे
विपुल विलोचनम् किम् अपि धाम चकास्ति चिरम्

madhura tara smita amṛta vimugdha mukha ambu ruham
mada śikhi piṅchi lāṅchita manojña kaca pracayam
viṣaya viṣa āmiṣa grasana gṛdhnuni cetasi me
vipula vilocanam kim api dhāma cakāsti ciram

எப்படி அந்த தாமரை வதனத்தில் ஒரு அம்ருதமான ஆள் மயக்கும் கவர்ச்சிப் புன்னகை ! அந்த தலை அலங்காரம் யார் செய்து விட்டது? சாதாரண மயில் பீலியை வைத்து இவ்வளவு அபூர்வ கண்ணிமை கொட்டாமல் பார்க்கவைக்கும் சிகையாலங்காரமா. ஓ,  அந்த கருத்த சுருண்ட குழல் ஒரு முக்கிய காரணமோ?அதை வளைத்து சுற்றி கட்டியிருக்கும் முத்து நவரத்னமாலைகள் தம் அழகையும் சேர்த்துவிட்டனவோ? விசாலமான கண்கள் எடுப்பாக காட்டுகிறதோ? கண்கள் தான் கண்ணைக் கவர் கின்றன என்பதில் சந்தேகமில்லையே.. நான் ஒரு முட்டாள், மூடன், மதியிலி, சாதாரண உலக சாதனங்களில் மதி மயக்கம் கொள்பவன்.     அம்ருதம் கொட்டிக்கிடக்க   நானோ ஒரு  அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு க்யூவில் நிற்பவன். அடேடே சொல்ல மறந்தேன். அந்த சிறுவன் பெயர் பால கிருஷ்ணன். முக்தி அளிப்பவன்.
விசாலமான கண் உடையவன். நம்மை காப்பவன்.

मुकुलायमाननयनाम्बुजं विभोर्मुरलीनिनादमकरन्दनिर्भरम् ।
मुकुरायमाणमृदुगण्डमण्डलं मुखपङ्कजं मनसि मे विजृम्भताम् ॥ १.६॥
कमनीयकिशोरमुग्धमूर्तेः कलवेणुक्वणितादृताननेन्दोः ।
मम वाचि विजृम्भतां मुरारेर्मधुरिम्णः कणिकापि कापि कापि ॥ १.७॥

முகுலாயமான நயனாம்புஜம் விபோ 
முரளீ நிதான மகரந்த நிர்ப்பரம் 
முகுராயமாண ம்ருதுகண்ட மண்டலம் 
முக பங்கஜம் மனஸி  மே  விஜ்ரும்பதாம் 

கிருஷ்ணன் முகத்தை நேரில்  பார்க்க  நாம் கொடுத்து வைக்கவில்லை. ஆனால்  படத்தில் பார்க்கும்போது ஒருவேளை அந்த சித்திரக்காரன்  பாக்யம் பண்ணினவனோ என்று தோன்றுகிறது.  எப்படி அவ்வளவு அழகாக  அவனால் கிருஷ்ணனின் தாமரை மலர் முகத்தை, தாமரை மொட்டு போல் கண்களை, நடுவில் குண்டாக, ஓரத்தில் மெலிந்து, வெள்ளையில் மெல்லிய செவ்வரிகளோடு, கருவண்டு போல் கருப்பு விழிகளில் காந்த சக்தியை நுழைத்து அதற்கேற்ப அவனுடைய வேணுகான நாதத்தை  புல்லாங்குழலில் காட்ட முடிந்தது.
தாமரையின் மகரந்தம் வண்டுகளை ஈர்க்குமாமே, அந்த வேணு நாதம் தான் நம்மையெல்லாம் வண்டாக கிருஷ்ணன் பால் ஓட வைக்கிறதா? அதெப்படி   ரெண்டு கன்னங்களும் கண்ணாடி பளபளப்போடு மின்னுகிறது. எனக்கு சந்தேகமில்லை.  சித்திரக்காரனுக்கு  அந்த மாயாவி தரிசனம் கொடுத்திருக்கிறான். ஏன் தெரியுமா?  சித்திரக்காரன் மகிழ அல்ல.  அவன் சித்திரம் எழுதி நாம்  மகிழ.  சந்தேகமில்லை கிருஷ்ணன் தயை மிகுந்தவன் தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...